உள்ளடக்கத்துக்குச் செல்

அபுதாபி (அமீரகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுதாபி
أبو ظبي
அபுதாபி அமீரகம்
அபுதாபி-இன் கொடி
கொடி
நாடுஐக்கிய அரபு அமீரகம்
நிறுவப்பட்டது1972
தொகுதிAbu Dhabi
Subdivisions
அரசு
 • வகைஅரசியல்சட்ட முடியாட்சி
 • அமீர்முகமது பின் சயீது அல் நகியான்
 • முடிக்குரிய இளவரசர்காலிது பின் முகமது அல் நகியான்
நேர வலயம்ஒசநே+4
 • கோடை (பசேநே)ஒசநே+4
அபுதாபி வரைப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் (அபுதாபி அமீரகம்) ஆகும். இதன் பரப்பளவு (67,340 கிமீ²) ஆகவும் முழு நாட்டினதும் பரப்பளவில் கிட்டத்தட்ட 86% ஐ உள்ளடக்கியும் அமைந்துள்ளது. அரபு மொழியில் "தாபி" என்பது ஒரு காலத்தில் இப்பகுதியில் பெருமளவில் காணப்பட்ட ஒரு வகைப் பாலைவனத்து மான்களைக் குறிக்கும்.[1] முழு நாட்டினதும் தலைநகரமான அபுதாபி நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார். அபுதாபி அமீரகமே ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட அமீரகமாகவும் விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 2,120,700. இதில் அமீரகக் குடியுரிமை கொண்டவர்கள் 439,100. இது மொத்த மக்கள் தொகையின் 20%க்கும் சற்று அதிகமானது[2]

2011 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி அபுதாபியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலைகளின்படி அரபு எமிரேட் திராம் 806,031 மில்லியனாக இருந்தது. இதில் பெட்ரோலியத்துறை, இயற்கை வாயுத்துறை உள்ளிட்ட சுரங்கம் கல்லகழ்தல் துறையின் பங்களிப்பு 58.5% ஆகும். கட்டுமானம் சார்ந்த தொழில் துறையே அடுத்த பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இது 10.1% ஆகும். அபுதாபி அமீரகத்தின் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 34% ஆகவே இருந்தபோதும், அண்மைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60% அபுதாபி அமீரகத்துக்கு உரியதாகவே உள்ளது.

1970களின் தொடக்கத்தில் இடம்பெற்ற இரு முக்கிய நிகழ்வுகள் அபுதாபியின் வளர்ச்சிப் பாதையில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதலாவது 1971 டிசம்பரில் அபுதாபி அமீரகத்தின் தலை நகரமான அபுதாபி நகரத்தை அரசியல் தலைநகரமாகவும், நிர்வாகத் தலைநகரமாகவும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானது ஆகும். இரண்டாவது, 1973 அக்டோபர் மாதப் போரைத் தொடர்ந்து எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்ததுடன், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு எண்ணெய் வருமானம் பெருமளவு உயர்ந்ததும் ஆகும்.

பிரிவுகள்

[தொகு]

அபுதாபி மூன்று முனிசிப்பல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

நகரங்களும் பெருநகரங்களும்

[தொகு]

இந்த அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் அபுதாபி. இது அகன்ற வீதிகளையும், உயர்ந்த கட்டிடங்களையும், பரபரப்பான வணிகப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இது தவிர அல் எயின், பனியாசு, ருவைசு என்பன பிற முக்கியமான நகரங்கள். அல் எயின், பாலைவனச் சோலை ஒன்றில் அமைந்த நகரம்.

முக்கிய பெரு நகரங்களும், நகரங்களும்

[தொகு]

குறிப்புக்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  2. "Statistical Yearbook of Abu Dhabi 2012". Statistics Centre - Abu Dhabi (SCAD).

24°28′35.15″N 54°22′13.84″E / 24.4764306°N 54.3705111°E / 24.4764306; 54.3705111

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுதாபி_(அமீரகம்)&oldid=3776373" இலிருந்து மீள்விக்கப்பட்டது