விஜயன் பிள்ளை
என். விஜயன் பிள்ளை | |
---|---|
என். விஜயன் பிள்ளை | |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2016–2020 | |
முன்னையவர் | சிபு பேபி ஜான் |
பின்னவர் | சுஜித் விஜயன் பிள்ளை |
தொகுதி | சவறை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1951 |
இறப்பு | (அகவை 68) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
பிள்ளைகள் | 3 |
என். விஜயன் பிள்ளை (N. Vijayan Pillai) (2 ஏப்ரல் 1951 – 8 மார்ச்சு 2020) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் 14-ஆவது கேரள சட்டமன்றத்திற்கு சவறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமனற் உறுப்பினரும் ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை 1979 ஆம் ஆண்டு ஊராட்சி உறுப்பினராகத் தொடங்கினார். இவர் 20 ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடர்ந்தார். 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இவர் கொல்லம் மாவட்ட ஊராட்சியின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
இவர் 1951-ஆம் ஆண்டில் புரட்சிகர சோசலிசக் கட்சியின் மூத்த தலைவர் V. நாராயணன் பிள்ளை, மற்றும் பவானி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் [1] [2] இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சி்ஸ்ட்) உறுப்பினராக இருந்த விஜயன் பிள்ளை, சட்டப் பேரவைத் தேர்தலில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஷிபு பேபி ஜானை எதிர்த்துப் போட்டியிட்டு, சவறை தொகுதி வரலாற்றில் மாபெரும் வெற்றியைப் பெற்றார். [3] விஜயன் பிள்ளை சவறை சமுதாயத்தில் தனது சமூக சேவைக்காகவும், அவரது நலத்திட்டங்களுக்காகவும் அறியப்பட்டார். இவரது மகன் சுஜித் விஜயன் பிள்ளை கேரளாவின் சவரா தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொண்டு வருவதற்கு இப்பகுதியில் ஒரு முக்கியத் தலைவராக இருந்த அவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆளும் எல்.டி.எஃப் அரசாங்கக் கொள்கைகளின் உதவியுடன் சாவரா தொகுதியின் சமூக முன்னேற்றத்தை அடைய எப்போதும் பாடுபட்டார். திறன் அடிப்படையிலான திட்டங்களுடன் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதில் இவர் ஆர்வமாக இருந்தார்,
இறப்பு
[தொகு]இவர் 2020-ஆம் ஆண்டு மார்ச்சு 8 ஆம் நாள் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சி ஏஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் இறந்தார்.[4][5] இவரது இறுதிச் சடங்கு 9 மார்ச்சு 2020 அன்று தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chavara's giant killer N Vijayan Pillai was no novice" (in ஆங்கிலம்). 21 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "N. Vijayan Pillai - niyamasabha.org" (PDF).
- ↑ "CPI(M) MLA Vijayan Pillai passes away" (in en-IN). 2020-03-08. https://www.thehindu.com/news/national/kerala/cpim-mla-vijayan-pillai-passes-away/article31014398.ece.Sudhish, Navamy (8 March 2020). "CPI(M) MLA Vijayan Pillai passes away". The Hindu. ISSN 0971-751X. Retrieved 2 June 2021.
- ↑ "Chavara MLA M N Vijayan Pillai passes away" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
- ↑ "Chavara MLA N Vijayan Pillai passes away" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.