விக்கிப்பீடியா பேச்சு:மொழி நடை வழிகாட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழி நடை உரையாடல் தொடக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் எந்த அளவு தனித்தமிழ் நடையில் எழுதலாம் என்பது குறித்து இங்கு உரையாடலாம். பங்களிப்பாளர்களிடையே உள்ள புரிந்துணர்வையும் இணக்க முடிவையும் அடுத்து திட்டப் பக்கத்தில் வழி காட்டலாம்.

இப்படிப்பட்ட பக்கம் இருப்பதே தவறு. நாம் தமிழில் எழுதுகிறோம். அவ்வளவுதான்.அதோட கேஸ் குளோஸ். யாரும் ”தனித்தமிழ் வழிகாட்டி” என ஒன்றையும் கொடுக்க வேண்டாம். நாம் எல்லா கட்டுரைகளையும் தற்காலத் தமிழ், நடைமுறை தமிழில் எழுதுகிறோம். இந்த பக்கத்தை எடுப்பதற்கான பரிவு--Ginger 12:41, 1 ஜூலை 2009 (UTC)
நீங்கள் பேச விரும்புவது http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D . நடையைப் பற்றியது அல்ல.--Ginger 13:40, 1 ஜூலை 2009 (UTC)

கட்டுரையின் உரை நடையைத் திருத்துவது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் Manual of Style பக்கம் உண்டு. அவரவர் விருப்பப்படி எழுதலாம் என்றால் இது ஒரு கலைக்களஞ்சியமாக இருக்காது.தங்கள் உரை திருத்தப்படுவதை விரும்பாதவர்கள், வலைப்பதிவு, கூகுள் நாலில் எழுதலாம்--ரவி 13:03, 1 ஜூலை 2009 (UTC)

இந்த பக்கம் manual of style க்காகவும், அது சம்பந்தப் பட்ட விவாதங்களுக்கும் ஏற்பட்டப் படுத்தது அல்ல. “தனித்தமிழ் வழிகாட்டி” என்பது பெரும்பாலான எழுத்துகளை நிராகரிக்கும் ஒரு சிறுபான்மையினரின் சாய்வுகளாகும்.--Ginger 13:36, 1 ஜூலை 2009 (UTC)
இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். எவரும் வந்த உடன் இதை ஒரு வலைப்பதிவு என்று கருதிவிடுவது போல் தோன்றுகிறது. ஒரு கலைக்களஞ்சியத்துக்கு நடைக் கையேடும் பிற மொழி நடைப் பரிந்துரைகளும் இன்றியமையாதவை. ரவி குறிப்பிட்டது போல் ஆங்கில விக்கியில் நடைக் கையேடும், சிறப்புக் கட்டுரைத் தகுதரமும், அதை அடைவதற்கான வெகு விளக்கமான பயிற்சிப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. சில கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைகளாக்குவதற்குள் எவ்வளவு மாற்றங்களையோ கேட்பார்கள். நாங்களும் செய்து கொண்டுதான் உள்ளோம். அதே போல் தமிழ் விக்கிப்பீடியாவிலும் நடைப் பரிந்துரைகள் கட்டாயம் இருக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 13:18, 1 ஜூலை 2009 (UTC)
இது கலைக்களஞ்சியம் என எல்லோருக்கும் தெரியும். நீங்கள் சுட்டிக் காட்டிய பக்கங்கள் எல்லாம் இங்கிலீஷில் உள்ளன. அதைகூட தமிழில் எழுதமுடியாமல், அப்படியே அதை தமிழில் மொழி பெயற்க முடியாமல் இருப்பது, தமிழின் - நன்னூல்/தொல்காப்பிய தமிழின் - அவலத்தையும், ஏழ்மையையும், தளர்சியையும் காட்டுகிறது. வாய் கிழிய தமிங்கிலத்தையும், ஆங்கில கலப்பையும், கிரந்த எழுத்துக்களையும் சபிக்கலாம், , ஆனால் தமிழில் எழுதுவது வரும்போது தளர்ச்சிதான். இந்த யதார்த்ததை உணராமல் பீற்றுவது, கண்ணாடி அறையிலிருந்து கல் வீசுவதாகும்--Ginger 10:43, 2 ஜூலை 2009 (UTC)
மொழி அதிகாரப்பூர்வ எண்ணிக்கை > 200 எழுத்து சராசரி பைட் அளவு > 0.5K > 2K நிறை சொற்கள் படங்கள்
தமிழ் 16 k 16 k 1619 81% 21% 74 MB 3.0 M 3.0 k
பெங்காலி 19 k 12 k 1113 49% 11% 61 MB 3.1 M 8.5 k
மராட்டி 21 k 6.4 k 623 20% 5% 44 MB 1.8 M 0.769K
தெலுங்கு 42 k 13 k 578 16% 5% 64 MB 3.0 M 2.6 k
இந்தி 24 k 14 k 1128 35% 11% 76 MB 4.6 M 1.4 k
மலையாளம் 8.3 k 7.8 k 2425 78% 30% 58 MB 2.1 M 5.4 k
கன்னடம் 6.1 k 5.3 k 1282 53% 14% 23 MB 0.965M 0.211K
தமிழின் இடம் 5 1 2 1 2 2 3 3
நவம்பர் 2008 நிலவரம்
இது கலைக்களஞ்சியம் என்று தெரிந்தும் ஏன் வலைப்பதிவுத் தமிங்கிலத்தை வலியுறுத்துகிறீர்கள் எனப் புரியவில்லை. என் கருத்தை எள்முனையளவாவது புரிந்து கொண்டுதான் பதிந்தீர்களா? மேலே ஆங்கில விக்கியைப் பற்றித் தந்த இணைப்புகள், ஆங்கில விக்கியிலும் இப்படியான நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும் இருக்கின்றன என்பதற்காகத்தான். (தமிழ் விக்கிப்பீடியாவின் நடைக் கையேடு இங்கே, மேலும் வழிகாட்டிகளை இப்போதுதான் துவக்கியுள்ளோம்.) கட்டாயம் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளும் கொள்கைப் பக்கங்களும் குறைவு தான். அது ஆங்கில விக்கிக்கு நெடுநாள் பின்னர் உருவானதும், இன்ன பல காரணங்களும் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கையை உயர்த்த ஆங்கில உள்ளடக்கத்தை இட வேண்டுமென்றால் அது தேவையில்லை. ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் ஆங்கில விக்கியிலேயே படித்து விட்டுப் போகலாமே. தரத்தைக் குறைத்து ஒரு கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுப்பதனால் ஒரு பயனும் இல்லை. இந்தியில் ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதி வந்தும் தர அளவுகளில் இன்னும் பின் தங்கியே உள்ளது. தரக் கண்காணிப்புப் பக்கத்தைப் பாருங்கள். பீற்றிக் கொள்வது போன்ற தரக் குறைவான சொல்லாடல்களைத் தவிர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:12, 2 ஜூலை 2009 (UTC)
"ஏன் வலைப்பதிவுத் தமிங்கிலத்தை வலியுறுத்துகிறீர்கள்" என்பதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் கொடுக்க முடியாது. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மேலும் `பீற்றிக் கொள்வது` என்பதின் அகராதி பொருள் தற்பெருமைப்பேச்சு. அதில் தரக்குரைவு ஒன்றுமில்லை என நினைக்கிறேன். உங்கள் விருப்பப்பட்ட தமிழில் (நன்னூல் இலக்கண தமிழ், ஆங்கில/சமஸ்கிருத வார்த்தைகள் இல்லாத தமிழ், கிரந்த எழுத்துகளை அகற்றும் தமிழ்)எல்லாம் எழுத முடியும் வரட்டு தற்பெருமைதான். `பீற்றுவது` தரக்குறைவாக இருந்தால், `தற்பெருமை` என சப்ஸ்டிட்யூட் செய்க. என்பது மேலும், என் வாதம் ஏன் ஆங்கிலத்தை ஒப்பிடும் போது தமிழில் மிகக் குறைவான கட்டுரைகள் உள்ளான என்றில்லை. என் வாதம், யூனிய்ன், ஆபரேஷன், ஆட்சேபம் போன்ற தமிழ்ர்கள் வழக்கமாக உபயோகிக்கும் வார்த்தைகளையே,மாற்று வார்த்தைகளால் திணிப்பவர், உரைநடைக்கு ஆங்கில கட்டுரைகளை சுட்டிக் காட்டுவது, உங்கள் வாதத்தை முழுவதுமாக அழிக்கிறது என்பதம் உதாரணம். மேலும் விக்கிக்குக் நீங்கள் சுட்டிக்காட்டிய ஆங்கில கட்டுரைகள் அடிப்படை, அது கூட தமிழில் இல்லாமல், `கொள்கை` களை பற்றி பேசுவது, குருடன் கனவு காண்பதாகும்.--Ginger 11:37, 2 ஜூலை 2009 (UTC)

