வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோயில்
Appearance
வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் பட்டுக்கோட்டைக்கு வடமேற்கில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் உள்ள ஊரணிபுரம் அருகே அமைந்துள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலில் மூலவராக செல்லியம்மன் உள்ளார். காவல் தெய்வமாக முனியாண்டவர் உள்ளார். முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ளது.[1]
காளியின் சிறப்பு
[தொகு]குருடைக் கானகம் உகந்த காளி என்றும் அறுவர்க்கிளைய நங்கை என்றும் காளியை இளங்கோவடிகள் கூறுகின்றார். அந்த மாகாளி பல்வேறு தலங்களில் பல்வேறு பெயர்களுடன் காணப்படுகிறார். செல்லியம்மன், செல்லாண்டியம்மன், பிடாரியம்மன், வடக்கு வாயிற்செல்வி என்ற பல நிலைகளில் காளி அமைவார். [1]