புஷ்கலாவதி

ஆள்கூறுகள்: 34°10′05″N 71°44′10″E / 34.168°N 71.736°E / 34.168; 71.736
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்கலாவதி
பண்டைய நகரம்

پُشْكَلآوَتي
புஷ்கலாவதி நகரத்தின் சிதிலங்கள்
புஷ்கலாவதி is located in பாக்கித்தான்
புஷ்கலாவதி
Shown within Pakistan#Khyber Pakhtunkhwa
புஷ்கலாவதி is located in Khyber Pakhtunkhwa
புஷ்கலாவதி
புஷ்கலாவதி (Khyber Pakhtunkhwa)
மாற்றுப் பெயர்புஷ்கலாவதி
இருப்பிடம்சார்சத்தா
கைபர் பக்துன்வா மாகாணம்
 பாக்கித்தான்
ஆயத்தொலைகள்34°10′05″N 71°44′10″E / 34.168°N 71.736°E / 34.168; 71.736
வகைபண்டைய நகரங்கள்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 1400
காலம்காந்தாரம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1902
அகழாய்வாளர்ஜான் மார்ஷல்
மோர்டைமர் வீலர்

புஷ்கலாவதி (Pushkalavati) (பஷ்தூ மற்றும் உருது: پُشْكَلآوَتي பண்டைய பரத கண்டத்தின் வடமேற்கில் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த காந்தார நாட்டின் தலைநகரம் ஆகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை, அகாமனிசியப் பேரரசின் கிழக்குப் பிரதேசத்தில் புஷ்கலாவதி நகரம் சிறப்புடன் விளங்கியது.

தற்போது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சார்சத்தா மாவட்டத்தின் தலைநகரான சார்சத்தா நகரத்தில் பாயும் சுவாத் ஆறு-காபுல் ஆறுகள் கலக்குமிடத்தில் புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை புஷ்கலாவதிகண்டறியப்பட்டது.[2][3]

பண்டைய வரலாற்றில் புஷ்கலாவதி[தொகு]

சொராஷ்டிரிய சமய வேத நூலான அவெத்தாவில், புஷ்கலாவதி நகரத்தைச் சுற்றிய பகுதிகளை, கடவுள் அகுரா மஸ்தா படைத்தார் எனக்கூறுகிறது. பாக்திரியாவின் மணிமகுடம் என அழைக்கப்படும் புஷ்கலாவதி நகரம், பண்டைய தட்சசீலத்தின் அருகில் உள்ளது. [4]

பெயர்க்காரணம்[தொகு]

சமஸ்கிருத மொழியில் புஷ்கலாவதி (पुष्कलावती) எனில் தாமரை போன்ற வடிவில் அமைக்கப்பட்ட நகரம் எனபொருளாகும். இராமாயணக் காவியத்தின்படி, இராமரின் தம்பியான பரதனின் மகன் புஷ்கலன் என்பவர் நிறுவியதாக அறியப்படுகிறது.[5]

புஷ்கலாவதியின் சிதிலங்கள்[தொகு]

புஷ்கலாவதி தொல்லியல் களத்தின் பௌத்தச் சிற்பங்கள்
புஷ்கலாவதியின் பௌத்த தலைச்சிற்பங்கள்
புஷ்கலாவதில் கண்டெடுக்கப்பட்ட உரோமானிய நாணயங்கள், கிமு 500/490-485)

பண்டைய புஷ்கலாவதி நகரத்தில் பால ஹிசார் போன்ற இரண்டு தொல்லியல் களங்களில் சிதிலமடைந்த கிமு 2-ஆம் நூற்றாண்டின் பௌத்தச் சிற்பங்கள், தூபிகள், விகாரைகள் அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டது. [6][7]மேலும் இத்தொல்லியல் களத்தில் கிமு 1420-1160 மற்றும் கிமு 1400 - 800 காலத்திய மெருகூட்டப்பட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டது. [8] இரண்டாம் அகழ்வாய்வில் கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவப்பு மட்பாண்ட அகண்ட கிண்ணங்கள் கண்டறியப்பட்டது.[9]

கிமு ஆறாம் நூற்றாண்டின் அகாமனிசியப் பேரரசின் கிழக்கில் உள்ள காந்தார மாகாணத்தின் மையமாக புஷ்கலாவதி நகரம் விளங்கியது.[10] பண்டைய புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை முதன்முதலில் 1902-இல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அகழ்வாய் மேற்கொண்டார். 1962-இல் மோர்டைமர் வீலர் அகாமனிசியப் பேரரசின் தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sagar, Krishna Chandra (1992). Foreign Influence on Ancient India. Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788172110284. 
  2. Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 515.
  3. Coningham, R.A.E. and C. Batt, 2007. "Dating the Sequence", in R.A.E. Coningham and I. Ali (eds.), Charsadda: The British-Pakistani Excavations at the Bala Hisar, Society for South Asian Studies Monograph No. 5, BAR International Series 1709, Archaeopress, Oxford, pp. 93-98
  4. Encyclopædia Britannica: Gandhara பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  5. Gandhara and Its Art Tradition, Ajit Ghose, Mahua Publishing Company, 1978, p. 14
  6. Investigating ancient Pushkalavati Pushkalavati Archaeological Research Project
  7. Ali et al. 1998: 6–14; Young 2003: 37–40; Coningham 2004: 9.
  8. Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 515.
  9. Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 516.
  10. Rafi U. Samad, The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys. Algora Publishing, 2011, p. 32 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0875868592

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்கலாவதி&oldid=3611660" இலிருந்து மீள்விக்கப்பட்டது