//உரைநடைக்கு ஆங்கில கட்டுரைகளை சுட்டிக் காட்டுவது, உங்கள் வாதத்தை முழுவதுமாக அழிக்கிறது என்பதம் உதாரணம்.//

ஒரு விக்கிப்பீடியாவில் மொழிநடை கொள்கை என்று ஒன்று இருக்கலாம் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

//அது கூட தமிழில் இல்லாமல், `கொள்கை` களை பற்றி பேசுவது, குருடன் கனவு காண்பதாகும்//

ஏற்கனவே உள்ள நடைக் கையேட்டை சுந்தர் சுட்டியுள்ளார். அதை விரிவாக்குவதற்குத் தானே இந்த உரையாடல்?--ரவி 14:05, 2 ஜூலை 2009 (UTC)

வசைச்சொற்களை அனுமதிக்க வேண்டும்[தொகு]

செந்தமிழ் பழந்தமிழர் வெங்காயங்களுக்கு. வலைத்பதிவுத் வெளியில் பரவிக் கிடக்கும் வசைத்தமிழும் தமிழில் ஓர் அங்கமே. அதையும் விக்கியில் பயன்படுத்த அனுமதி வேண்டும். கூகிளில் போட்டால் பல்லாயிரக்கணக்கான தமிழ் வசைச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை இங்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மொழித் தீவரவாதிகளாக, சர்வதிகாரிகளாக செயற்படாமல், எல்லோரின் விருப்பத்துக்கும் இங்கு இடம் தர வேண்டும். --Natkeeran 01:01, 3 ஜூலை 2009 (UTC)

கருத்துகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் 100% தனித்தமிழில் எழுதுவது நடைமுறை சாத்தியம் அற்றது. அதே வேளை ஒவ்வொரு பங்களிப்பாளரும் தாங்கள் விரும்பியபடி எவ்வளவு வேண்டுமானாலும் பிற மொழி கலந்து எழுதலாம் என்று இருப்பதும் தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியத்தின் சீர்நிலையைக் குலைக்கும்.

