திருமலை தேவ ராயன்
| விஜயநகரப் பேரரசு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரவிடு மரபில் இருந்து முதன் முதலில் விஜயநகரத்து அரசனாக முடிசூட்டப்பட்டவன் திருமலை தேவ ராயன் ஆவான். இவன் அலிய ராம ராயனின் தம்பி ஆவான்.
விஜயநகரப் பேரரசின் ஆட்சியை இளவயது அரசன் சதாசிவ ராயன் சார்பில் கவனித்து வந்த ராம ராயன் தலிக்கோட்டாப் போரில் இறந்தபோது, திருமலை ராயன், பேரரசின் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு அரசனான சதாசிவ ராயனுடன் தற்கால ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெனுகொண்டாவுக்குத் தப்பி ஓடினான். அங்கிருந்தபடியே விஜயநகர அரசை மீளமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். தலிக்கோட்டாப் போரினால் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1567 ஆம் ஆண்டில் பீஜப்பூர் சுல்தானின் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. எனினும் இம் முறை சுல்தான் தோல்வியைத் தழுவினான். பேரரசின் நிலையைப் புரிந்துகொண்ட திருமலை தேவ ராயன், தென்பகுதி நாயக்கர்களின் புதிய நிலையை ஏற்றுக் கொண்டான். அவர்களும், திருமலையைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டு ஓரளவு திறை கொடுக்கவும் சம்மதித்தனர்.