இசுடார் அலையன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடார் கூட்டணி
துவங்கிய நாள்14 மே 1997
முழு உறுப்பினர்கள்28
வாக்கில்லா உறுப்பினர்கள்29 சார்பு
நிலுவையிலுள்ள உறுப்பினர்கள்2
சேரிட வானூர்தி நிலையங்கள்1,329
சேரிட நாடுகள்194
ஆண்டுக்கு பயணிகள் (மி)678.5
ஆண்டுக்கு பயணியர் வருவாய் (பி)990.24
வானூர்தித் தொகுதி அளவு4,570
மேலாண்மைமார்க் இசுவாப் (சிஈஓ),[1] காலின் ரோவினெசு
கூட்டணி சொலவம்உலகம் இணைக்கப்படும் வழி
தலைமையகம்பிராங்க்பர்ட் வானூர்தி நிலையம், பிராங்க்ஃபுர்ட், செருமனி
வலைத்தளம்www.staralliance.com

இசுடார் அல்லையன்ஸ் (Star Alliance, அல்லது தமிழில் இசுடார் கூட்டணி) உலகின் முதலாவதும் உலகளாவிய மிகப்பெரும் வான்போக்குவரத்து கூட்டணியும் ஆகும். இதன் தலைமை அலுவலகம் செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டில் அமைந்துள்ளது.[2] 1997இல் நிறுவப்பட்ட இந்தக் கூட்டணியின் பெயரும் சின்னமும் இதன் ஐந்து நிறுவன வான்போக்குவரத்து நிறுவனங்களான இசுகாண்டிநேவிய வான் போக்குவரத்து நிறுவனம், தாய் பன்னாட்டு ஏர்வேசு, ஏர் கனடா, லுஃப்தான்சா, மற்றும் யுனைடைடு ஏர்லைன்சு ஆகியவற்றை குறிக்கிறது. விரைவாக வளர்ந்துவரும் இந்தக் கூட்டணியில் தற்போது 28 உறுப்பினர்கள் உள்ளனர். நாளும் 21,100ஐ விடக்கூடிய புறப்பாடுகளைக் இயக்குகிறது. 194 நாடுகளில் உள்ள 1329 நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஆண்டுக்கு 678.5 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Mark Schwab Appointed New Star Alliance Ceo". Star Alliance. 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 21 July 2013.
  2. "Employment Opportunities." Star Alliance. Retrieved on 27 December 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடார்_அலையன்சு&oldid=2783834" இலிருந்து மீள்விக்கப்பட்டது