ஆதித்ய பூசண் பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்ய பூசண் பந்த்
பிறப்புஇந்தியா
தேசியம்இந்தியன்
துறை
பணியிடங்கள்
  • இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம்
அறியப்படுவதுவளர்ச்சி நச்சுயியல், பூச்சிக்கொல்லிகள் பற்றிய ஆய்வுகள்
விருதுகள்

ஆதித்ய பூசண் பந்த் (Aditya Bhushan Pant) இவர் ஓர் இந்திய நச்சுயியலாளரும், நரம்பியல் நிபுணரும் மற்றும் இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும் ஆவார். [1] வளர்ச்சி நச்சுயியல், செயற்கை கல முறை பரிசோதனைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகிய துறைகளில் தனது ஆய்வுகளுக்காக அறியப்பட்ட இவர் , உயிரி தொழில்நுட்பத் துறையின் நியூரோபயாலஜி பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். [2] இவரது ஆய்வுகள் பல கட்டுரைகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விஞ்ஞான கட்டுரைகளின் இணையக் களஞ்சியமான ரிசர்ச் கேட் அவற்றில் 121 ஐ பட்டியலிட்டுள்ளது. [3] இதைத் தவிர, இவர் மற்றவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு அத்தியாயங்களை வழங்கியுள்ளார் மேலும் இந்திய நரம்பியல் அகாடமியின் அன்னல்ஸ் ஆஃப் நியூரோ சயின்சஸ் என்ற இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். [4] இவர் 2007ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் சகுந்தலா அமீர் சந்த் பரிசைப் பெற்றுள்ளார். [5] இந்திய அரசாங்கத்தின் பயோடெக்னாலஜி திணைக்களம் 2012ஆம் ஆண்டில் உயிரியலுக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக, மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான தொழில் மேம்பாட்டுக்கான தேசிய பயோசயின்ஸ் விருதை இவருக்கு வழங்கியது. [6]

குறிப்புகள்[தொகு]

  1. "The Staff". iitrindia.org. 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
  2. "Dr. Aditya Bhushan Pant - DBT Neurobiology Task force". dbt-neuro.ncbs.res.in (in ஆங்கிலம்). 2018-02-03. Archived from the original on 3 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
  3. "On ResearchGate". On ResearchGate. 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2018-01-30.
  4. "Annals of Neurosciences". Karger. 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
  5. "Shakuntala Amir Chand Prize" (PDF). Indian Council of Medical Research. 2018-02-03. Archived from the original (PDF) on 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-02-03.
  6. "Awardees of National Bioscience Awards for Career Development" (PDF). Department of Biotechnology. 2016. Archived from the original (PDF) on 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்ய_பூசண்_பந்த்&oldid=3542629" இலிருந்து மீள்விக்கப்பட்டது