பல வழிகாட்டல்களில் ஒன்றாகவும் முதலாவதாகவும் பின்வரும் கொள்கையைப் பரிந்துரைக்கிறேன்:

பிற மொழிச் சொல்லுக்கு நிகரான வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொல் இருந்தால் அத்தமிழ்ச் சொல்லை முன்வைத்து உரை திருத்தலாம்.

எடுத்துக்காட்டு: உலக சினிமா என்று ஒருவர் எழுதினால் உலகத் திரைப்படம் என்று இன்னொருவர் உரை திருத்தி எழுதலாம். கூகுளில் திரைப்படம் என்பதை விட சினிமா என்று அதிகம் பேர் எழுதி இருந்தாலும் திரைப்படம் வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொல் என்பதால் அதற்கு முன்னுரிமை தர வேண்டும்.--ரவி 12:15, 1 ஜூலை 2009 (UTC)

அது தவறு. யாருக்கு யார் `முன்னுரிமை`யை கொடுப்பது.? சினிமா என்று தேடினால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் . கிட்டத்தட்ட 8 மில்லியன் பக்கங்கள் வருகின்றன. திரைப்படம் என்றால் அதில் ஐந்தில் ஒரு பங்குதான். ஆனால் நான் இரண்டும் சரி என்பேன். தமிழர்கள் பயன்படுத்துவதை இங்கே பிரதிபலிக்க வேண்டுமே தவிற, `முன்னுரிமை`க்கு இடமே இல்லை.--Ginger 13:46, 1 ஜூலை 2009 (UTC)
தவறான தகவல். சினிமா என்று தேடினால் 7.9 மில்லியன் திரைப்படம் என்று தேடினால் 154 மில்லியன். பார்க்கவும்.--செல்வா 21:09, 3 ஜூலை 2009 (UTC)
உங்கள் சுட்டி திரைப்படத்திற்க்கு 634000 பக்கங்களை கொடுக்கிரது; 154 மில்லியன் எங்கிருந்து வந்தது? அது `சினிமா`வில் பன்னிரண்டில் ஒரு பகுதி ஆகும்--Ginger 22:22, 3 ஜூலை 2009 (UTC)
நான் IE, Firefox இரண்டிலும் அப்பொழுது பார்த்தபொழுது முறையே 154 மில்லியனும் 150 மில்லியனும் காட்டியது. நான் இங்கு இணைப்பைத் தந்தபின் அதனைச் சொடுக்கிப் பார்த்த பொழுதும் சரியாகவே இருந்தது! இப்பொழுது வேறு இடத்தில் இருந்து பார்த்தால் 3.68 மில்லியன் காட்டுகின்றது. (சினிமா என்பதற்கு 875 ஆயிரம் காட்டுகின்றது. பார்க்கவும், உங்களுக்கு என்ன கிடைக்குமோ தெரியாது!!. இப்படி வெவ்வேறு எண்ணிக்கைகள் காட்டுவது வியப்பாக உள்ளது. இப்பொழுது திரைப்படம் என்பதற்கு FireFox இல் 142 மில்லியன் காட்டுகின்றது பார்க்கவும். என்ன தெரியுமோ உங்களுக்குத் தெரியாது!! இவ்வெண்ணிக்கைகள் இடத்துக்கு இடம் மாறும்போல் தெரிகின்றது!!--செல்வா 00:10, 4 ஜூலை 2009 (UTC)
விரும்பிய படி எழுதுவதென்றால், எதற்கு கலைக்களஞ்சியம். இது Who is hot போட்டி இல்லை. தமிழுக்கு ஒரு இலக்கணம் (தொல்காப்பியம், நன்னூல்) உண்டு. ஒரு ஒலிப்புமுறை உண்டு. கலைக்களஞ்சிய நடை உண்டு. அவற்றைப் பின்பற்றி எழுதுவதுவதே நன்று. --Natkeeran 13:50, 1 ஜூலை 2009 (UTC)
நன்னூல் எழுதப்பட்டு 700 வருடங்கள் ஆகிறன. தொல்காப்பியம் எழுதப்பட்டு 2000 வருடங்கள் ஆகிறன. அவரக்ள் தமிழ் இறந்து போய் பல நூற்றாண்டுகள் ஆகிரன. பல நூற்றூஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கணத்தை வைத்து 21 ம் நூற்றாண்டுத் தமிழை ஓட்டுவது, ஆகாயவிமனத்தை மிதிவண்டியின் கையேடை வைத்து புரிந்துகொள்வது ஆகும்.

நன்னூலையும், தொல்காப்பியரையும் ஓரங்கட்டு --Ginger 07:56, 2 ஜூலை 2009 (UTC)

இந்த நூற்றாண்டில் வெளிவந்த புதினமல்லாத தமிழ் நூல்கள் எதையாவது படித்துள்ளீர்களா? அவற்றின் இலக்கணம் 99 விழுக்காடு நன்னூலையும் 85 விழுக்காடு தொல்காப்பியத்தையும் ஒத்து இருக்கும். அவர்கள் வலைப்பதிவர் தமிழிலோ, பேச்சு வழக்கிலோ எழுதுவதில்லை. பொது நூல்களுக்கே இப்படி என்றால் ஒரு கலைக்களஞ்சியத்துக்கு எப்படி இருக்க வேண்டும்? -- சுந்தர் \பேச்சு 09:02, 2 ஜூலை 2009 (UTC)
99 சதவிகிதமோ, 85 சதவிகிதமோ, நன்னூல்/தொல்காப்பியரை மதிக்க வைத்துதான், தமிழ் சரியாக எழுதுவராது. உதாரணமா, தமிழ்நாடு அரசு தமிழ் பக்கத்தில் போய் பாருங்கள். பெரும்பான்மை ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும், தமிழில் இல்லை. நன்னூல்/தொல்காப்பியரை பூஜை செய்து கொண்டிருங்கள், எல்லா ஆவணங்களும் இங்கிலீஷ்ல இருக்கும்--Ginger 10:11, 2 ஜூலை 2009 (UTC)

