இணைத் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைத் தோற்றத்திற்கு -ஃபெய்ன்மன் படம். ஒரு ஃபோட்டான், ஒரு பாசிட்ரான் - எலெக்ட்ரான் இணையாகிறது.

இணைத்தோற்றம் (pair production) என்பது ஓர் அணுக்கருப் புலத்தில் ஓர் ஃபோட்டான் ( Photon) அல்லது ஒளியன் விரைந்து செல்லும் போது, அப்புலத்துடன் வினைபட்டு ஒரு பாசிட்ரானையும் ஓர் எலக்ட்ரானையும் தோற்றுவிக்கின்றது. கிளர்ந்த நிலையிலுள்ள ஒரு கரு அதனுடைய சாதாரண நிலைக்குத் திரும்பும் போது தோன்றும் இணை, உள் இணைத் தோற்றம் (Internal pair production) எனப்படும். நிறை-ஆற்றல் சமன்பாட்டிற்குட்பட்டு ஆற்றல் பொருளாக மாறுவதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக இணைத் தோற்றத்தைக் (ஓர் அடிப்படைத் துகளும் அதற்குரிய எதிர்த் துகளும் தோன்றுவதைக்) கூறலாம். இணைத் தோற்றம் நிகழ வேண்டுமானால் ஒளியனின் ஆற்றல் 1.02 மில்லியன் எலக்ட்ரான் வோல்டை விட அதிகமாக இருக்கவேண்டும். இவ்வாற்றல் எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரானின் நிறைக்குச் சமமான ஆற்றலாகும்.[1]


உசாத்துணைகள்[தொகு]

  1. Das, A.; Ferbel, T. (2003-12-23). Introduction to Nuclear and Particle Physics (in ஆங்கிலம்). World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814483339.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைத்_தோற்றம்&oldid=2803834" இலிருந்து மீள்விக்கப்பட்டது