அமனுல்லாகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமனுல்லாகான்
King of the God granted Kingdom of Afghanistan and its dependencies[1]
King Amanullah Khan.jpg
ஆட்சிக்காலம் February 28, 1919 - January 14, 1929
பிறப்பு June 1, 1892
பிறப்பிடம் Paghman, ஆப்கானித்தான்
இறப்பு ஏப்ரல் 25, 1960 (அகவை 67)
இறந்த இடம் சூரிக்கு, சுவிட்சர்லாந்து
முன்னிருந்தவர் Nasrullah Khan
பின்வந்தவர் Inayatullah Khan
துணைவர் Soraya Tarzi
தந்தை Habibullah Khan
தாய் Sarwar Sultana Begum

அமனுல்லாகான் (ஜுன் 1, 1892 – ஏப்ரல் 25, 1960) ஆப்கானிஸ்தானின் அமீராக இருந்த அபிபுல்லாவின் மகனான இவர், தந்தை கொலையுண்ட பின் படைகளின் ஆதரவு கிடைத்ததால் அமீரானார். 1919 முதல் 1929 வரை ஆப்கானிஸ்தானின் அரசராக இருந்தவர்.[2] அமனுல்லாகான் கி.பி. 1919 - ல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இது மூன்றாம் ஆங்கில-ஆப்கானியப் போர் எனப்பட்டது. 1924 - ல் இவர் தம்மை அரசரென அறிவித்துக் கொண்டார். புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார்.

அமனுல்லாகான் ஆப்கானிஸ்தானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பி பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதனை விரும்பாத இஸ்லாமிய முல்லாக்கள் 1924 மார்ச் முதல் 1925 ஜனவரி வரை கலகத்தில் ஈடுபட்டனர். கோஸ்ட் கலகம் எனப்பட்ட இதுவே 1928 - ல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அப்புரட்சி தோல்வியடைந்தது. ஆனால், அமனுல்லாகான் 1929 ஜனவரி 14 - ஆம் நாள் முடி துறந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின் 1941 - ஆம் ஆண்டு ஜெர்மனி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார்.

மெற்கோள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமனுல்லாகான்&oldid=1462466" இருந்து மீள்விக்கப்பட்டது