எளிய, உரைநடைத் தமிழில், வெகு குறைவாக பயின்றவரும், நிறைவாக பயன்றவரும் அல்லது மெத்த பயின்றவரும் என யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய, தமிழுக்கு அகராதி என தனியாக பயன்படுத்த வலியுறுத்தாத நிலையில், பொதுவான உச்சரிப்பு கொண்ட பிறமொழி கலக்காத தமிழில் இருத்தல்வேண்டும்.--செல்வம் தமிழ் 11:00, 2 ஜூலை 2009 (UTC)

//தமிழுக்கு அகராதி என தனியாக பயன்படுத்த வலியுறுத்தாத நிலையில்//

இதை விளக்க முடியுமா? ஒரு ஆங்கிலக் கட்டுரையில் ஆங்கிலச் சொல் புரியாவிட்டால் ஆங்கில அகரமுதலியைப் பார்க்கிறோம். தமிழுக்கு மட்டும் ஏன் கூடாது? எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொற்களை வைத்து வார இதழ் வெளியிடலாம். கலைக்களஞ்சியம் வெளியிட முடியாது--ரவி 14:07, 2 ஜூலை 2009 (UTC)

அதுமாதிரி தமிழில் கலைக்களஞ்சியத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வெகு குறைவாக பயின்றவரும் என்று வரும்பொழுதே அகராதி தேவையில்லை. எளிய என்று வரும்பொழுதே அகராதி தேவை யில்லை. நமது தாய் மொழிக்கு அகராதி தேவையில்லை. ஆங்கிலம் நமது தாய் மொழியல்ல. இங்கு நாம் தமிழ் இலக்கியம் படிப்பதற்கான இடமல்ல. அனைவரும் பயனபடுத்துகின்ற கலைக்களஞ்சியம். இலக்கியத்தில் புரியாதவைகளும் இங்கு புரியவேண்டும். ஒவ்வொன்றையும் அகராதி பார்த்து பார்த்து பேச சொல்லமுடியுமா. விழுமியம் உடனே தெரியாது ஆனால் மேன்மை என்பது அனைவருக்கும் 3 வகுப்பு வரை படித்தவருக்கும் தெரியும். ஆங்கிலத்தில் எளிய ஆங்கிலம், ஆங்கிலம் என்று இரண்டுத் தளம் உள்ளது. இங்கும் தேவை என்றால் நீங்கள் சொல்வது போல் இலக்கியத் தமிழ் எளியத் தமிழ் என்று பிரித்து தளம் வைத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.--செல்வம் தமிழ் 15:57, 2 ஜூலை 2009 (UTC)

ஆங்கிலத்துக்கு விளம்பரமேத் தேவையில்லை அது அனைவருக்கும் பெரும்பாலான நாட்டுக்கு பொதுமொழி, பொருளீட்டு மொழி ஆகையால் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அகராதி பார்த்து கற்றுக்கொள்ள விழைகின்றனர், கற்றும் கொள்கின்றனர். தமிழ் சிறுபான்மையினர் மொழி, அது தனது சொந்த மக்களிடமிருந்தே விலகி கொண்டேயிருக்கின்றது. மொழியை காப்பாற்றுங்கள் என்று எந்த மொழியினரும் கூக்குரலிடுவதில்லை. ஆனால் தமிழுக்கு அப்படி கூக்குரலிடவேண்டிய நிலை. தமிழ்நாடு, இன்னும் சில நாட்டுக்கு மட்டும்தான் தமிழ் பொருளீட்டு மொழி அதனால் சற்று பாதுகாக்கப்படுகின்றது. இல்லையென்றால் சுத்தமாக வெளியேறிவிடும். எல்லாரையும் சேவை மனப்பான்மையோடு கற்க சொல்லமுடியாது. (தமிழை பாதுகாக்க சலுகைகள் வேறு அறிவிக்கப்படுகின்றது தமிழ் கற்பவர்களுக்கு இலவச கணிணி என்று அறிவித்தால் கூட எதிர்பார்த்த இல்க்கை ஆதரவை அடைமுடியவில்லை.) கட்டாயக் கல்வி என்று சட்டம் போட்டால் நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்றார்கள். இங்கு பலருக்கு ஆங்கிலம் எழுத படிக்க, பேசத் தெரியும், அவர்களே தமிழ் பேசமட்டுமே பயன்படுத்துகின்றனர் அதை அவர்கள் பெருமையாகவும் சொல்கின்றனர். தமிழ் எழுதபடிக்கத் தேவையில்லை, பேசத் தெரிந்தால் போதும் ஆங்கிலம் தான் எங்களுக்கு சோறு போடுகின்றதே என்று கூறுகின்றனர். இதில் தாங்கள் அகராதி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் மொத்தமாக மறந்து விட வேண்டியது தான். (இந்நேரம் அனைவருக்கும் பற்றிருந்தால் இந்த இணையத்தில் ஆட்கள் குவிந்திருப்பார்கள்). --செல்வம் தமிழ் 16:20, 2 ஜூலை 2009 (UTC)

ஆகையால் இருக்கிற கொஞ்சநஞ்ச பேரையும் பயமுறுத்தி ஒடவைக்காமல் இருக்கவேண்டிய கடமை...... இல்லை அப்படித்தான் இருப்போம் என்றால் நட்டம் உங்களுக்கோ எனக்கோ அல்ல தமிழுக்கு. அதைச் செய்த அவப் பெயருக்கு, பாவ.... நாம் ஆளாவது திண்ணம்.

