இமிடசோலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமிடசோலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இமிடசோலேட்டு
வேறு பெயர்கள்
இமிடசோலைடு
இனங்காட்டிகள்
36954-03-7
ChemSpider 2631931
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • c1cnc[n-]1
பண்புகள்
C3H3N2
வாய்ப்பாட்டு எடை 67.070
காடித்தன்மை எண் (pKa) 14.05[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
67.8 கியூ•மோல்−1 (16.2 kcal•mol−1) Gas phase.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இமிடசோலேட்டு (Imidazolate) என்பது (C3H3N2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இமிடசோலின் இணை காரமாகும். கருக்கவரியான இது ஒரு வலிமையான காரமுமாகும். தனி எதிர்மின் அயனியானது C2v சீரொழுங்குடன் காணப்படுகிறது. இமிடசோலின் அமிலத்தன்மையின் pKa மதிப்பு 14.05 ஆகும்[1]. எனவே இமிடசோலில் (C3H3N2H) இருந்து புரோட்டானை நீக்க ஒரு வலிமையான காரம் தேவைப்படுகிறது.

தோற்றம்[தொகு]

ஒருங்கிணைவு வேதியியலில் இமிடசோலேட்டு பொதுவாக ஒரு இணைப்பு ஈந்தணைவியாகக் கருதப்படுகிறது. சியோலிட்டிக் வகை இமிடசோலேட்டு கட்டமைப்பில் உலோகங்கள் இமிடசோலேட்டுகள் மூலமே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன[3][4]. சூப்பராக்சைடு டிசுமியூட்டேசு என்ற நொதியில் இமிடசோலேட்டு தாமிரம் மற்றும் துத்தநாக மையங்களை இணைக்கிறது.

மனிதனின் சூப்பராக்சைடு டிசுமியூட்டேசு என்ற நொதியில் அமினோ முனை = நீலம், கார்பாக்சி முனை = சிவப்பு, தாமிரம் (ஆரஞ்சு கோளம்) துத்தநாகம் (சாம்பல்நிற கோளம்) மையங்கள் இமிடசோலேட்டு மூலம் இணைக்கப்பட்டுள்ளன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 WALBA, HAROLD; ISENSEE, ROBERT W. (August 1961). "Acidity Constants of Some Arylimidazoles and Their Cations". The Journal of Organic Chemistry 26 (8): 2789–2791. doi:10.1021/jo01066a039. 
  2. Gutowski, Keith E.; Rogers, Robin D.; Dixon, David A. (May 2007). "Accurate Thermochemical Properties for Energetic Materials Applications. II. Heats of Formation of Imidazolium-, 1,2,4-Triazolium-, and Tetrazolium-Based Energetic Salts from Isodesmic and Lattice Energy Calculations". The Journal of Physical Chemistry B 111 (18): 4788–4800. doi:10.1021/jp066420d. 
  3. Phan, A.; Doonan, C. J.; Uribe-Romo, F. J.; Knobler, C. B.; O'Keeffe, M.; Yaghi, O. M. "Synthesis, Structure, and Carbon Dioxide Capture Properties of Zeolitic Imidazolate Frameworks" Acc. Chem. Res. 2010, 43, 58-67. எஆசு:10.1021/ar900116g
  4. Zhang, J.-P.; Zhang, Y.-B.; Lin, J.-B.; Chen, X.-M., "Metal Azolate Frameworks: From Crystal Engineering to Functional Materials", Chem. Rev. 2012, vol. 112, pp. 1001-1033. எஆசு:10.1021/cr200139g
  5. Protein Data Bank: 3CQQ​; "Structures of the G85R variant of SOD1 in familial amyotrophic lateral sclerosis". J. Biol. Chem. 283 (23): 16169–77. June 2008. doi:10.1074/jbc.M801522200. பப்மெட்:18378676. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமிடசோலேட்டு&oldid=2443788" இலிருந்து மீள்விக்கப்பட்டது