உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபலமான வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார். ஓர் ஆசிரியரான இவர் 1948ல் இருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஏறக்குறைய 2000 தடவைகளுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் நடத்தியிருக்கிறார். மலையகத்தில் உள்ள இராகலை என்ற இடத்தில் தனது முதலாவது வில்லிசை நிகழ்ச்சியை நடத்தி ஆரம்பித்த இவர் இலங்கைக்கு வெளியேயும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். இவர் 2003இல் காலமானார்.

கிடைத்த கெளரவங்கள்[தொகு]

  • இராகலை இலங்கைத் தொழிலாளர் கழகம் - 1965ல் சொல்லிசைச் செல்வர்
  • இந்துக் கலாச்சார அமைச்சர் 1991ல் பக்திப்பெரு விழாவில் அருட் கலைத்திலகம்
  • வடமேல் மாகாண் கலாச்சார ஒன்றியம் - பல்கலை வேந்தன்
  • இலங்கை அரச விருது - 1997ல் கலா பூஷணம்