உள்ளடக்கத்துக்குச் செல்

வித்தல்ராவ் விகே பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தல்ராவ் விகே பாட்டீல்
Vithalrao Vikhe Patil
2002 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் வில்லையில் வித்தல்ராவ்
பிறப்புஇந்தியா, மகாராட்டிரம், அகமதுநகர், உலோனி நகரம்
பணிதொழிலதிபர்
பிள்ளைகள்பாலாசாகேப் விகே பாட்டீல்
விருதுகள்பத்மசிறீ

வித்தல்ராவ் ஏக்நாத் ராவ் விகே பாட்டீல் (Vithalrao Eknath Rao Vikhe Patil) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். மகாராட்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள உலோனி நகரத்தில் கூட்டுறவு துறையின் உதவியுடன் முதல் சர்க்கரை ஆலையை இவர் நிறுவினார். வணிக மேலாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் குழுவையும் இவர் நிறுவினார்.[1] பத்மசிறீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,[2] மற்றும் பத்மசிறீ டாக்டர் விட்டல்ராவ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பத்மசிறீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் சககாரி சகர் கர்கானா நிறுவனம்[3] போன்றவை இதற்குரிய சான்றுகளாகும். இந்திய அரசாங்கம் 1961 ஆம் ஆண்டு, தேசத்திற்கு இவர் செய்த சேவைகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[4] இவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பாலாசாகேப் விகே பாட்டீல் பத்ம பூசண் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IBMRD". IBMRD. 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015.
  2. "VIMS". VIMS. 2015. Archived from the original on 2 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015.
  3. "NIIR". NIIR. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.