ஆங்காங் பொது விடுமுறை நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்காங்கில் உள்ள பொது விடுமுறைகள் மற்றும் சட்டரீதியான விடுமுறைகள் (Public holidays in Hong Kong) ஆங்காங் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விடுமுறைகள். தொழிலாளர்கள் வேலையிலிருந்து ஓய்வெடுக்க அனுமதிக்கிறார்கள் அல்லது விடுமுறைகான ஊதியம் அல்லது ஈழப்பீடுகள் கொடுக்க வேண்டும். [1]

வங்கி விடுமுறைகள்[தொகு]

17 பொது விடுமுறைகள் வங்கி விடுமுறைகள் என்று அழைக்கப்படுகிறது இது ஆங்காங் பொது விடுமுறை அரசாணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்காங் பொது விடுமுறைகள்
எண் நாள் விடுமுறை குறிப்புகள்
1. 1 சனவரி ஆங்கிலப் புத்தாண்டு
2. முதல் மாத்தில் முதல் நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டு பொதுவாக சனவரி பிற்பகுதியில் அல்லது பெப்ரவரி தொடக்கத்தில் வரும். (பாரம்பரிய விடுமுறைகளில் மிக முக்கியமானது
3. முதல் மாத்தில் இரண்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டில் இரண்டாவது நாள்
4. முதல் மாத்தில் மூன்றாவது நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டில் மூன்றாவது நாள்
5. 5 ஏப்ரல் (லீப் வருடத்தில் ஏப்ரல் 4) சிங் மிங் பண்டிகை முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்
6. உயிர்த்தெழுதலின் 2 நாள் முன்னால் புனித வெள்ளி
7. உயிர்த்தெழுதலின் 1 நாள் முன்னால் புனித சனி
8. (உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாள் உயிர்ப்பு திங்கள்
9. 1 மே மே நாள்
10. நான்காவது மாத்தில் எட்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) புத்தர் பிறந்த நாள் பொதுவாக மே மாதம் வரும்.
11. 5வது மாத்தில் 5வது நாள் (சந்திர நாட்காட்டி) டிராகன் படகு திருவிழா பொதுவாக சூன் மாதம் வரும். (தேசபக்தி நினைவு, அரிசி பாலாடை மற்றும் டிராகன் படகு பந்தயங்கள் நடைபெறும்.)
12. 1 சூலை ஆங்காங் நிறுவன நாள்
13. 8வது மாத்தில் 16வது நாள் (சந்திர நாட்காட்டி) நடு இலையுதிர் கால திருவிழா அடுத்த நாள் பொதுவாக செப்டம்பரில் வரும். (அறுவடை மற்றும் ஒற்றுமையின் முக்கியமான இலையுதிர் கொண்டாட்டம், விளக்குகள் ஏற்றி, மூன்கேக்குகளை சாப்பிடுவது மற்றும் முழு நிலவைப் பார்த்து ரசித்தல்.)
14. 1 அக்டோபர் தேசிய நாள்
15. 9வது மாத்தில் 9வது நாள் (சந்திர நாட்காட்டி) சுங் யியுங் விழா பொதுவாக அக்டோபரில் வரும்.
16. 25 திசம்பர் கிறித்து பிறப்பு பெருவிழா
17. 26 திசம்பர் கிறித்து பிறப்புக்கு அடுத்தநாள் பொக்சிங் நாள்

சட்டரீதியான விடுமுறைகள்[தொகு]

சட்டரீதியான விடுமுறை என்பது 17 பொது விடுமுறைகளில் 12 விடுமுறைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை ஆகும் அல்லது விடுமுறைகான ஊதியம் அல்லது ஈழப்பீடுகள் கொடுக்க வேண்டும்.

சட்டரீதியான விடுமுறைகள்
எண் நாள் விடுமுறை குறிப்புகள்
1. 1 சனவரி ஆங்கிலப் புத்தாண்டு
2. முதல் மாத்தில் முதல் நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டு பொதுவாக சனவரி பிற்பகுதியில் அல்லது பெப்ரவரி தொடக்கத்தில் வரும். (பாரம்பரிய விடுமுறைகளில் மிக முக்கியமானது
3. முதல் மாத்தில் இரண்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டில் இரண்டாவது நாள்
4. முதல் மாத்தில் மூன்றாவது நாள் (சந்திர நாட்காட்டி) சீனப் புத்தாண்டில் மூன்றாவது நாள்
5. 5 ஏப்ரல் (லீப் வருடத்தில் ஏப்ரல் 4) சிங் மிங் பண்டிகை முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்
6. 1 மே மே நாள்
7. 5வது மாத்தில் 5வது நாள் (சந்திர நாட்காட்டி) டிராகன் படகு திருவிழா பொதுவாக சூன் மாதம் வரும். (தேசபக்தி நினைவு, அரிசி பாலாடை மற்றும் டிராகன் படகு பந்தயங்கள் நடைபெறும்.)
8. 1 சூலை ஆங்காங் நிறுவன நாள்
9. 8வது மாத்தில் 16வது நாள் (சந்திர நாட்காட்டி) நடு இலையுதிர் கால திருவிழா அடுத்த நாள் பொதுவாக செப்டம்பரில் வரும். (அறுவடை மற்றும் ஒற்றுமையின் முக்கியமான இலையுதிர் கொண்டாட்டம், விளக்குகள் ஏற்றி, மூன்கேக்குகளை சாப்பிடுவது மற்றும் முழு நிலவைப் பார்த்து ரசித்தல்.)
10. 1 அக்டோபர் தேசிய நாள்
11. 9வது மாத்தில் 9வது நாள் (சந்திர நாட்காட்டி) சுங் யியுங் விழா பொதுவாக அக்டோபரில் வரும்.
12. இந்த விடுமுறை 21, 22 அல்லது 25 திசம்பர் இதில் கிறித்து பிறப்பு பெருவிழா மூன்று நாளில் எந்த நாளையும் முதலாளிகளால் தேர்வு செய்யலாம்.

ஆங்காங் பொது விடுமுறைகளின் சிறப்பு[தொகு]

பொது விடுமுறைகள் ஞாயிறு அன்று வந்தால் அடுத்த நாள் பொது விடுமுறை ஆகும். குறிப்பாக உயிர்ப்பு ஞாயிறு பொது விடுமுறை ஆனால் இது ஞாயிறுதான் வரும் அதனால் அடுத்த நாள் பொது விடுமுறை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General holidays for 2020". பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.

வெளி இணைப்புகள்[தொகு]