விலங்கு வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்கு வளர்ப்பு (Animal breeding) விலங்கியலின் ஒரு கிளைப்பிரிவாகும். இத்துறை ஒரு கால்நடையின் மதிப்பிட்ட இனவளர்ப்பு விழுமியத்தை (மஇவி- EBV) மீத்திற நேரியல் சாய்வற்ற முன்கணிப்பு முறையாலும் பிற முறைகளாலும் மதிப்பிட முயல்கிறது. வளர்ச்சி வீதம், முட்டை, இறைச்சி, பால், கம்பள விளைச்சலில் உயர்நிலை மி இ வி அமைந்த தேர்ந்தெடுத்த வளர்ப்பின விலங்குகள் உலக முழுவதும் கால்நடை வளர்ப்பைப் புரட்சிகரமாக மாற்றியுள்ளன.விலங்கு வளர்ப்பின் அறிவியல் கோட்பாடு உயிரித்திரள் மரபியல், மரபியலின் அளவையியல், புள்ளியியல், மூலக்கூற்று மரபியல் ஆகிய புலங்களை உள்ளடக்குகிறது. இக்கோட்பாடு செவால் உரைட், ஜாய்லுழ்சு, சார்லசு எண்டர்சன் ஆகியோரின் முன்னோடிப் பணிகளால் உருவாகியதாகும்.

வளர்ப்பினத் தொகுப்பு[தொகு]

திட்டமிட்ட தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்துக்காக கருதிக் கொட்டிலில் வைத்திருக்கும் விளங்கள் வளர்ப்பினத் தொகுப்பு எனப்படுகிறது. தனியர் விலங்குகளை வளர்க்க முனையும்போது அவர்கள் தூய வளர்ப்பு விலங்குகளின் சில குறிப்பிட்ட பண்புநலங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்; அல்லது குறிப்பிட்ட கள முனைவில் உயர்திறன்களை விளைவிக்கும் புதிய வேறுபட்ட வளர்ப்பின வகைகளை உருவாக்க, அவர்கள் ஊடினப்பெருக்க முறையில் கலப்பின வகையை உருவாக்குகின்றனர். எடுத்துகாட்டாகப் பன்றிகளை இரைச்சிக்காக வளர்க்கும்போது "அவை உடலத்தோடு வேகமாக வளர்திறமும் பெற்று சதைத்திரட்சியோடு ஒல்லியாகவும் இனப்பெருக்க வல்லமை மிக்கதாகவும் அமைதல் வேண்டும்."[1] " குதிரைகளின் வளர்ப்பினத் தொகுப்பில் இருந்து விரும்பியபடி மேற்கொண்ட தெரிந்தெடுப்புகளால் " பலவகை குதிரை வளர்ப்பினங்கள் குறிப்பிட்ட செயல்திறப் பண்புகளுடன் உருவாகியுள்ளன.[2]

தூய வளர்ப்பு இனப்பெருக்கம்[தொகு]

ஒரேவகை வளர்ப்பின விலங்குகளை அவ்வினத்தின் பேணுதலுக்காக கூடச்செய்தல் தூய வளர்ப்பு இனப்பெருக்கம் எனப்படுகிறது. வேறுபட்ட வளர்ப்பினங்களைக் கூடச்செய்தல் நடைமுறைக்கு எதிராக, தூய வளர்ப்பு இனப்பெருக்கம் அவற்றின் நிலைத்த பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கையளித்துப் பேணுகிறது. நல்லவற்றில் நல்லவற்றை அகவளர்ப்பால் உருவாக்கி, கணிசமான உயர்தெரிவும் உயர்பண்புகளின் தெரிவும் வழியாக, மூல வளர்ப்புத் தொகுப்பை விட மிக சிறப்பான வளர்ப்பினத்தை உருவாக்கலாம்.

இத்தகைய வளர்ப்பினவகைகள் வளர்ப்புப் பதிவேட்டில் பதிவுசெய்து உரிய நிறுவனம், வளர்ப்பு அட்டவணை நூலைப் பேணலாம்.

வளர்ப்பினங்களும் மரபுவழிக் கையளிப்பும்[தொகு]

முதலாவதாக, தெரிவு செய்த பெற்றோர்கள் தன் மந்தையின் சர்ரசரி மரபுப்பேற்றைவிட உயர்ந்த ஈட்டத்தைப் பெற்றிராவிட்டால், தலைமுறையின் மரபியல் ஈட்ட வீதமும் மேம்பட வாய்ப்பில்லை. இது குறிப்பிட்ட பண்புநல மரபுக் கையளிப்பு ஈட்ட வீதம் உயர்வாக இருந்தாலும் கூட இயலாது.

இரண்டாவதாக, மரபியல் முன்னேற்ற அளவு குறிப்பிட்ட பண்புநலத்தின் மரபுக் கையளிப்பு ஈட்ட வீதமனெவ்வலவு உயர்வாக அமைகிறது என்பதைப் பொறுத்தது.

பொதுவாக, வளர்ப்புக்காக தேர்ந்தெடுத்த பெற்றோர்களின் உயர்வையும் குறிப்பிட்ட பண்புநலத்தின் மரபுக் கையளிப்பு வீதத்தின்ஊயர்வையும் பொறுத்து இத்தெரிவால் கூடுதலான மரபியல் முன்னேற்றம் கிடைக்கும்.

கலப்பின வீறு, கள ஆய்வுகளால் தூய வளர்ப்பினத்துக்கு நேரெதிராக விளங்குதல் அறிப்பட்டுள்ளது.

புறக்கடைப்புற இனப்பெருக்கம்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவில், ஈட்ட நோக்கிற்காக மட்டும் தன்னைப் பதிவுசெய்யாமல் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தினால் விலங்கை வளர்ப்பவர் ஒரு புறக்கடைப்புற இனப்பெருக்கம் செய்பவராகக் கருதப்படுகிறார்t. சில நேர்வுகளில் இவை உடல்நலம் பற்றிக் கருதாமல் அழகுப் பார்வைக்கான குறுகிய நோக்கில் வளர்க்கப்படுகின்றன.[3] என்றாலும், இந்தச் சொல் பொருளற்றுப் போகிறது. ஏனெனில், ஒரு புறக்கடைப்புற இனப்பெருக்கம் செய்பவர் பல வளர்ப்பின நாய்வகைகளை உருவாக்கினால், அவர் நாய்க்குட்டியகங்களுடன் இணைந்து செயல்படுகிறவராகவே உள்ளார். பெரும்பாலான நாய்க்குட்டி வளர்ப்பகங்கள் அமெரிக்கச் சட்டங்களின்படி பதிவுரிமம் பெற்றுள்ளன.[4]

மேலும் படிக்க[தொகு]

The seven biggest breeders[5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கல்வி மையங்கள்[தொகு]

இதழ்கள்[தொகு]

நிறுவனங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_வளர்ப்பு&oldid=3578778" இலிருந்து மீள்விக்கப்பட்டது