இரிச்சர்டு எல்லிசு கார்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிச்சர்டு எல்லிசு கார்சன்
Richard E. Carson
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்

இரிச்சர்டு எல்லிசு கார்சன் (Richard Ellis Carson) என்பவர் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஆவார். உயிர்மருத்துவப் பொறியாளரான இவர் தற்பொழுது யேல் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கம் மற்றும் உயிர்மருத்துவ உருவரைவு பேராசிரியராக உள்ளார். வளர்ப்பு விலங்கு மையத்தின் இயக்குநர், உயிர்மருத்துவப் பொறியியல் பட்டப் படிப்பு கல்லூரியின் இயக்குநர் என பல பொறுப்புகளை வகிக்கிறார்.[1] இரிச்சர்டின் ஆராய்ச்சி பாசிட்ரான் உமிழ்வு வரைவியுடன் மனிதர்கள் மற்றும் விலங்குகளை ஆய்வு செய்ய கணித நுட்பங்களைப் பயன்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது.[2]


இரிச்சர்டு கார்சன் 1977 ஆம் ஆன்டு பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணித-உயிரியலில் அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு லாசு ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பணியை முடித்தார்.[2]

2016 ஆம் ஆண்டில், கார்சனுக்கு கதிரியக்க ஆராய்ச்சி அகாடமியிலிருந்து புகழ்பெற்ற புலனாய்வாளர் விருது வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், பட மறுசீரமைப்பு, படியெடுப்பு இயக்க மாதிரியாக்க நுட்பங்கள் மற்றும் புதிய கதிரியக்க மருந்துகளுக்கான கணித மற்றும் புள்ளியியல் முறைகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு உள்ளிட்ட பாசிட்ரான் உமிழ்வு வரைவியல் அளவிடுதல் துறை பங்களிப்புகளுக்காக மின்சார மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.[3] கார்சன் 2019 ஆம் ஆண்டு முதல் மின்சார மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Richard Carson, Ph.D. | Neuroinformatics Research Group". nrg.wustl.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  2. 2.0 2.1 "Richard Carson, PhD". medicine.yale.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  3. anonymous. "Richard Carson Wins IEEE Award". Yale School of Engineering & Applied Science (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.