அப்தெல்ரகுமான் ஏசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்தெல்ரகுமான் ஏசாம்
Abdelrahman Hesham
நாடுஎகிப்து
பிறப்புதிசம்பர் 2, 1992 (1992-12-02) (அகவை 31)
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2016)
பிடே தரவுகோள்2429 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2450 (மார்ச்சு 2019)

அப்தெல்ரகுமான் ஏசாம் (Abdelrahman Hesham) எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1992 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 2016 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு அப்தெல்ரகுமான் ஏசாமிற்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியை அப்தெல்ரகுமான் ஏசாம் வென்றார். இப்போட்டி அவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது.[2]

2016, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் எகிப்து நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2016 ஆம் ஆண்டில் 5 ஆவது பலகையில் விளையாடிய இவர் 5.5/9 புள்ளிகள் ஈட்டினார்.[3] 2018 ஆம் ஆண்டில் 4 ஆவது பலகையில் விளையாடிய இவர் 4.5/9 புள்ளிகள் எடுத்தார்.[4]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பையிலும் இவர் விளையாடினார். முதல் சுற்றில் போலந்து நட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் பார்டெல் மேத்தியூசிடம் மோதினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hesham, Abdelrahman". FIDE. பார்க்கப்பட்ட நாள் July 14, 2021.
  2. "Chess-Results Server Chess-results.com - 2016 AFRICAN INDIVIDUAL CHESS CHAMPIONSHIPS - OPEN". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  3. "Chess-Results Server Chess-results.com - 42nd Olympiad Baku 2016 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
  4. "Chess-Results Server Chess-results.com - 43rd Olympiad Batumi 2018 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தெல்ரகுமான்_ஏசாம்&oldid=3793275" இலிருந்து மீள்விக்கப்பட்டது