அரவிடு மரபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜயநகரப் பேரரசு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரவிடு மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராம ராயன் ஆவான். எனினும் இவன், முந்திய மரபின் கடைசி அரசனுக்காகப் பதில் ஆளுநராகவே செயல்பட்டான். ராமராயன் தலிக்கோட்டாப் போரில் இறந்ததும், அவனது தம்பியாகிய திருமலை தேவ ராயன் அரசனானான். இவனே அரவிடு மரபின் முதல் அரசனாவான்.
அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே பஹமானி சுல்தான்களின் ஒன்றுபட்ட வலுவைச் முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.