உத்தர்பங்கா சம்பாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தர்பங்கா சம்பாத்து
Uttarbanga Sambad
வகைதினசரி
வடிவம்அகலவிரி செய்தித்தாள்
உரிமையாளர்(கள்)சபியாசாச்சி தாலுக்தர்
நிறுவுனர்(கள்)சுபாசு சந்திர தாலுக்தர்
வெளியீட்டாளர்சபியாசாச்சி தாலுக்தர்
ஆசிரியர்சபியாசாச்சி தாலுக்தர்
தலைமை ஆசிரியர்சபியாசாச்சி தாலுக்தர்
பொது முகாமையாளர்பிரலே காண்டி சக்கரவர்த்தி
நிறுவியது19 மே 1980; 43 ஆண்டுகள் முன்னர் (1980-05-19)
அரசியல் சார்புநடுநிலை
மொழிவங்காள மொழி
தலைமையகம்சிலிகுரி
விற்பனை160,517 தினசரி. (as of சனவரி-சூன் 2020)தணிக்கைப் பணியகம்
RNI[1]
இணையத்தளம்uttarbangasambad.com
நாடுஇந்தியா
நகரம்சிலிகுரி, கூச் பெகர், மால்டா நகரம், அலிப்பூர்துவார், இயல்பைகுரி

உத்தர்பங்கா சம்பாத்து (Uttarbanga Sambad) என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலிருந்து வெளியிடப்படும் ஒரு வங்காள மொழி செய்தித்தாளாகும்.[1]

உத்தரபங்கா சம்பாத் 1980 ஆம் ஆண்டு மே மாதம் 19 அன்று சிலிகுரியில் ஒரு சிறிய பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. அடைந்த அதன் மிகப்பெரிய புகழ் காரணமாக 1981 ஆம் ஆண்டு முதல் வலை மறுதோன்றி அச்சகமாக நிறுவப்பட்டது. கணினிமயமாக்கப்பட்ட தட்டச்சு அமைத்தல் முறை வெளியீடு 1985 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இங்கு உயர்வேக 4-வண்ண வலை மறுதோன்றி அச்சகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உத்தர்பங்கா சம்பாத் செய்தித்தாள் இப்போது சிலிகுரி, கூச் பெகர், மால்டா நகரம், அலிப்பூர்துவார் ஆகிய நகரங்களிலிருந்து ஒரே நேரத்தில் அச்சிடப்படுகிறது. ஆசிரியர் சுகார் சந்திர தாலுக்தர் உத்தரபங்கா சம்பாத்தின் நிறுவனராவார். தற்போது இதை அவரது மகன் சபியாசாச்சி தாலுக்தர் நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RNI | Reg. No. WBBEN/2007/24656 | Name: SAMBAD AAJKER UTTARBANGA | Publication City: COOCH BEHAR | Link: http://rni.nic.in/registerdtitle_search/registeredtitle_ser.aspx

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தர்பங்கா_சம்பாத்து&oldid=3075438" இலிருந்து மீள்விக்கப்பட்டது