இலங்கை குடிமைப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை குடிமைப் பணி (இது பிரபலமாக, சுருக்கமாக சிசிஎஸ் என்று அறியப்படுகிறது, Ceylon Civil Service) என்பது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலும் இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான அரசாங்கப் பணி நிலையாக இருந்தது. இது 1833 இல் நிறுவப்பட்டது, 1948 இல் இலங்கை தன்னாட்சி பெறும் வரை பல்வேறு நிலைகளில் நாட்டின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இது 1963 மே முதல் நாள் ஒழிக்கப்படும் வரை இது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிய அரச ஊழியர்களின் அதிகாரத்துவம் அல்லது செயலகமாக செயல்பட்டது. [1]

சிசிஎஸ்சின் பல பணிக்கடமைகள் இலங்கை நிர்வாக சேவை (சிஏஎஸ்) வசம் எடுக்கப்பட்டது, இது சிசிஎஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச வருவாய் அலுவலர்கள் சேவை போன்ற அனைத்து நிர்வாக குழுக்களையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. இது ஐந்து தர நிலைகளுடன் நிறுவப்பட்டது. 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அரசாங்கத்தின் முக்கிய நிர்வாக சேவையாக இருக்கும் இலங்கை நிர்வாக சேவை என பெயர் மாற்றப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த சேவையின் தோற்றம் 1798 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. காலனிகளுக்கான அரசு செயலாளர் கடலோரப் பகுதிகளின் நிர்வாகத்தில் இலங்கையின் த் தேசாதிபதிகளுக்கு உதவ பல அதிகாரிகளை நியமித்தார். 1802 இல் இலங்கையானது இங்கிலாந்து அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள காலனியாக மாறிய பிறகு, தேசாதிபதிக்கு உதவ ஒரு ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. இக் குழுவானது காலனித்துவ செயலாளர், தலைமை நீதிபதி, படைத் தளபதி மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டது. காலனித்துவ செயலாளர் மற்றும் மற்ற இரண்டு உறுப்பினர்கள் என்போர் அங்குள்ள அரசு ஊழியர்களாவர். 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டதும். அரசப் பிரதிநிதியாக சர் ஜான் டி'ஓய்லி ஆணையாளர் குழுவுடன் குடிமை ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்.

கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழு பரிந்துரைகளின்படி கரையோர மாகாணங்களின் நிர்வாகமும், கண்டி இராச்சியமும் இணைக்கப்பட்டு ஒரே நிர்வாகமாக உருவாக்கப்பட்டது. இவ்வாறு தேசாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் தீவின் நிர்வாகத்தைக் கையாள இலங்கை குடிமைப் பணி எனப்படும் நடுவண் அரசு சேவை 1833 இல் உருவாக்கப்பட்டது. கோல்ப்ரூக்-கேமரூன் ஆணைக்குழுஇன் பரிந்துரைப்படி, இலங்கையின் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவையும் இலங்கை சட்டவாக்கப் பேரவையும் உருவாக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் இலங்கை குடிமைப் பணி அதிகாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் காலனித்துவ செயலாளர் மற்றும் காலனித்துவ கருவூளதாரர் உட்பட சிசிஎஸ் அதிகாரிகள் ஆவர். ஒவ்வொரு மாகாணத்தையும் நிர்வகிப்பதற்கு மூத்த சிசிஎஸ் அதிகாரிகளிலிருந்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1931 இல் டொனமூர் அரசியலமைப்பு, சட்டவாக்க சபை மற்றும் நிறைவேற்று சபைக்கு பதிலாக இலங்கை அரசு குழு மற்றும் அதன் அமைச்சர்கள் குழுவுக்கு மாற்றப்பட்டது. தலைமைச் செயலர், கருவூலச் செயலர் மற்றும் சட்டச் செயலர் ஆகிய மூன்றுபேர் வாரியத்தின் செயலர்களாக இருந்தனர். தலைமைச் செயலாளரும், அவருக்கு முன்பிருந்த காலனித்துவச் செயலாளரும் குடிமைப் பணிகளில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், முன்னர் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பதவிகளுக்கு இலங்கையர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு சுயட்சியைக் கொண்டு வந்ததுடன் முழு அதிகாரமும் சட்டமன்ற உறுப்பினரகளுக்கு வழங்கப்பட்டு இலங்கை குடிமைப் பணியாளர்களை பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டவர்களாக்கச் செய்தது.

தரங்கள்[தொகு]

குடிமைப் பணியானது பல தரங்களைக் கொண்டது. இந்த தரங்களுக்கான நியமனங்கள் குடிமைப் பணி ஆணைக்குழுவால் செய்யப்படும் ;

  • வகுப்பு I
    • தரம் I
    • தரம் II
  • வகுப்பு II
  • கேடட்
    • தேர்ச்சி பெற்ற கேடட்கள்
    • தேர்ச்சி பெறாத கேடட்கள்
  • வகுப்பு III

முறைப்படி இலங்கை அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் சிசிஎஸ் தரத்திலானவரை தலைவராக கொண்டிருந்தது. 1948 முதல் இது கருவூலச் செயலாளரால் செயல்படுத்தப்பட்டது. துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்ற மூத்த நியமனங்கள் வகுப்பு I இன் உறுப்பினர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிரந்தரச் செயலாளர்களாக பெரும்பாலும் சிசிஎஸ்சின் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "More on the Mandarins". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_குடிமைப்_பணி&oldid=3544405" இலிருந்து மீள்விக்கப்பட்டது