அனிசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிசோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அனிசோல்
முறையான ஐயூபிஏசி பெயர்
மீதாக்சிபென்சீன்
வேறு பெயர்கள்
மெத்தில் பினைல் ஈதர்
பீனாக்சிமீத்தேன்
இனங்காட்டிகள்
100-66-3 Y
ChEBI CHEBI:16579 Y
ChEMBL ChEMBL278024 Y
ChemSpider 7238 Y
InChI
  • InChI=1S/C7H8O/c1-8-7-5-3-2-4-6-7/h2-6H,1H3 Y
    Key: RDOXTESZEPMUJZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H8O/c1-8-7-5-3-2-4-6-7/h2-6H,1H3
    Key: RDOXTESZEPMUJZ-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01403 Y
SMILES
  • COc1ccccc1
UNII B3W693GAZH Y
பண்புகள்
C7H8O
வாய்ப்பாட்டு எடை 108.14 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.995 கி/செமீ3
உருகுநிலை −37 °C (−35 °F; 236 K)
கொதிநிலை 154 °C (309 °F; 427 K)
கரைதிறன் கரைவதில்லை
-72.79·10−6 செமீ3/மோல்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3700 mg/kg (rat, oral)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அனிசோல் (Anisole) அல்லது மீதாக்சிபென்சீன் (methoxybenzene) என்பது CH3OC6H5 என்னும் வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற நீர்மம், மற்றும் சோம்பு விதையை நினைவூட்டும் மணம் உடையது. இயற்கை மற்றும் செயற்கை வாசனை திரவியங்களில் இதன் வழிபொருட்கள் காணப்படுகின்றன. இச்சேர்மம் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. பல செயற்கை சேர்மங்கள் தயாரிப்பதற்கு முன்னோடியாக உள்ளது. இது ஒரு ஈதர் ஆகும்.

வினைபுரியும் தன்மை[தொகு]

அனிசோல் பென்சீனைக் காட்டிலும் விரைவாக அரோமாட்டிக் இலத்திரன்கவர் பதிலீட்டு வினைக்கு உட்படுகிறது. இது நைட்ரோபென்சீனை விட விரைவாகச் செயல்படுகிறது. மீதாக்சி தொகுதி ஒரு ஆர்த்தோ/பாரா வழிப்படுத்தும் தொகுதி, அதாவது எலக்ட்ரான்கவர் பதிலீட்டுவினை இந்தப்பகுதிகளில் முன்னுரிமையுடன் நடைபெறுகிறது. பென்சீனுக்கு எதிராக அனிசோலின் அதிகமான கருக்கவர்தன்மை மீதாக்சி தொகுதியின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது, இது பென்சீன் வளையத்தை மேலும் எலக்ட்ரான் நிறைந்ததாக ஆக்குகிறது. உடனிசைவு எலக்ட்ரான் வழங்கிகளை வளையத்தில் பெற்றுள்ள, பை மேகங்களால் மீதாக்சி தொகுதி வலுவாக பாதிக்கப்படுகிறது.

அனிசோல் நீரற்ற அசிட்டிக் காடியுடன் வினைபுரிந்து 4-மீதாக்சிஅசிட்டோபீனோன் கிடைக்கிறது. இது கருக்கவர்தன்மைக்கு உதாரணமாகும்.

CH3OC6H5 + (CH3CO)2O → CH3OC6H4C(O)CH3 + CH3CO2H

பெரும்பாலான அசிட்டோபினோன்கள் போல் இல்லாமல், மீதாக்சி தொகுதியின் தாக்கத்தினை பிரதிபலிக்கும் வகையில், மீதாக்சிஅசிட்டோபீனோனில் இரண்டாவது அசிட்டைலேற்றம் நடைபெறுகிறது. உதாரணமாக, P4S10 லசைன்சு காரணியால் [(CH3OC6H4)PS2]2. அனிசோலாக மாற்றப்படுகிறது.

ஈதர் பிணைப்பு மிகவும் நிலைப்புத்தன்மை உடையது, ஆனால் ஐதரோஅயோடிக் காடியினால் மெத்தில் தொகுதி நீக்கப்படுகிறது.

CH3OC6H5 + HI → HOC6H5 + CH3I

தயாரிப்பு[தொகு]

அனிசோல் வில்லியம்சன் ஈதர் தொகுப்புமுறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, சோடியம் பீனாக்சைடு, மெத்தில் புரோமைடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மெத்திலேற்ற காரணிகளுடன் வினைபுரியச் செய்து அனிசோல் தயாரிக்கப்படுகிறது.[1]

C6H5ONa+ + CH3Br → CH3OC6H5 + NaBr

பயன்கள்[தொகு]

அனிசோல் என்பது வாசனை திரவியங்கள், பூச்சிகளில் இனச்சேர்க்கையைத் தூண்டும் வண்ணம் சுரக்கும் ஒரு வகை வேதிப்பொருள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கு முன்னோடியாகும்.[2] எடுத்துக்காட்டாக, அனிசோலில் இருந்து செயற்கை அனிதோல் பெறப்படுகிறது.

பாதுகாப்பு[தொகு]

அனிசோல் 3700 மி.கி./கி LD50 ல் நச்சுத்தன்மையற்றது.[3] அதன் முக்கிய தீங்கு அதன் தீப்பற்றும் தன்மை ஆகும்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. G. S. Hiers and F. D. Hager (1941). "Anisole". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0058. ; Collective Volume, vol. 1, p. 58
  2. Helmut Fiege, Heinz-Werner Voges, Toshikazu Hamamoto, Sumio Umemura, Tadao Iwata, Hisaya Miki, Yasuhiro Fujita, Hans-Josef Buysch, Dorothea Garbe, Wilfried Paulus “Phenol Derivatives“ in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_313
  3. 3.0 3.1 MSDS பரணிடப்பட்டது சூலை 1, 2010 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிசோல்&oldid=3730446" இலிருந்து மீள்விக்கப்பட்டது