அக்காபா குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சினாய்க் குடாநாட்டின் செய்மதிப் படம். செங்கடல், அக்காபா குடா என்பனவும் காணப்படுகின்றன.

அக்காபா குடா (அரபு மொழி: خليج العقبة; ஒலிபெயர்ப்பு: காலீஜ் அல்-'அக்காபா) செங்கடற் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய குடா ஆகும். இசுரேலிலும், பல 20 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மூலங்களிலும் இக் குடாவை எய்லாட் குடா என அழைக்கின்றனர்.

[தொகு] புவியியல்

இக் குடா சினாய்க் குடாநாட்டுக்குக் கிழக்குத் திசையிலும், அராபியத் தலை நிலத்துக்கு மேற்குத் திசையிலும் அமைந்துள்ளது. இக் குடாவும் சுயெசுக் குடாவும் செங்கடலின் வடபகுதியின் நீட்சியாக அமைந்துள்ளன. அக்காபா குடா, சுயெசுக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஜோர்தான், எகிப்து, இசுரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இக் குடாவைத் தமது எல்லைகளுள் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. நடுப் பகுதியில் இதன் ஆழம் கூடிய அளவாக 1850 மீட்டர்கள் வரை உள்ளது.


அமைவிடம்: 28°41′10″N 34°41′44″E / 28.68611, 34.69556

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்காபா_குடா&oldid=977633" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்