இரண்டாம் கோகல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் கோகல்லன்
தஹாலாவின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் 990-1015 பொ.ச.
முன்னையவர்இரண்டாம் யுவராசதேவன்
பின்னையவர்கங்கேயதேவன்
குழந்தைகளின்
பெயர்கள்
கங்கேயதேவன்
அரசமரபுதிரிபுரியின் காலச்சூரிகள்
தந்தைஇரண்டாம் யுவராசதேவன்

இரண்டாம் கோகல்லன் (Kokalla II; ஆட்சிக் காலம் பொ.ச. 990-1015 ) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவனது குர்கி கல்வெட்டு, இவன் கூர்ஜர-பிரதிகாரர்கள், பாலர்கள், கமேலைச் சாளுக்கியர்களின் பிரதேசங்களைத் தாக்கியதாகக் கூறுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோகல்லன், காலச்சூரி மன்னன் இரண்டாம் யுவராசதேவனின் மகனாவான். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்த்தப்பட்டான்.[1]

ஆட்சி[தொகு]

கோகல்லனின் குர்கி கல்வெட்டு, மற்ற மன்னர்கள் இவனைப் பார்த்து பயந்தார்கள் என்று பெருமை பேசுகிறது: கூர்ஜர மன்னன் இமயமலையில் ஒளிந்து கொண்டான் எனவும், கௌட மன்னன் நீர் கோட்டையில் ஒளிந்தான் எனவும், குந்தள மன்னன் காட்டில் வாழ்ந்தான் எனவும் கூறுகிறது. இந்த கூற்றுக்கள், கோகல்லன் இந்த பிரதேசங்களை தாக்கியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது: [1]

  • கூர்ஜர அரசன் மூலராஜா அல்லது சாமுண்டராசனாக இருக்கலாம். இருப்பினும், காலச்சூரி கல்வெட்டு, இமயமலைப் பகுதி இவனது இராச்சிஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததைக் குறிப்பிடுவதால், இவன் ஒரு பலவீனமான கூர்ஜர-பிரதிகார ஆட்சியாளராகவும், அநேகமாக இராச்சியபாலனாகவும் அடையாளம் காணப்படலாம். [1]
  • குந்தள மன்னனை மேலைச் சாளுக்கிய மன்னன் ஐந்தாம் விக்கிரமாதித்தனுடன் அடையாளம் காணலாம். கோகல்லனின் தந்தைவழி அத்தை சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பனை மணந்தாள். தைலப்பனின் மரணத்திற்குப் பிறகு சாளுக்கிய - காலச்சூரி உறவுகள் மோசமடைந்திருக்கலாம். [1]

கோகல்லனின் வழித்தோன்றலான யசகர்ணனின் ஜபல்பூர் மற்றும் கைரா கல்வெட்டுகள், கோகல்லன் நான்கு பெருங்கடல்களை அடையும் வரை நான்கு திசைகளிலும் நாடுகளை தாக்கியதாக பெருமை கொள்கிறது. இது வெறும் வழமையான பாராட்டு என்றே தோன்றுகிறது. [1]

பரமாரர்களின் உதய்பூர் கல்வெட்டு, அவர்களின் மன்னன் போஜன் ஒரு தோக்லாலாவை தோற்கடித்ததாக கூறுகிறது. [2] வரலாற்றாசிரியர் எஸ். கே. போஸ் தோக்லாலாவை இரண்டாம் கோகல்லனுடன் அடையாளப்படுத்துகிறார். [3] கோகல்லனுக்குப் பிறகு அவனது மகன் கங்கேயதேவன் பதவியேற்றான். இவன் தனது ஆட்சியின் முதல் சில ஆண்டுகளில் போஜனின் ஆட்சியாளனாக பணியாற்றினான். [4]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கோகல்லன்&oldid=3375664" இலிருந்து மீள்விக்கப்பட்டது