ஈழவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈழவர்
ഈഴവര്‍
Narayana Guru.jpg
ஸ்ரீ நாராயணகுரு
மொத்த மக்கள்தொகை

7,300,000 (மலையாளி மக்கள்தொகையில் 22.91%)

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கேரளா
மொழி(கள்)
மலையாளம்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வில்லவர், பில்லவா, பூசாரி, இல்லத்துப்பிள்ளைமார்

ஈழவர் (மலையாளம்: ഈഴവര്‍) கேரளத்தின் இந்துக்களில் மிகப்பெரும் பிரிவினராக உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர். தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த திராவிட சேரர் பரம்பரையைச் சேர்ந்த வில்லவர் இனத்தோன்றல்களாக கருதப்படுகின்றனர். மலபார் பகுதிகளில் திய்யா என்றும் துளு நாட்டில் பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.[1][2][3][4] சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு[5][6] உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர்.[7][8] வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "Religion and Social Conflict in South Asia, Page 31,32". Bardwell L. Smith. BRILL Publishers (1976). பார்த்த நாள் 2008-07-29-04.
  2. "Customs, law, family system in 19th Century Malaba" (PDF). Praveena Kodoth. CDS Publishers (1997). பார்த்த நாள் 2008-07-29-04.
  3. "Nambutiris: Notes on Some of the People of Malabar". F. Fawcett, Fawsett Fred, Florence. Asian EducationalServices (2001). பார்த்த நாள் 2008-07-29-04.
  4. "Malabar Manual". William Logan. Asian Educational Services (1996). பார்த்த நாள் 2008-07-29-04.
  5. A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85
  6. Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85. Asia Publishing House, 1965. http://books.google.com/books?lr=&q=Chekon+caste. Retrieved 2007-12-28. 
  7. Social Movements and Social Transformation.Page 23. (Macmillan, 1979. http://books.google.com/books?id=tZAiAAAAMAAJ&q=Chekor+kalari&dq=Chekor+kalari&lr=&pgis=1. Retrieved 2007-12-28. 
  8. Farmers of India.Page 359. (Indian Council of Agricultural Research, 1961. http://books.google.com/books?lr=&id=4P1IAAAAMAAJ&dq=ezhava+kalari&q=%22Kalari+payal+experts+among+them%2C+a+notable+figure+being%22+&pgis=1. Retrieved 01-12-2008. 

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈழவர்&oldid=1355280" இருந்து மீள்விக்கப்பட்டது