விஜய் அமிர்தராஜ்
விஜய் அமிர்தராஜ் | |
---|---|
பிறப்பு | 14 திசம்பர் 1953 (அகவை 71) சென்னை |
பணி | நடிகர், வரிப்பந்தாட்டக்காரர், விளையாட்டுப் பத்திரிகையாளர், திரைப்பட நடிகர் |
வேலை வழங்குபவர் | |
குழந்தைகள் | Prakash Amritraj |
குடும்பம் | Anand Amritraj, அசோக் அமிர்தராஜ் |
விஜய் அமிர்தராஜ் (பி. டிசம்பர் 14, 1953) இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ்; தாயார் மாகி அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.
Cystis fibrosis என்ற நுரையீரல் பாதிப்பால் மூச்சிறைப்பு நோயினால் பத்து வயது வரை அவதிப்பட்டு வந்த விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டினால் அந்த நோயை வென்றதாக சொல்கிறார். இவர் 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டார். 1974லும் 1987லும் இறுதிப் போட்டியை அடைந்த இந்திய டேவிஸ் கிண்ண குழுவுக்குத் தலைமை தாங்கினார். 1973 மற்றும் 1981 விம்பிள்டன் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறி வந்தார். அவருடைய உச்சத்தில் உலகத்தின் 16வது சிறந்த ஆட்டக்காரராக இருந்தார். ப்ஜோர்ன் போர்க், ஜிம்மி கோனர்ஸ், மற்றும் இவான் லெண்ட்ல் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி கவனமும் எதிர்பார்ப்பும் பெற்றார்.[1][2][3]
இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை மணந்தார். தம்பதியினருக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. பிரகாஷ் அமிர்தராஜ் இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். இவரது குடும்பம் பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில், லோஸ் ஆஞ்சலிஸ் நகரத்தில் செலவிடுகிறது.
இவர் தொலைக்காட்சி விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிப்பராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐநா சபையின் கௌரவ தூதராக போஸ்னியா நாட்டில் பணிபுரிந்தார்.
டென்னிஸ் வீரர்களான ஆனந்த் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ் ஆகியோர் இவரது சகோதரர் ஆவார். ஆனந்த், அசோக் இணை 1976 இல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறினர்.
வெளி இணைப்பு
[தொகு]- சர்வதேச திரைப்படத் தரவுத்தளத் தகவல்கள்
- இந்து நாளிதழுக்கு 2004 ஆண்டு அளித்த பேட்டி பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vijay Amritraj பரணிடப்பட்டது 5 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம் at the Association of Tennis Professionals
- ↑ webarchive ATP Tour 2009
- ↑ Andrew McNicol (11 May 2018). "From James Bond cameo to biopic on his extraordinary life: tennis legend Vijay Amritraj to serve up another smash hit". South China Morning Post. Archived from the original on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2018.