ஆகையால் தான் தமிழகப் பாடநூல்களில் முனபைவிட இப்பொழுது உரைநடையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கேட்டாரே முன்பு இருந்த தமிழா இப்பொழுதய பாடநூல்களில் இருக்கின்றதா?. எவ்வளவு கிரந்தம் என்றாரே அதான் காரணம். ஆங்கில பயிற்று முறையில் படித்த கிராமத்து பொறியியல் மாணவன் இங்குள்ளவர்களின் ஆங்கில மோகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலையே செய்து கொண்டான் தமிழ் பயிற்று மொழியில் படித்தவர் கதியை நினைத்து பாருங்கள். தமிழ் பயிற்று மொழியில் பயின்றவன் மேனிலை வரைக்கும் தான் கல்வி பயில முடியும். அதற்குப் பிறகு மறுபடியும் ஆங்கிலம். முனைவர் பட்டம் ஆங்கிலமா, தமிழா எல்லாம் ஆங்கிலம் தான். அவன் அதற்கு ஈடுகொடுக்கத்தான் அவனை ஒரளவுக்கு பெயர்களில் விஞ்ஞான சொற்களில் தமிழ் புகுத்தாமல் விட்டு வைத்துள்ளார்கள். தமிழ் கல்வி பயின்ற பிறகு அவன் சந்திக்கின்ற ஒவ்வொரு இடமும் ஆங்கிலம் தான். நாம் மட்டும் ஆங்கில மொழியில் படித்து விட்டு அவனை மட்டும் தமிழில் படிக்கச் சொன்னால் எப்படி. அவன் பொருளீட்ட வேண்டாமா? அவன் வாழவேண்டாமா? ஏழைகளாலேயே தமிழ் வாழ்கின்றது. சில நேரங்களில் தமிழ் வாழ்வதற்காகவே ஏழ்மையை வரவேற்கின்றேன். (சங்கட்த்துடன்). சில இடங்களில் நாம் தூய்மையாக இல்லாமல் பிறரை தூய்மையாக இருக்க சொல்வது மாதிரி இவ்விடத்தில் நெளியத்தான் வேண்டியிருக்கின்றது. இவைகளை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கேற்றார்போல் தமிழ் பயிலுகின்ற பெரும்பான்மையருக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்க இவ்விணையம் பாடுபட்டால் விளம்பரமேத் தேவையில்லை அனைவரும் வருவார்கள். இல்லையேல் அனைவரும் விலகித்தான் நிற்பார்கள். நன்றி--செல்வம் தமிழ் 18:19, 2 ஜூலை 2009 (UTC)


செல்வம், தமிழுக்கு அகரமுதலி (அகராதி) தேவையில்லையா? இங்கு பயன்படுத்தப்படுவது எளிய தமிழ் தான். ஆனால் கலைக்களஞ்சியத்தில் இது எப்போதும் முடியாது, சில சொற்களுக்கான பொருள் புரியவில்லை என்றால் அகரமுதலி பார்க்க வேண்டியது தான், இது தவிர்க்க இயலாதது. உங்களுக்கு எளியது எனக்கு கடினமாக இருக்கலாம், அது போலவே எனக்கு எளியது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். எளிய என்பதை வரையறுப்பது கடினம். ஆங்கில மோகம் உள்ளோர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருவார்கள் என்கிறீர்களா? வந்தால் மகிழ்ச்சி. அதற்காக கலைக்களஞ்சிய நடையை தளர்த்த சொல்வது ஏற்புடையதல்ல. --குறும்பன் 17:41, 2 ஜூலை 2009 (UTC)

வெகு குறைவாக படித்தவரும் பயன்படுத்த வேண்டும் முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேன். அகர முதலி பயன்படுத்துகின்ற அளவு சொற்கள் கடினமாகத் தேவையில்லை. என்பது வாதம் இல்லை என்றால் நட்டம்?????? ஆங்கில மோகம் கொண்டோரையும் வரவைப்பத்றுகு முயற்சிக்க வேண்டும் என்கின்றேன். எல்லாம் ஒரு நாள் மாறக்கூடியது தான் என்பது என் கருத்து வராவிட்டால் நாம்தான் என்ன செய்யமுடியும். இந்தவுலகில் மாறுவுது என்ற சொல்மட்டுமே மாறாதது. நான்தான் முன்பே கூறிவிட்டேனே எனக்கு ஒன்றும் நட்டம் இல்லை. மாற்றினால் மாற்றுங்கள் மாற்றாவிட்டால் ...... என் கருத்தை பதிவு செய்கின்றேன். இது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் பயன்படுத்துகின்ற தளமா வலியுறுத்த. கலைகளஞ்சிய நடை, அதைதான் உரைநடைத்தமிழ் என்று சொல்லவிட்டேனே அப்புறம் ???? இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்று மொழியில் பயின்ற பயனர்கள்தான் உள்ளனர் நிர்பந்தத்துக்காக படித்திருப்பார்கள். தமிழ் பயிற்று மொழியில் (இதுவும் நிர்பந்தத்துக்காக-ஏழை என்ற) பயின்ற பயனர்கள் குறைவு தானே. தமிழில் எளிய முறையில் இல்லை என்றால் ஆங்கிலமே போதும் என்றுதான் விலகுவர் இதை எப்படி தடுக்க முடியும்.--செல்வம் தமிழ் 18:12, 2 ஜூலை 2009 (UTC)

செல்வம், உங்கள் நோக்கத்தை மதிக்கிறேன். கண்டிப்பாக, "எங்கள் தமிழறிவைக் காட்டுகிறோம் பார்" என்று யாரும் தேவையற்ற கடினமான சொற்களைப் போட்டுப் பயமுறுத்தப் போவது கிடையாது. ஆனால், குறும்பன் சொல்வது போல் எது "எளிமை" என்பது ஆளுக்கு ஆள், துறைக்குத் துறை, தேவைப்படும் அறிவைப் பொறுத்து மாறும்.

