அல்லா அயோத்தி ராமி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லா அயோத்தி ராமி ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
22 ஜூன் 2020 – 21 ஜூன் 2026[1]
தொகுதிஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஆகத்து 1964 (1964-08-12) (அகவை 59)
பெடகாக்கனி, குண்டூர் மாவட்டம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்அல்லா தாட்சாயிணி
பெற்றோர்s
  • அல்லா தசரத ராமி ரெட்டி (father)
  • அல்லா வேர ராகவம்மா (mother)
உறவினர்கள்அல்லா ராமகிருஷ்ண ரெட்டி (சகோதரர்)
கல்லம் சதீசு ரெட்டி (மைத்துனர்)
மொதுகுலா வேணுகோபால ரெட்டி (மைத்துனர்)
வேலைஅரசியல்வாதி , தொழிலதிபர்

அல்லா அயோத்தி ராமி ரெட்டி (Alla Ayodhya Rami Reddy) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக 2020 மாநிலங்களவைத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அல்லா அயோத்தி ராமி ரெட்டி, குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லா தசரத ராமி ரெட்டி மற்றும் வீர ராகவம்மா ஆகியோருக்கு ஆகஸ்ட் 12, 1964 இல் மகனாகப் பிறந்தார். மங்களகிரி சட்டமன்ற உறுப்பினரான அல்லா ராமகிருஷ்ண ரெட்டி இவரது சகோதரர்.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெடகாக்கனியில் ஆரம்பக் கல்வியை முடித்த இவர், குண்டூர் நகரில் உள்ள பாபுஜி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் உள்ள ரெட்டி கல்லூரியில் தனது உயர்கல்வியை முடித்தார்.

பின்னர் கர்நாடகாவில் இளங்கலை தொழில்நுட்பத்தையும் (குடிசார் பொறியியல்) பின்னர், ஐதராபாத்து , உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை தொழில்நுட்பத்தையும் முடித்தார். 1984 இல் கட்டப் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் தாட்சாணி என்பவரை மணந்தார்.

வணிக வாழ்க்கை[தொகு]

இவர் ராம்கி குழும நிறுவனங்களை நிறுவினார். இவரது நிகர சொத்து மதிப்பு 350 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இவர் இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது பணக்கார மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். [5] [6] [7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அல்லா அயோத்தி ராமி ரெட்டி, பிப்ரவரி 2014 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, 2014 பொதுத் தேர்தலில் நரசராவ்பேட்டையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் ராயபதி சாம்பசிவ ராவிடம் தோல்வியடைந்தார். [8] [9]

2020 மே மாதம் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajyasabha (2020). "Rajyasabha Statewise Retirement" இம் மூலத்தில் இருந்து 1 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220401050713/https://rajyasabha.nic.in/rsnew/member_site/RetLMemState.aspx. 
  2. "Parimal Nathwani among four elected to Rajya Sabha from Andhra Pradesh on YSR Congress tickets". P Pavan. Mumbai Mirror. 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  3. "All four Rajya Sabha seats in Andhra Pradesh go to YSRC while TDP secures just 17 votes". The New Indian Express. 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  4. "YSRC's Ayodhya Rami Reddy set to become second richest Rajya Sabha MP". U Sudhakar Reddy. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
  5. "Most billionaire MPs in India from Telangana & Andhra Pradesh".
  6. "45% of Rajya Sabha MPs from Andhra are billionaires, says ADR report".
  7. "Alla Ayodhya Rami Reddy - Biography".
  8. "Ramky Group founder to join YSR Congress". https://m.economictimes.com/news/politics-and-nation/ramky-group-founder-to-join-ysr-congress/articleshow/31090868.cms. 
  9. "Ayodhya Rami Reddy Alla(Yuvajana Sramika Rythu Congress Party):Constituency- NARASARAOPET(ANDHRA PRADESH) - Affidavit Information of Candidate".