அனிதா சிங்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா சிங்வி
இயற்பெயர்அனிதா
பிறப்பு22 சூலை 1964 (1964-07-22) (அகவை 59)
சோத்பூர், இராசத்தான், இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்கசல் (இசை)
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1990–முதல்
இணையதளம்jahaneghazal.com

அனிதா சிங்வி (Anita Singhvi-பிறப்பு 22 சூலை 1964) ஓர் இந்தியப் பாரம்பரிய பாடகர் ஆவார். இவர் ஒரு சிறந்த சூபித்துவ இசைப் பாடகர் ஆவார்.[1]

இளமை[தொகு]

அனிதா சிங்வி இராசத்தான் மாநிலம் சோத்பூரில் ஒரு வணிக குடும்பத்தில் பிறந்தார். அனிதா இளங்கலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றுள்ளார். அனிதா தனது பதினைந்து வயதிலேயே கசல் பாடுவதில் ஆர்வம் காட்டினார். பண்டிதர் சிர்சாகரின் வழிகாட்டுதலின் கீழ் குவாலியர் கரானா பயிற்சியைத் தொடங்கினார்.

தொழில்[தொகு]

அனிதா சிங்வி நக்ஷ்-இ-நூர் இசைத்தொகுப்பு மூலம் அறிமுகமானார்.[2] அவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் (மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா) பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரபல வழக்கறிஞரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வியை, அனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[3]

திரைப்படவியல்[தொகு]

  • நக்ஷ்-இ-நூர்
  • வெட்கம்-இ-கசல்
  • சதா-இ-சூஃபி[4]
  • ஸஹ்-இ-நஸீப்
  • பக்தி சூஃபி பக்தி
  • தஜல்லி[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. I want to sing for Bollywood films: Farida Khanum (Interview)
  2. In the light
  3. "Abhishek Singhvi's son weds Vadilal Group's Aastha Gandhi in a star-studded ceremony". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/abhishek-singhvis-son-weds-vadilal-groups-aastha-gandhi-in-a-star-studded-ceremony/articleshow/49653184.cms?from=mdr. 
  4. "A faith called Sufism". தி இந்து (Chennai, India). 26 November 2007 இம் மூலத்தில் இருந்து 1 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201143942/http://www.hindu.com/thehindu/mp/2007/11/26/stories/2007112650520200.htm. 
  5. "Sufi Ghazal Albums by Anita Singhvi". Archived from the original on 13 March 2010. பார்க்கப்பட்ட நாள் 4 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_சிங்வி&oldid=3920322" இலிருந்து மீள்விக்கப்பட்டது