மனித மூளை கட்டுரையை பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் புரிவது போல் எழுதலாம். ஆனால், அது மட்டுமே வரையறை என்றால், அந்த கட்டுரை தரும் அறிவு பத்தாம் வகுப்பு அளவிலேயே நின்று விடும். தமிழருக்குப் பத்தாம் வகுப்பு அளவு அறிவு மட்டும் கிடைத்தால் போதுமா? கூடுதல் அறிவு வேண்டும் என்றால் கூடுதல் சொற்களைக் கற்கத் தான் வேண்டும். பொதுமக்களுக்குப் புரியாத எத்தனையோ சொற்கள் தமிழ் இலக்கிய உலகில் உண்டு. ஆனால், இச்சொற்கள் இல்லாமல் இலக்கிய உலகு இயங்க இயலாது. இது போல் ஒவ்வொரு துறையின் இயக்கத்துக்கும் கூடுதல் சொற்கள் தேவை.

கூடுதல் அறிவு வேண்டும் என்றால் அதைத் துல்லியமாகத் தெரிவிப்பதற்கான சொற்களைப் பயன்படுத்தத்தான் வேண்டும். தேவைப்படும் புதிய சொற்களை உருவாக்கத் தான் வேண்டும். ஆங்கில மோகத்தில் உள்ள, ஆங்கிலத்தை முதன்மையாகச் சார்ந்திருக்கும் தமிழரைப் பற்றி நாம் கவலைப்பட இயலாது. அறிவு பெறுவதற்கான முதன்மை வழியாகத் தமிழை நாடுபவர்களுக்கு ஆங்கில வழிக்கு குறையாத அறிவை இயன்ற அளவு இலகுவாகத் தருவோம்.--ரவி 18:55, 2 ஜூலை 2009 (UTC)

பாடநூல்களில் உள்ளது போல்தானே சென்னேன் அது எளியநடை தானே. இதே உரைநடையைத்தான் பட்டபடிப்புக்கும் பயன்படுத்துகின்றார்கள். கலைச்சொற்களை நாம் அது விஞ்ஞான முறையில் தான் குறிப்பிட முடியும். பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களில்தான் சொன்னேன். அறிவியல் சொற்கள்தான் மாறப்போகின்றன. வாக்கியங்கள் அப்படியே அதே மாதிரி நடை தானே.--செல்வம் தமிழ் 20:14, 2 ஜூலை 2009 (UTC)

Ginger, தமிழ் விக்கிப்பீடியாவை விட்டுவிட்டு, கன்னட, தெலுங்கு, முதலான தென்னிந்திய திராவிட மொழி விக்கிகளையும், வடவிந்திய மொழிகளான இந்தி, குசராத்தி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி விக்கிகளையும் பாருங்களேன். அங்கெல்லாம், கிரந்த எழுத்துச் சிக்கல் ஏதும் இல்லை, சமசுக்கிருத சொற்களையும் உருது, அரபி, ஆங்கிலம் முதலான எம்மொழிச்சொற்களையும் எடுத்தாள்வதில் பெரும் சிக்கல் இல்லைதானே. ஏன் அவர்கள் வளரவில்லையாம்? தமிழைப் பற்றியும், தொல்காப்பியர், நன்னூலார் பற்றியும் நீங்கள் கூறிய கருத்துகளை நீங்கள் மீள்பார்வை இட உங்களுக்கு நல்வாய்ப்புகள் வர வேண்டுகிறேன். சமசுக்கிருதம் உங்களுக்குப் பிடித்திருந்தால், கட்டாயம் சமசுக்கிருத விக்கி உள்ளது அங்கு சென்று நீங்கள் தொண்டாற்றுங்கள். அல்லது சமசுக்கிருத நூல்கள் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் இங்கு தமிழ் விக்கியில் வளமான கட்டுரைகள் எழுதுங்கள். தமிழில் எதைப்பற்றி வேண்டுமானாலும், எவ்வளவு ஆழ அகல நுட்பங்களுடன் மிக நேர்த்தியாய் எழுத இயலும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். --செல்வா 15:14, 2 ஜூலை 2009 (UTC)

செல்வா, நான் ஏன் மற்ற மொழி விக்கிகளை பார்க்க வேண்டும்? எனக்கு வேர வேலை இல்லையா? நீங்கள் மற்ற மொழி விக்கிகளைப் பற்றி எந்த ஆதாரத்தில் பேசுகிறீர்கள் என தெரியவில்லை?நீங்கள் கன்னட, குஜராத்தி, உருது விக்கிகளில் எவ்வளவு கட்டுரைகள் செய்துள்ளீர்கள் அவைகளை பற்றி தெரிந்தால்போல் பேசுவதற்கு.? நான் தமிழ்விக்கியில் தமிழ் இல்லாமல் தெலுங்கிலா எழுதியுள்ளேன்? இதுவரை உரைநடை கையேடு இல்லாமல், மற்றவர்கள் எழுதுவதை உங்கள் சாய்வுக்கேற்றார் போல் மாற்ற உங்களுக்கு என்ன ஜஸ்டிபிகேஷன் இருக்கு? --Ginger 15:38, 2 ஜூலை 2009 (UTC)

