கார்ட்டீசியன் பெருக்கற்பலன் (கோட்டுருவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன்
இரு கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன்

கோட்டுருவியலில் G மற்றும் H ஆகிய இரு கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் (Cartesian product) G H[1] என்பது பின்வருமாறு அமையும் கோட்டுருவாகும்

V(G ) = H V(G) × V(H);
  • u = v மற்றும் u' , v' இரண்டும் H இல் அடுத்துள்ள முனைகளாக
அல்லது
u' = v' மற்றும் u , v இரண்டும் G இல் அடுத்துள்ள முனைகளாக
இருந்தால், இருந்தால் மட்டுமே
  • (u,u' ) , (v,v' ) இரண்டும் G H இல் அடுத்துள்ள முனைகளாக இருக்கும்.

சிலசமயங்களில் கோட்டுருக்களின் பெருக்கற்பலன் "பெட்டிப் பெருக்கம்" (box product) எனவும் அழைக்கப்படுகிறது [Harary 1969].

(F G) H மற்றும் F (G H) கோட்டுருக்கள் இரண்டும் இயல்பாகவே சம அமைவியமுடையது என்பதால் அவற்றின் கார்ட்டீசியன் பெருக்கல் சேர்ப்புப் பண்பு உடையது.

(F G) H = F (G H)

கோட்டுருக்களின் சம அமைவிய சமானப் பகுதிகளின் மீது வரையறுக்கப்படும்போது கார்ட்டீசியன் பெருக்கல் செயலி பரிமாற்றுத்தன்மை கொண்டது; G H மற்றும் H G இரண்டும் வலிமையாக சம அமைவியமுடையது. ஆனால் பெயரிடப்பட்ட கோட்டுருக்களின் மீது வரையறுக்கப்படும் செயலியாக இது பரிமாற்றுத்தன்மையற்றது.

வரலாறு[தொகு]

(Imrich & Klavžar 2000) இன் கூற்றுப்படி கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் 1912 ஆம் ஆண்டில் ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் மற்றும் ரசலால் வரையறுக்கப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியக் கணிதவியலாளர் "ஜெர்த் சபிதுசு"வால் (Gert Sabidussi (1960)) மீண்டும் கண்டறியப்பட்டது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

K2 K2 = C4.
  • K2 மற்றும் பாதை கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கல் ஒரு ஏணி கோட்டுரு.
K2 Pn
இரு மீகனசதுரக் கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கல் மற்றொரு மீகனசதுரக் கோட்டுரு.
Qi Qj = Qi+j.

பண்புகள்[தொகு]

  • ஒரு இணைப்புள்ள கோட்டுருவானது கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கலாக இருந்தால் அதனை பகாக் கோட்டுருக்களின் (மேற்கொண்டு கோட்டுருக்களின் பெருக்கலாகப் பிரிக்க முடியாத கோட்டுருக்கள்) பெருக்கலாகத் தனித்த முறையில் காரணிப்படுத்த முடியும். [2] ஒரு இணைப்பில்லா கோட்டுருவையும் இரு வேறுபட்ட வழிகளில் பகாக் கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கலாக எழுத முடியும் என விளக்கப்பட்டது(Imrich & Klavžar 2000):
(K1 + K2 + K22) (K1 + K23) = (K1 + K22 + K24) (K1 + K2),

இதிலுள்ள + குறியானது இணப்பில்லா ஒன்றிப்பையும் மேலொட்டுகள் கார்ட்டீசியன் பெருக்கலின் அடுக்கையும் குறிக்கின்றன.

  • கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கலிலுள்ள ஒவ்வொரு கோட்டுருவும் முனை-கடப்புக் கோட்டுருவாக இருந்தால், இருந்தால் மட்டுமே, கார்ட்டீசியன் பெருக்கற்பலனாகக் கிடைக்கும் கோட்டுருவும் முனை-கடப்புடையதாக இருக்கும்.[3]
  • கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கலிலுள்ள ஒவ்வொரு கோட்டுருவும் இருகூறு கோட்டுருவாக இருந்தால், இருந்தால் மட்டுமே, கார்ட்டீசியன் பெருக்கற்பலனாகக் கிடைக்கும் கோட்டுருவும் இருகூறு கோட்டுருவாக இருக்கும்.

இயற்கணித கோட்டுருவியல்[தொகு]

கோட்டுரு இன் முனைகளின் எண்ணிக்கை ; அண்மை அணி . கோட்டுரு இன் முனைகளின் எண்ணிக்கை ; அண்மை அணி எனில்: , கோட்டுருக்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் கோட்டுருவின் அண்மை அணி:

,

இதில் - அணிகளின் கிரொனேகேர் பெருக்கத்தின் (Kronecker product) குறியீடு; - முற்றொருமை அணி.[5]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]