உள்ளடக்கத்துக்குச் செல்

வைக்கிங் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கிங் 2 விண் சுற்றுக்கலன்
வைக்கிங் சுற்றுக்கலன்
இயக்குபவர்நாசா
முதன்மை ஒப்பந்தக்காரர்ஜெட் ப்ரோபுல்சியன் ஆய்வகம்
திட்ட வகைவிண் சுற்றுக்கலன்
செயற்கைக்கோள்செவ்வாய் (கோள்)
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்ஆகஸ்டு 7, 1976[1][2]
ஏவப்பட்ட நாள்செப்டம்பர் 9, 1975[1][2]
ஏவுகலம்டைடன் IIIE/செண்டூர்
திட்டக் காலம்செப்டம்பர் 9, 1975[2] முதல் ஜூலை 25, 1978 வரை[2]
1050 நாட்கள்
தே.வி.அ.த.மை எண்1975-083A
இணைய தளம்Viking Project Information
நிறை883 கிகி
திறன்620 வா
சுற்றுப்பாதை உறுப்புகள்
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்0.816299166
சேய்மைநிலை33176 கிமீ
அண்மைநிலை302 கிமீ
சுற்றுக்காலம்24.08 மணி

வைக்கிங் 2 (Viking 2) என்பது நாசாவினால் செவ்வாய் கோளை ஆராய்வதற்காக வைக்கிங் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விண்கலம் ஆகும். இதுவும் வைக்கிங் 1 மாதிரியான பணியைச் செய்யவே அனுப்பப்பட்டது. [2] இது விண் சுற்றுக்கலன் (orbiter) மற்றும் கோள் இறங்கு விண்கலன் (lander) என இரண்டு பகுதிகளை உடையது. வைக்கிங் 2 கோள் இறங்கு விண்கலன் 1316 நாட்கள் (1281 செவ்வாய் நாட்கள்) தனது பணியைச் செய்துள்ளது, ஏப்ரல் 11, 1980 இல் இதன் தேக்க மின்கலங்கள் (Batteries) பழுது ஆனாதால் இதன் பணி முடிந்து விட்டது. ஆனால் இதன் விண் சுற்றுக்கலன் ஜூலை 25, 1978 [2] வரை தனது பணியைச் செய்துள்ளது. சுமார் 16000 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

பணி

[தொகு]

செப்டம்பர் 9 1975 இல் வைக்கிங் 2 ஏவப்பட்டது, தனது 333 நாட்கள் பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க் கோளை அடைந்து, வெளிப்புறமாகப் புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆகஸ்ட் 7 1976 இல் செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது. செப்டம்பர் 3 1976 இல் தரையிறங்கியுள்ளது.

வைக்கிங் 2 புகைப்படத் தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nelson, Jon. "Viking 2". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 2, 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Williams, David R. Dr. (December 18, 2006). "Viking Mission to Mars". நாசா. பார்க்கப்பட்ட நாள் February 2, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கிங்_2&oldid=2765954" இலிருந்து மீள்விக்கப்பட்டது