கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரண்டாம் புக்கா ராயன் (கி.பி. 1405 – 1406) விஜயநகரப் பேரரசின் ஐந்தாவது பேரரசனாவான். இவன் சங்கம மரபைச் சார்ந்தவன். இவன் இப் பேரரசின் மூன்றாவது அரசனான இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவான். தந்தை இறந்ததும் அரசுரிமைக்காக இவனும் போட்டியிட்டான் எனினும், விருபக்ஷ ராயனே அரியணை ஏறினான். சில மாதங்களிலேயே விருபக்ஷ ராயன் தனது சொந்த மகன்களாலேயே கொல்லப்பட இரண்டாம் புக்கா ராயன் அரசனானான். இவனும் முன்னவனைப் போலவே குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்யமுடிந்தது. முடிசூட்டிக்கொண்ட சில மாதங்களிலேயே இவனது இன்னொரு சகோதரனான முதலாம் தேவ ராயனால் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.en:Bukka Raya II es:Bukka II it:Bukka Raya II te:రెండవ బుక్క రాయలు