இந்திரநீல் மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரநீல் மித்ரா (Indraneel Mittra) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஆவார். டாட்டா நினைவு மையத்தில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்திரநீல் மித்ரா தில்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1971 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கான இங்கிலாந்தின் இராயல் கல்லூரியில் உறுப்பினர் ஆனார். 1977 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் புற்றுநோய் ஆராய்ச்சியில் இரெனாடோ துல்பெக்கோவின் கீழ் பணியாற்றினார். இலண்டனில் உள்ள புனித பர்த்தலோமிவ் மருத்துவமனையிலும் பணியாற்றினார். பின்னர் இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தில் எர்னசுட்டு போர்யசு நாற்காலியில் நியமனத்தைத் தவிர இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பியர்சு கோல்ட்டு வருகை தரும் பேராசிரியரானார். புற்றுநோய்க்கான இயக்குநீர் ஏற்பிகள் மற்றும் உயிர்க் குறிப்பான்கள் ஆகியவை இவருடைய ஆராய்ச்சிப் பகுதிகளில் அடங்கும். மும்பையில் 150,000 பெண்களை உள்ளடக்கிய மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பெரிய அளவிலான கட்டுப்பாட்டு சோதனையை இவர் ஏற்பாடு செய்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Indraneel Mittra". Indian National Science Academy.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரநீல்_மித்ரா&oldid=3781779" இலிருந்து மீள்விக்கப்பட்டது