ஆடி தபசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடி தபசு என்பது ஆதிசக்தி கோமதியம்மனாக தவமிருந்த நிகழ்வினைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்த திருவிழா ஆடி மாதம் சங்கரநாராயணன் கோயிலில் கொண்டாடப்படுகிறது.

புராணம்[தொகு]

சங்கன் பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கயிலை சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவருடைய தவத்தினால் சிவபெருமான் சங்கரநாராயணனாக காட்சியளித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடி_தபசு&oldid=3591046" இலிருந்து மீள்விக்கப்பட்டது