இலங்கையில் பாலின பாத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் பாலின பாத்திரங்கள்
இலங்கை பெண் மற்றும் குழந்தை
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.676 (2018)
தரவரிசை100th out of 136

பாலினங்களின் பாத்திரங்கள் (Gender roles in Sri Lanka) குறித்து இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா என்ற பெண் தலைவரை தேர்ந்தெடுத்த உலகின் முதல் நாடு இலங்கையாகும். பண்டாரநாயக்காவின் கணவரும் முந்தைய இலங்கையின் அதிவருமான எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா ஒரு உளவாளியால் கொலை செய்யப்பட்ட பின்னர் 1960 ல் நடந்த தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா வெற்றி பெற்றார்.

பாலின சமத்துவ குறியீடுகளைப் பார்க்கும்போது இலங்கை ஒப்பீட்டளவில் சிறந்து விளங்குகிறது என்றாலும், இலங்கையில் பாலின சமத்துவமின்மை தொடர்பான பல அடிப்படை சிக்கல்கள் இன்னும் உள்ளன.[2]

இலங்கையில் பல பெண்கள் வேலை செய்யத் தேர்வு செய்கிறார்கள். சிலர் வீட்டில் வேலை செய்வதையும் குழந்தைகளைப் பராமரிப்பதையும் தேர்வு செய்கிறார்கள். விவசாயத்தை நம்பியுள்ள குடும்பங்களில், பெண்கள் களையெடுக்கும் பொறுப்பில் உள்ளனர். மேலும் அறுவடைக்கு உதவுகிறார்கள். ஏழைக் குடும்பங்களில், பெண்கள் உயர் வர்க்க நபர்களுக்கும் முழுநேர வேலையைச் செய்கிறார்கள். மேலும், மனிதனின் பங்கு தனது குடும்பத்தை, தனது தொழிலைக் கவனிப்பதன் மூலம் பொருள் ஆதரவை வழங்குவதாகக் கருதப்படுகிறது.

படிநிலையின் மையத்தில் குழந்தைகள் உள்ளனர், அவர்கள் சுதந்திரமாக கலந்து இரு பாலினத்தவர்களிடமிருந்தும் மிகுந்த பாசத்தைப் பெறுகிறார்கள். நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட வகுப்பினரிடையே, குழந்தைகளின் கல்வி அவர்களின் இருபதுகளின் ஆரம்பத்தில் நிறுத்தப்படுகிறது. மேலும் பெண்கள் ஆண்களுடன் கலந்து வேலை செய்யலாம் அல்லது கடந்த காலங்களில் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலைகளை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளுக்கு, அவர்கள் சிறு வயதில் வேலைக்குச் செல்கின்றனர்.

பாலின சமத்துவமின்மை[தொகு]

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை பல பாலின சமத்துவ குறியீடுகளில் சிறந்த இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்த குறியீடுகளின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கும் சில ஆதாரங்களும் உள்ளன.[3] மேலும், உலகளவில், பாலின சமத்துவ குறியீடுகளில் இலங்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[4] ஒட்டுமொத்தமாக, சமூக வரலாற்றின் இந்த முறை பெண்களை குறைத்து மதிப்பிடும் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது. இது சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பள்ளிப்படிப்புக்கு இரண்டாம் நிலை அணுகலை மட்டுமே வழங்குகிறது. இதனால் உயர் மட்ட வேலைகள் அல்லது பயிற்சியினைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. முனைவர் எலைன் எனார்சன் மேற்கொண்ட ஆய்வில், இந்த சுழற்சி அரசியலில் குறைவான பங்கேற்பு மற்றும் சமூக உரிமைகள் போன்றப் பிரச்சினையை மோசமாக்குகிறது.[5]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "உலகளாவிய பாலின இடைவெளி அட்டவணை" (PDF). World Economic Forum. pp. 10–11.
  2. "Gender Inequality Index (GII) | Human Development Reports". hdr.undp.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  3. Dijkstra, A. Geske (1 July 2006). "Towards a Fresh Start in Measuring Gender Equality: A Contribution to the Debate". Journal of Human Development 7 (2): 275–283. doi:10.1080/14649880600768660. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-9888. 
  4. "United Nations Statistics Division - Demographic and Social Statistics". unstats.un.org. Archived from the original on 8 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 9 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. ILO, Elaine Enarson, Crisis Response and Reconstruction (1 September 2000). "Gender and natural disasters". www.ilo.org. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

=

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Women of Sri Lanka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.