வெங்கடாசலபதி
வெங்கடாசலபதி | |
---|---|
வகை | விஷ்ணுவின் வடிவம் |
இடம் | திருமலை திருப்பதி |
மந்திரம் | ஓம் வேங்கடேசாய நமக |
ஆயுதம் | சங்கு, சக்கரம் |
துணை | பத்மாவதி |
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம். |
வெங்கடாசலபதி (ஆங்கிலம் : Venkateswara) என்பவர் இந்துக் கடவுள் விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றாவார். இவர் ஸ்ரீீனிவாசன், பாலாஜி, வேங்கடன், திருப்பதி, கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். திருவேங்கடம் அல்லது வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்திருக்கவும் சாத்தியக்கூறு உள்ளது.
பெயர்க்காரணம்
[தொகு]"வேம்" என்றால் பாவம் [1] "கடா" என்றால் அழித்தல்,[1] மற்றும் ஈஸ்வரா என்றால் மிகப்பெரிய கடவுள் என்ற பொருள் தருகிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருமலை திருப்பதி
[தொகு]திருமலை - திருப்பதியில் வெங்கடாசலபதி கோயில் உள்ளது. சங்கப்பாடல்கள் இதனை வேங்கட-நாடு, வேங்கட-நெடுவரை, வேங்கட-வரைப்பு, வேங்கடச்சுரம், வேங்கட மலை என்றெல்லாம் குறிப்பட்டுள்ளது.[2] தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர்.[3] இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது.[4] திருமலை மலை கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ளது. திருப்பதி 7 மலைகளை உள்ளடக்கியது 7 என்பது ஆதிசேசன் 7 தலைகளை குறிப்பதாகும். 7 மலை பெயர்கள்: சேஷாத்ரி, நீலத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, ருஷுபத்ரி, நாராயன்த்ரி, வேங்கடாத்ரி.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://www.ramanuja.org/sv/bhakti/archives/aug98/0241.html
- ↑ சிலப்பதிகாரம் 6-30.
- ↑ "TTD". Archived from the original on 6 ஆகஸ்ட் 2002. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Hindu". TTD. Archived from the original on 3 அக்டோபர் 2003. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)