ஆய் குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய் குடி என்பது இந்தியாவின், தென்பகுதி தமிழகத்தில் வாழ்ந்த சங்க கால மக்களின் ஒரு பகுதி. இவர்கள் பொதிகை மலைப் பகுதியில் ஆய் நாட்டில் வாழ்ந்துவந்தனர். இவர்களின் அரசன் ஆய் குடிப்பெயர் அடைமொழியுடன் குறிப்பிடப்படுவான். ஆய் ஆண்டிரன், ஆய் எயினன் அவர்களில் சிறப்பு மிக்கவர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டத்தை கொண்டுள்ளனர்.

ஆய் குடியின் பெருமை[தொகு]

இமயமலை உருவில் உயர்ந்து விளங்குவது போல ஆய்குடி மக்கள் கொடைப்பண்பில் சிறப்புற்று விளங்கினர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வட திசையதுவே வான் தோய் இமயம்.
    தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
    பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. - புறநானூறு 132

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்_குடி&oldid=2948470" இலிருந்து மீள்விக்கப்பட்டது