Ginger, எனக்கு வட்டார வழக்கு நன்கு தெரியும் என்பதால் வட்டார வழக்கில் எழுதினால் மற்ற வட்டார மக்களால் புரிந்து கொள்ள முடியுமா? இங்கு பொது நடையை காப்பது முதன்மையானது, சிறப்பானது. களஞ்சியம் என்பது இன்று உள்ளவருக்காக மட்டுமல்ல, அது நாளைய மக்களுக்கும் பயன்பட வேண்டும். நீங்கள் தெலுங்கில் எழுதவில்லை என்பது உண்மை, ஆனால் நிறைய தமிங்கிலம் கலத்து எழுதியுள்ளீர்கள், அது தவறில்லை, அதற்கு ஒத்த தமிழ் சொல் தெரிந்தோர் அதை திருத்துவதை எதிர்ப்பது தவறு. --குறும்பன் 16:59, 2 ஜூலை 2009 (UTC)

குறும்பன், நன்றாகச் சொன்னீர்கள்!Ginger, நீங்கள் ஏன் மற்ற விக்கிகளைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் கூறியதை இதோ இங்கே: நீங்கள் சுட்டிக் காட்டிய பக்கங்கள் எல்லாம் இங்கிலீஷில் உள்ளன. அதைகூட தமிழில் எழுதமுடியாமல், அப்படியே அதை தமிழில் மொழி பெயற்க முடியாமல் இருப்பது, தமிழின் - நன்னூல்/தொல்காப்பிய தமிழின் - அவலத்தையும், ஏழ்மையையும், தளர்சியையும் காட்டுகிறது. வாய் கிழிய தமிங்கிலத்தையும், ஆங்கில கலப்பையும், கிரந்த எழுத்துக்களையும் சபிக்கலாம், , ஆனால் தமிழில் எழுதுவது வரும்போது தளர்ச்சிதான். இந்த யதார்த்ததை உணராமல் பீற்றுவது, கண்ணாடி அறையிலிருந்து கல் வீசுவதாகும் - "தமிழில் மொழி பெயர்க்க முடியாமல் இருப்பது, நன்னூல்/தொல்காப்பிய தமிழின் அவலம்" "ஏழ்மை, தளர்ச்சி" முதலியனவற்றால் என்று நீங்கள் கூறுகின்றீர்களே, அந்த "ஆங்கிலக் கலப்பு, சமசுக்கிருத கலப்பு, கிரந்தப் பயன்பாடு" எல்லாம் இருக்கும் மற்ற இந்திய மொழி விக்கிகளில் ஏன் வளர்ச்சி இல்லை? நான் அம்மொழிகளில் கட்டுரை எழுத வேண்டியதில்லை, அங்குள்ளவற்றை ஓரளவுக்கும் படிக்கத் தெரிந்தால் போதும் நிலவரம் அறிய. உங்கள் காரணங்கள் தவறானவை. இலக்கண வரம்புடைய மொழி, கூடிய அளவு அதனைப் பின்பற்றித்தான் இயங்குதல் வேண்டும். "அவலம், ஏழ்மை, தளர்ச்சி" என்பதெல்லாம் உங்கள் தனிப்பட்ட பிறழ்வான கணிப்பு, கண்ணோட்டம். நீங்கள் தமிழ் மொழியையோ, தமிழ் மொழியின் இலக்கணங்களையோ, தமிழ் மொழியின் இயல்புகளையோ மதிக்காதாவர் என்று உங்கள் கூற்றுகள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கொண்டு பேசி என்ன பயன்? --செல்வா 17:51, 2 ஜூலை 2009 (UTC)
”அந்த "ஆங்கிலக் கலப்பு, சமசுக்கிருத கலப்பு, கிரந்தப் பயன்பாடு" எல்லாம் இருக்கும் மற்ற இந்திய மொழி விக்கிகளில் ஏன் வளர்ச்சி இல்லை?” மற்ற இந்திய மொழி விக்கிகளைப் பற்றி எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. சில மொத்த புள்ளி விவரம் தவிர அதைப்பற்றி நமக்கு தெரியாது. சில தொடர்பற்ற புள்ளி விவரங்களை தூக்கி எரிந்து விட்டு, விவாதத்தை திசை திருப்புவது, குழப்பத்தை தான் காண்பிக்கிரது. ஆயிரக்கணக்கான இடங்களில் தற்கால தமிழை தூக்கி எரிந்து விட்டு, சொந்த விருப்பு, வெருப்புகளை மற்றவர் மேல் திணிப்பது ஒரு பக்கம், உரைநடை சுட்டிக்கு ஆங்கிலம் காண்பிப்பவர்களுக்கு, தமிழைப் பற்றி பேசும் அருகதை இல்லை.--Ginger 18:04, 2 ஜூலை 2009 (UTC)
இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை ஓரளவுக்குப் படித்து புரிந்து கொள்ள முடியும். சில மொழிகளின் எழுத்துகளைப் பெயர்த்தெழுதி படித்து ஓரளவுக்குப் பொருள் கொள்ளத்தெரியும். ஆகவே எப்படி அவர்கள் எழுதியுள்ளார்கள் என்று அறிவேன். குசராத்தி, வங்காளி போன்ற மொழிகளிலும் கூட எப்படி எழுதியுள்ளார்கள் என்று அறிய இயலும். எனக்குத் தமிழ் அளவுக்கு சமசுக்கிருத இலக்கணம் தெரியாதே ஒழிய, சமசுக்கிருதச் சொற்களுக்கு நன்றாக பொருள் விளங்கும். தெரியாத புதிய சமசுக்கிருதச் சொற்களுக்கும் எனக்குத் தெரிந்த சமசுக்கிருதச் சொற்களைக்கொண்டு நன்கு பொருள் உணர முடியும். அல்லது படித்துத் தெரிந்துகொள்ளத் தெரியும். எனக்குத் தெரியாது (உங்களுக்கும் தெரியாது) என்று நீங்கள் எல்லை மீறி கற்பனை செய்துகொள்ள வேண்டாம். நான் மேலும் மேலும் விளக்கம் தர விரும்பவில்லை. இந்த நேரத்தை ஆக்கப் பணிகளுக்குச் செலவிட விரும்புகிறேன். உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு நன்றி. --செல்வா 18:21, 2 ஜூலை 2009 (UTC)


