அஞ்சும் மௌத்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சும் மௌத்கில்
Anjum Moudgil
2016 ஆம் ஆண்டில் அஞ்சும் மௌத்கில்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்அஞ்சும் மௌத்கில்
தேசியம்இந்தியன்
பிறப்பு5 சனவரி 1994 (1994-01-05) (அகவை 30)[1]
சண்டிகர், இந்தியா[1]
உயரம்165 செ.மீ[1]
எடை69 கி.கி[1]
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)காற்றுத் துப்பாக்கி
பல்கலைக்கழகம் அணிபஞ்சாப் பல்கலைக்கழகம்
அணிஇந்திய அணி
பயிற்றுவித்ததுதீபாலி தேசுபான்டே[1]
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசைஉலகத் தரவரிசை எண் 2 (10மீ காற்றுத் துப்பாக்கி)
பதக்கத் தகவல்கள்
Women's குறி பார்த்துச் சுடுதல்
நாடு  இந்தியா
உலக வெற்றியாளர் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 10மீ காற்றுத் துப்பாக்கி {{{2}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 சாங்வோன் 10 மீ அணி காற்றுத் துப்பாக்கி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 கோல்டு கோசுட்டு 50 மீ துப்பாக்கி 3 நிலைகள்
பொதுநலவாய விளையாட்டுக்கள்]]
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 பிரிசுபேன் 10 மீ காற்றுத் துப்பாக்கி]]
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 50 மீ துப்பாக்கி {{{2}}}

அஞ்சும் மௌத்கில் (Anjum Moudgil) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1994 ஆம் ஆன்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சண்டிகர் நகரைச் சேர்ந்த இவர் பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3][4][5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சண்டிகரில் உள்ள தூய நெஞ்ச மூத்தோர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே அஞ்சும் துப்பாக்கி சுடத் தொடங்கினார்.[6] சண்டிகரின் டி.ஏ.வி கல்லூரியில் வாழ்வியல் புலத்தில் பட்டப்படிப்பும் முதுகலைப் படிப்பும் முடித்தார்.[7] விளையாட்டு உளவியலில் பாடத்திலும் முதுகலை படித்து முடித்தார். இவர் ஒரு தீவிரமான படைப்புக் கலைஞராவார். இவரது பல கலைப்படைப்புகளை விற்பனை செய்துள்ளார்.

தொழில்[தொகு]

சாங்வோனில் நடந்த பன்னாட்டு குறி பார்த்து சுடுதல் கூட்டிணைவு உலக வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 10 மீ காற்றுத் துப்பாக்கிப் போட்டியில் அஞ்சும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[8]

24 வயதான அஞ்சும் மதிப்புமிக்க போட்டிகளில் இந்திய மூத்தோர் அணியின் பதக்கக் கணக்கைத் திறக்க எட்டு இறுதிப் போட்டிகளில் மொத்தம் 248.4 புள்ளிகளை எடுத்துள்ளார்.[9]

மியூனிக்கில் நடைபெற்ற 2016 உலகக் கோப்பையில் 9 ஆவது இடமும் உலக பல்கலைக்கழக வெற்றியாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார்.

2017[தொகு]

இவர் 10 மீ காற்றுத் துப்பாக்கி போட்டியில் சர்தார் சாசன் சிங் சேத்தி நினைவு வல்லுநர்கள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2018[தொகு]

மெக்சிகோவில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடும் கூட்டிணைவு உலகக் கோப்பையில் பெண்கள் 50 மீ துப்பாக்கி 3 நிலைகள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 455.7 புள்ளிகள் எடுத்து அஞ்சும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். தகுதி சுற்றில் 589 புள்ளிகள் எடுத்து இவர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனையை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் முறியடித்தார்.

2019[தொகு]

2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாளன்று 10 மீ காற்றுத் துப்பாக்கி வகை சுடுதலில் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[3][10] மகளிர் 50 மீ 3 நிலை வகையில் இந்தியாவின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

விருதுகள்[தொகு]

2019 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருதுக்கு இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 விளையாட்டு வீரர்களில் அஞ்சுமும் ஒருவராவார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Anjum Moudgil". Gold Coast 2018. Archived from the original on 16 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Shooting World Cup: Anjum Moudgil wins silver in women's Rifle 3 Positions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 March 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  3. 3.0 3.1 "With bullets and paintbrush, shooter Anjum Moudgil finds her range and canvas". Andrew Amsan. Indian Express. 17 March 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  4. "After shooting silver, Anjum says Haryana,Chandigarh did not back her". Kartik Sood. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 March 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  5. "CWG 2018: Complete list of India's gold medalist from 21st Commonwealth Games in Gold Coast". டைம்ஸ் நவ். 15 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  6. "Shooter of the week aiming high". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 March 2011. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
  7. "4 DAV College-10 shooters all set for World Cup". Hindustan Times. 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
  8. "Shooting World Cup 2021: India settle for silver in women's 50m rifle 3 positions team event". India Today (in ஆங்கிலம்). March 25, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  9. "Shooters Anjum Moudgil, Apurvi Chandela secure Olympic quotas for India". India Today (in ஆங்கிலம்). September 3, 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
  10. "Apurvi Chandela Becomes World No.1 in 10m Air Rifle ISSF Rankings". News18. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
  11. "Shooter Anjum elated over Arjuna honour". Tribune. 18 August 2019 இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191212130202/https://www.tribuneindia.com/news/shooter-anjum-elated-over-arjuna-honour-819287. 

புற இணைப்புகள்[தொகு]

  • Anjum Moudgil on Twitter
  • Anjum Moudgil at the International Shooting Sport Federation
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சும்_மௌத்கில்&oldid=3920523" இலிருந்து மீள்விக்கப்பட்டது