அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு
Skeletal formula of aluminium acetotartrate
Ball-and-stick model of the aluminium acetotartrate molecule
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(அசிட்டடோ-κO) [2,3-டை ஐதராக்சிபியூட்டேண்டையோட்டோ(2-)-κO1,κO4] அலுமினியம்
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் Topical
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 15930-12-8 Y
ATC குறியீடு S02AA04 C05AX01
ஒத்தசொல்s அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு
வேதியியல் தரவு
வாய்பாடு C6

H7 Br{{{Br}}} O8  

மூலக்கூற்று நிறை 234.10 கி/மோல்

அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு (Aluminium acetotartrate) எனப்து C6H7AlO8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒரு கரிம அமிலம், மலச்சிக்கல் காரணி மற்றும் நச்சுக்கொல்லி என்று அறியப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலம் மற்றும் டார்டாரிக் அமிலம் ஆகியனவற்றின் அலுமினியம் உப்பாகும் [1]

தோற்றம்[தொகு]

நிரமற்ற அல்லது மஞ்சள் நிறப்படிகங்களாக அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு தோன்றுகிறது. தண்ணீரில் நன்றாகவும் ஆல்ககால் மற்றும் ஈதரில் மெதுவாகவும் கரைகிறது [1].

பயன்பாடுகள்[தொகு]

மூச்சுப் பாதை சிக்கல்களுக்கான சிகிச்சையில் பயன்படும் கரைசல்களில் அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு 0.5-2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் அசிட்டேட்டு கரைசலுக்கு மாற்றாகவும் 1-3% கரைசலாக அலுமினியம் அசிட்டோடார்டரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

பனிக்கடி, மொட்டுத் தோலழற்சி ஆகியனவற்றுக்கான மருந்துடை நீர்மமாகவும், தேய்மான நாசியழற்சிக்கு போரிக் அமிலத்துடன் சேர்ந்த மூக்குப்பொடியாகவும் பயன்படுகிறது. மேலும் இது புண்ணாற்றும் கிருமிநாசினி மேற்பூச்சாகவும் பயன்படுகிறது [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Modern Materia Medica". Druggists Circular 3: 17. 1912. https://books.google.com/books?id=9EUPAAAAYAAJ&printsec=frontcover. பார்த்த நாள்: 2010-05-10.