ஆறாக்சிசன் இருபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாக்சிசன் இருபுளோரைடு
Hexaoxygen difluoride
இனங்காட்டிகள்
12191-80-9 Y
InChI
  • InChI=1S/F2O6/c1-3-5-7-8-6-4-2
    Key: PHJAHINOOJESQK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • FOOOOOOF
பண்புகள்
F2O6
வாய்ப்பாட்டு எடை 133.99 g·mol−1
தோற்றம் 60 கெல்வின் வெப்பநிலையில் அடர் பழுப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆறாக்சிசன் இருபுளோரைடு (Hexaoxygen difluoride) என்பது O6F2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] புளோரினும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அறியப்பட்டுள்ள ஆக்சிசன் புளோரைடுகளில் ஒன்றாகும்.[3]எக்சா ஆக்சிசன் டைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

60 முதல் 77 கெல்வின் வரையிலான வெப்பத்தில் குறிப்பிட்ட மோலார் விகிதத்தின் F2—O2 வாயுக் கலவையின் மூலம் மின்சாரத்தைச் செலுத்துவதன் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். வாயுக்களின் விகிதம் இங்கு 6:2 என கணிக்கப்பட்டுள்ளது.[4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

ஆறாக்சிசன் இருபுளோரைடு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகும். 60 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் அடர்பழுப்பு நிற படிகத் திண்மம் போல காணப்படுகிறது. மெதுவாக வெப்பப்படுத்தினால் இது ஆக்சிசன் புளோரைடுகளாகவும் ஓசோனாகவும் சிதைகிறது. விரைவாக 90 கெல்வின் வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் வெடித்து O2 மற்றும் F2 வாயுக்களை உருவாக்குகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Streng, A. G.; Grosse, A. V. (January 1966). "Two New Fluorides of Oxygen, O5F2 and O6F2 1,2". Journal of the American Chemical Society 88 (1): 169–170. doi:10.1021/ja00953a035. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja00953a035. பார்த்த நாள்: 19 May 2023. 
  2. Bailar, John Christian; Trotman-Dickenson, A. F. (1973). Comprehensive Inorganic Chemistry: Ge, Sn, Pb, Group VB, Group VIB, Group VIIB (in ஆங்கிலம்). Pergamon Press. p. 764. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-017275-0. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
  3. Bretherick, L. (27 October 2016). Bretherick's Handbook of Reactive Chemical Hazards (in ஆங்கிலம்). Elsevier. p. 1622. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-6250-8. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
  4. 4.0 4.1 F Fluorine: Compounds with Oxygen and Nitrogen (in ஆங்கிலம்). Springer Science & Business Media. 29 June 2013. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-06339-2. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாக்சிசன்_இருபுளோரைடு&oldid=3905490" இலிருந்து மீள்விக்கப்பட்டது