அ. புதுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. புதுப்பட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு அழகான கிராமம் ஆகும். இந்த ஊரில் பீடி, சிகரெட் போன்ற போதை பொருட்கள் விற்காது.[1] இந்த ஊரில் எல்லா வசதிகளும் உள்ளது. ராமகிருஷ்ணர் மற்றும் பாலமரத்தம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வூரை முல்லைப் பெரியாறு அணை வளப்படுத்துகிறது. இவ்வூரின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இங்கு நெல், கரும்பு, வாழை போனறவை விளைகின்றன.இவ்வூரின் அமைவிடம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 185 மீட்டர் (606 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரில் பல ஜாதி மக்கள் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது மதுரையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 70, 69, 43c, 94 ஆகிய பேருந்துகள் செல்லும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மது, புகை பிடிக்க தடை - மதுரை அருகே முன்னுதாரண கிராமம்!". ஒன் இந்தியா (தமிழ்). 28 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._புதுப்பட்டி&oldid=3926929" இலிருந்து மீள்விக்கப்பட்டது