பி. கே. தாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால கிஷண் தாப்பர் (Bal Krishen Thapar) (18 அக்டோபர் 1921 – 6 செப்டம்பர் 1995) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். இவர் 1984-இல் இந்தியாவில் பாரம்பரிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை முன்னெடுக்கும் நோக்குடன் இந்திய தேசியக் கலை மற்றும் பண்பாட்டு மரபுக்கான அறக்கட்டளையை நிறுவியவர் ஆவார்.[1]

லூதியானாவின் துணி வணிகருக்கு பிறந்த பால் கிஷண் தாப்பர், லாகூரில் அமைந்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து, தட்சசீலம்|தட்சசீலத்தில் அமைந்த இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் மோர்டிமர் வீலர் தலைமையின் கீழ் தொல்லியல் பயிற்சி மேற்கொண்டார். இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில் ஆசியத் தொல்லியல் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

பால் கிஷண் தாப்பர் சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களமான காளிபங்கான், தில்லியில் உள்ள புராணா கிலா மற்றும் கர்நாடகத்தில் உள்ள மஸ்கி தொல்லியற்களகளை அகழாய்வு செய்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் அருகே பாரா பள்ளத்தாக்கில் அகழாய்வு செய்துள்ளார்.[2] மேலும் இவர் அஸ்தினாபுரம், ரூப்நகர், கௌசாம்பி, சோமநாதபுரம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுப்ப் பணிகளை செய்துள்ளார்.

மேலும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வெளியிடும் இந்தியத் தொல்லியல் எனும் இதழின் ஆசிரியராக 1973 முதல் 1979-ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Cleere, Henry (1984). Approaches to the Archaeological Heritage: A Comparative Study of World Cultural Resource Management Systems. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. vii.
முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1978 - 1981
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._தாபர்&oldid=3350026" இலிருந்து மீள்விக்கப்பட்டது