ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°03′46″N 80°22′8″E / 13.06278°N 80.36889°E / 13.06278; 80.36889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி
Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women
குறிக்கோளுரைGo Beyond
வகைதனியார், சுய உதவி
உருவாக்கம்2005
சார்புசென்னைப் பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர். எஸ். பத்மாவதி
மாணவர்கள்3400
அமைவிடம், ,
13°03′46″N 80°22′8″E / 13.06278°N 80.36889°E / 13.06278; 80.36889
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்Official Website

ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இது தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலில் (என்ஏஏசி) ஏ- தரச்சான்றை பெற்றுள்ளது.[1]

வரலாறு[தொகு]

1937 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஸ்வேதாம்பரர் ஸ்டானக்வாசி சமண கல்வி சங்கம் நிறுவப்பட்டது. இந்த கல்விச் சங்கத்தின் ஒரு பிரிவாக ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு 2004 செப்டம்பர் 16 அன்று அனுமதி வழங்கியது. இக்கல்லூரியானது 2005 மே 18 இல் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது.

கல்வி[தொகு]

இக்கல்லூரிகளில் 13 இளங்கலை மற்றும் 3 முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

முதல் வேலைநேரம் ( முற்பகல்: 8.00 முதல் பிற்பகல் 12.40 வரை)

வணிகவியல் படிப்புகள்

  • பி.காம் (ஹானர்ஸ்)
  • பி.காம் (பொது)
  • பி.காம் (கணக்கியல் மற்றும் நிதி)
  • பி.காம் (பெருவணிக செயலாளர்)
  • எம்.காம் (கணக்கியல் மற்றும் நிதி)
  • எம்.பில் (வர்த்தகம்)

அறிவியல் படிப்புகள்

  • பி.எஸ்சி (கணினி அறிவியல்)
  • பி.எஸ்சி (கணிதம்)
  • பி.எஸ்சி (உளவியல்)
  • பிசிஏ

மேலாண்மைப் படிப்புகள்

  • பிபிஏ (வணிக நிர்வாகம்)

ஊடகம் மற்றும் தொடர்பியல் படிப்புகள்

  • பி.எஸ்சி (காட்சித் தொடர்பியல்)
  • எம்.ஏ (ஊடகம் மற்றும் தொடர்பியல்)


இரண்டாம் வேலை நேரம் ( பிற்பகல்: 1.10 முதல் -5.50 வரை)

வணிகவியல் படிப்புகள்

  • பி.காம் (பொது)
  • பி.காம் (கணக்கியல் மற்றும் நிதி)
  • பி.காம் (பெருவணிக செயலாளர்)
  • பி.காம் (வங்கி மேலாண்மை)
  • பி.காம் (கணினி பயன்பாடுகள்)
  • பி.காம் (தகவல் அமைப்பு மேலாண்மை)

அறிவியல் படிப்புகள்

  • பி.சி.ஏ (கணினி பயன்பாடுகள்)
  • எம்.எஸ்சி கணினி அறிவியல்
  • ஆய்வியல் நிறைஞர் (கணினி அறிவியல்)

சமய படிப்புகள்

  • ஜைனவியல்- பட்டயப் படிப்பு

குறிப்புகள்[தொகு]

  1. "Accreditation for women college". thehindu.com/. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  2. "Shasun College Programs Offered". shasun.edu.in/. Shasun College. Archived from the original on 9 May 2015. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.

வெளி இணைப்புகள்[தொகு]