அந்த் அருங்கட்சியகம்

ஆள்கூறுகள்: 34°00′51″N 72°25′58″E / 34.0141°N 72.4329°E / 34.0141; 72.4329
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்த் அருங்காட்சியகம்
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
நிறுவப்பட்டது2009
அமைவிடம்அந்த், சுவாபி மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்
ஆள்கூற்று
நிறுவியவர்முனைவர் இசுரான் அலி
உரிமையாளர்கைபர் பக்துன்வா மாகாணம் அரசு
வலைத்தளம்www.kparchaeology.com
அந்த் அருங்காட்சியகம்
அருங்காட்சியகத்தின் வழியை காட்டும் ஒரு விளம்பரம்

அந்த் அருங்காட்சியகம் (Hund Museum) என்பது பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமன கைபர் பக்துன்வா மாகாணத்தின், சுவாபி மாவட்டத்தின் அட்டாக் அருகே சிந்து ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது. [1] [2]

அகழ்வாராய்ச்சி மற்றும் நிறுவுதல்[தொகு]

அந்த் தொல்பொருள் மற்றும் சுற்றுலா தளத்தின் திட்டம் 1994 இல் அங்கீகரிக்கப்பட்டது. சூன் 1996இல் அகழ்வாராய்ச்சி தொடங்குகியது. அகழ்வாராய்ச்சியின் போது இந்தோ-கிரேக்க மொழியின் அழகான வீடுகள், நாணயங்கள், நகைகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் மற்றும் குசானாவின் வீடுகள் கிடித்தன. மேலும், காபூல் சாகி மற்றும் இசுலாமிய காலங்களின் கட்டிடங்கள் காணப்பட்டன. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிறவற்றில் பண்டைய காலத்தின் மக்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்ற வியக்கத்தக்க பொறியியலை காட்டியது. அழகான அறைகள் மற்றும் அரங்குகள், தூண்களின் வரிசைகள், படிகள், தளங்களின் நிலைகள் மற்றும் அடுப்புகள் போன்றவையும் இருந்தன. அவர்கள் வாழ்ந்த இடங்களில் அழகிய நுழைவாயில்கள் மற்றும் திட்டமிடப்பட்ட வீதிகள் இருந்தன. அந்த் அருங்காட்சியகத்தை நிறுவுவதற்காக 33 கனல் நிலம் 2002 இல் கையகப்படுத்தப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மறைந்த முனைவர் அகமது அசன் தானியும், பின்னர் மாகாண கலாச்சார செயலாளர் அர்சத் சாமி கான் ஆகியோர் திறந்து வைத்தனர். [3]

அந்த் அருங்காட்சியகம் செல்லும் வழி, சுவாபி-ஜஹாங்கிரா சாலையில் உள்ள ஒரு அறிவிப்புப் பலகை

சிந்து நதியின் வலது கரையில் அமைந்துள்ள சுவாபி மாவட்டத்தின் மிகப் பழமையான நகரம் அந்த் ஆகும். இது மிகவும் பணக்கார வரலாற்றைக் கொண்டுள்ளது. காபூல் சாகி காலத்தின் முஸ்லிம் காலத்தை கடந்த பின்னர் காந்தாரா நாகரிகம் போன்ற பல்வேறு மக்களுடன் வெவ்வேறு காலங்களில் கடந்து செல்கிறது. கிமு 327 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்திய சமவெளிகளில் நுழைவதற்கு முன் இந்த கிராமத்தில் ஒரு இரவு கழித்தார். மற்றொரு பிரபல சீன புத்த துறவி சுவான்சாங் கி.பி 644 இல் இந்த பகுதி வழியாக சென்றுள்ளர். பெசாவர் மற்றும் சர்சதாவுக்குப் பிறகு, இது காபூல் சாகி கால வம்சத்தின் மூன்றாவது தலைநகராகும். [4]

அந்த் குறித்து தனது ஆய்வறிக்கை செய்தவரான முனைவர் அப்துர் ஏ. ஆர். ரகுமான் (பெசாவர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் துறை முன்னாள் தலைவர் ), [5] காபூலில் இருந்து பஞ்சாப் மற்றும் சுவத் வரை பரவிய மாநிலத்தின் சர்சதா (அப்பொழுது புஷ்கலாவதி) மற்றும் பெசாவர் (முந்தைய புருஷபுரம்) ஆகியவற்றுக்குப் பிறகு அந்த் மூன்றாவது தலைநகராக இருந்துள்ளது என்கிறார். [6]

குறிப்புகள்[தொகு]

  1. "BUDDHIST MONKS DELEGATION VISITS HUND MUSEUM IN SWABI". www.radio.gov.pk. Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  2. "Hund Museum library to be expanded". blog.travel-culture.com.
  3. "New findings highlight glory of ancient Hund city". www.dawn.com. https://www.dawn.com/news/742955. 
  4. "Lost glory: In Hund, retracing the steps of history". tribune.com.pk.
  5. "News and Views from Gandhāra". www.cgbs-gandhara.org. Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  6. "Hund Museum". www.thenews.com.pk. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த்_அருங்கட்சியகம்&oldid=3540998" இலிருந்து மீள்விக்கப்பட்டது