ஆ. வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. வெங்கடேசன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப்பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிசோழவந்தான்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்பாரதி
பிள்ளைகள்2 மகன்கள், நரேந்திரன், கார்முகிலன்,
வாழிடம்காதக்கிணறு
முன்னாள் கல்லூரிதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

ஆ. வெங்கடேசன் (A. Venkatesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சார்ந்தவர். வெங்கடேசன் சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழில் பட்டம் பெற்றுள்ளார். விவசாயியான வெங்கடேசன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 2021 மே மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Venkatesan A(DMK):Constituency- SHOLAVANDAN (SC)(MADURAI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._வெங்கடேசன்&oldid=3311119" இலிருந்து மீள்விக்கப்பட்டது