பேடா வெங்கட ராயன்
| விஜயநகரப் பேரரசு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயன் (கி.பி. 1632-1642) விஜய நகரப் பேரரசை ஆண்டவன். இவன் அலிய ராமராயனின் பேரனாவான்.
திம்ம ராயன் [தொகு]
வேங்கட ராயனுக்குச் சிறிய தந்தையும், இரண்டாம் ஸ்ரீரங்காவின் சகோதரனுமான திம்ம ராயன் என்பவன் தனக்கே அரசுரிமை உண்டு கருதி வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பேடா வேங்கட ராயன், தனது சொந்த இடமான ஆனகொண்டாவிலாயே இருக்க வேண்டியதாயிற்று. செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்கள் வேங்கட ராயனுக்கே தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
எவரிடமிருந்தும் ஆதரவு கிடைக்காத போதிலும், திம்ம ராயன் குழப்பங்களை ஏற்படுத்தினான். இது அவன் 1635 ஆம் ஆண்டில் இறக்கும்வரை தொடர்ந்தது. தொடக்கத்தில் திம்மராயனின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிந்தது. அரசன் பேடா வேங்கட ராயனின் மருமகனான மூன்றாம் ஸ்ரீரங்கா களத்தில் குதித்தபோது நிலைமை மாறியது. இவன், புலிக்கட்டில் இருந்த ஒல்லாந்தரின் துணையுடன் திம்ம ராயனைத் தோற்கடித்து, அவனை வேங்கட ராயனின் ஆட்சியை ஏற்க வைத்தான். திம்மராயனின் கட்டுப்பாட்டின்கீழ் சில நிலப்பகுதிகள் விடப்பட்டன. எனினும் மீண்டும் திம்ம ராயன் குழப்பம் விளைவித்தபோது, 1635 ஆம் ஆண்டில் செஞ்சி நாயக்கனால் அவன் கொல்லப்பட்டான்.
இதன் பின் அமைதி நிலை நாட்டப்பட்டு பேடா வேங்கட ராயன் வேலூருக்குச் சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றான்.
மூன்றாம் ஸ்ரீரங்காவின் கிளர்ச்சி [தொகு]
அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த அவனது மருமகனான ஸ்ரீரங்கா ஏதோ காரணத்தால் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 1638 ஆம் ஆண்டின் பீஜப்பூரில் இருந்து படையெடுப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தான். பீஜப்பூர்-மூன்றாம் ஸ்ரீரங்கா கூட்டுப் படைகள் முதலில் பெங்களூரைத் தாக்கின. அப்போது அரசன் பெருமளவு விட்டுக்கொடுப்புக்களுடன் சமாதானம் செய்துகொண்டான். எனினும் அதே கூட்டணி மீண்டும் தாக்குதலைத் தொடங்கி வேலூர்க் கோட்டைக்கு 12 மைல் தூரம் வரை வந்துவிட்டன. எனினும், அரசன் நாயக்கர்களின் துணையுடன் கூட்டுப் படையின் முகாம்களைத் தாக்கினான்.
கோல்கொண்டாப் படைகள் [தொகு]
அடுத்த ஆண்டில் (1641), கோல்கொண்டா சுல்தான் விஜயநகரத்தின் குழப்பநிலையைச் சாதகமாக்கிக் கொண்டு கிழக்குக் கரையூடாகப் பெரும் படையை அனுப்பினான். கோல்கொண்டாப் படைகள் மதராசுக்கு அருகே, மூன்றாம் வேங்கடனின் படைகள், செஞ்சி நாயக்கன், மதராஸ், பூனமலைத் தலைவனான தர்மால வேங்கடபதி ஆகியோரின் துணையுடன் நடத்திய தாக்குதல்களை முறியடித்து வேலூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய மூன்றாம் வேங்கடன் சித்தூர்க் காட்டுப் பகுதிக்குப் பின்வாங்கினான். அங்கே 1642 ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானான்.
மூன்றாம் வேங்கடனுக்கு மகன்கள் இல்லை. இதனால், பீஜப்பூர் முகாமை விட்டுவிட்டு வேலூருக்கு வந்த மூன்றாம் ஸ்ரீரங்கா அரசனானான்.