வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்டுவாக்கோட்டை செல்லியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பட்டுக்கோட்டைக்கு வடமேற்கில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் உள்ள ஊரணிபுரம் அருகே அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவராக செல்லியம்மன் உள்ளார். காவல் தெய்வமாக முனியாண்டவர் உள்ளார். முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ளது.[1]

காளியின் சிறப்பு[தொகு]

குருடைக் கானகம் உகந்த காளி என்றும் அறுவர்க்கிளைய நங்கை என்றும் காளியை இளங்கோவடிகள் கூறுகின்றார். அந்த மாகாளி பல்வேறு தலங்களில் பல்வேறு பெயர்களுடன் காணப்படுகிறார். செல்லியம்மன், செல்லாண்டியம்மன், பிடாரியம்மன், வடக்கு வாயிற்செல்வி என்ற பல நிலைகளில் காளி அமைவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014