அரஸ் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரஸ்
பிறப்புதிருநாவுக்கரசு
இலுப்பைக்குளம், விருதுநகர் மாவட்டம்
பெற்றோர்வி.சுப்பிரமணி, தனபாக்கியம்
வாழ்க்கைத்
துணை
பாவை
பிள்ளைகள்அரவிந்தன், ஹர்சவரதன்

அரஸ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு என்பதாகும்.

இவர் தமிழ் பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரம், கதைப் படங்கள், கேரிகேச்சர் பாணி ஓவியங்களை வரைந்து வருகிறார். [1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

அரசு விருதுநகர் மாவட்டம் இலுப்பைகுளத்தில் வி.சுப்பிரமணி, தனபாக்கியம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் திருநாவுக்கரசு என்பதாகும்.

ஆறாவது படிக்கும் காலத்திலேயே திருநா காமிக்ஸ் என்ற பெயரில் வரைகலை புத்தங்களை செய்தார். அதனை ஆசிரியர்களும், சகமாணவர்களும் பாராட்ட திருநாவுக்கரசுக்கு ஓவியங்கள் மீதான ஆர்வம் அதிகமானது. மாலை முரசு நாளிதழிலின் தேவி என்ற இணைப்பு புத்தகத்தில் இவருடைய முதல் ஓவியம் வெளியானது.

திருநாவுக்கரசு, பாவை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு அரவிந்தன், ஹர்சவரதன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

பயிற்சி பட்டறை[தொகு]

2016 ஆகஸ்ட் 03 இல் சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு பவுண்டேசன் கேலரியில் "ஆர்ட் அட்டாக்" என்ற பெயரில் ஓவியப் பயிற்சி பட்டறை நடத்தினார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஓவியங்கள் வரைதல், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கதைகளுக்கான படம் போன்றவைகளைப் பற்றி விளக்கம் தந்தார். அரசுடன் ஓவியர் ராம்கி, கார்டூனிஸ்ட் தேவநாதன் போன்றோர் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை நடத்தினர். [2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. பிரபல ஓவியர் நடத்துகிறார் நாளை ஓவியப்பட்டறை[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ஓவியர் அரஸ் நடத்திய பயிற்சி பட்டறை ஆர்வத்துடன் பங்கேற்ற ஓவிய ஆர்வலர்கள் தினமலர் 2016 ஆகஸ்ட் 03

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரஸ்_(ஓவியர்)&oldid=3721739" இலிருந்து மீள்விக்கப்பட்டது