இஞ்சியரே...அறிவியல் எழுத்து, நுட்ப எழுத்து என்றெல்லாம் உண்டு. எங்கெங்கு எது பொருந்துமோ, அதைப் பயன்படுத்த வேண்டும். இங்கு எத்தனையோ பேர் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்று கருத்து தெரிவித்திர்ருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி பொருட்படுத்தாமல் இருப்பது ஏன். அதெப்படி நீங்கள் மட்டும் செய்வது திணிப்பு போல் தெரியவில்லையா. உங்களுக்கு மட்டும் அருகதை உண்டு போலும். எதோ "மக்கள்" எம் பக்கம் என்று அரசியல் வாதிகள் போல. தமிழின் நீண்ட வரலாற்றின் அது மணப்பிரவாளத் திணிப்பில் இருது மீண்டதை மறந்திவிட முடியுமா. ஆமா, இனிமே ஆங்கிலேயர்கள் இந்தியாவை புதுமைப்படுத்த அடிமைப்படுத்தினார்கள் என்பது போல. --Natkeeran 01:20, 3 ஜூலை 2009 (UTC)

ஜிஞ்சர் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தாங்கள் இத்தளத்தை நன்கு முன்பே அறிந்தவர், எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள், என்னைப் போல முட்டி மோதி, விழுந்து.... வந்தவர் இல்லை. இத்தளத்தில நிறை, குறை இருக்கும், இருக்கின்றது, இத்தளத்தின் நிறை என்பதே இந்த குறைந்த பட்ச செயல் திட்டமான எளிய, அனைவருக்கும் புரிகின்ற.....கலப்பில்லாத தமிழில் என்ற திட்டமே. இது வேண்டாம் என்கிறீர்கள் அவரவர் இட்டத்துக்கு எழுதலாம் இந்த விதிமுறை தேவையில்லை. சரி அதையே அமல் படுத்தினால் என்று உதாரணத்திற்கு வைத்துகொள்வோம் நான் ஒரு கட்டுரை நியுரம்பர்க் தீர்ப்பாயம் என்று எழுதுகின்றேன் இதை வழக்கு சொல் டிரிபியுனல் ஆங்கில ஒலிபரப்பு சொல்தான் இருக்கவேண்டும் என்று நீங்களே பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டால் அல்லது தலைப்பையே மாற்றினால், நானும் மீண்டும் வலிந்து மாற்றுகின்றேன். மீண்டும் வேறொரு பயனர் ஜிஞ்சர் சொல்வது சரிதான், விக்கி திட்டப்படி செயல்படுகின்றார் மீண்டும் மாற்றினால் என் செய்வது. ஒன்று நான் மிக வலிந்து சர்ச்சையிடுவேன் அல்லது தளத்தை விட்டு வெளியேறுவேன். சரி வெளியேறினால் வெளியேறட்டும் என்றால் தங்களுக்கும் இதே மாதிரி திருத்தங்கள் சர்ச்சைகள் எழும். இத்தளம் முழுக்க இது மாதிரி பல கலவர சர்ச்சைகள் எழுந்து ஒரு குறிப்பிட்ட பங்களிப்பாளர்கள் வெளியேறிவிடுவார்கள் அல்லது தினமும் சர்ச்சைகள் நடந்து கொண்டேயிருக்குமே. எல்லோரும் வெளியேறிவிட்டால் இருக்கும் குறைந்த பயனர்களை வைத்து எப்படி குறைந்த பட்ச இலக்கையாவது, இந்த தளம் எப்படி எட்டும். யார் இதற்கு முன்வருவர், (சீர்செய்ய,பக்கவழிப்படுத்த, பகுப்பு, இத்யாதி....). வெளியிலும் இதுபற்றி வெகுவாக விமர்சிக்கப்படுமே. இப்பொழுது மட்டும் விமர்சனம் இல்லையா? உண்மைதான். இதைவிட மோசமாக இருக்கும் எனபதுதான். அதற்கு குறைந்தபட்ச செயல் திட்டம் என்பது வேண்டிய ஒன்றுதான் (இதை விதி, செயல் திட்டம், மொழி நடை எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.) என்பது கருத்து. இதில் எது தீர்க்கமானது என்பதை தாங்களே........ இத்தளத்திற்கு பிறரை அணுக வைக்க, இழுக்க இந்த சிறப்பை சொல்லித்தான் இழுக்க முடியும். பங்களிப்பாளர்களையும் இடம் பெறச் செய்ய ஒரளவுக்காவது முடியும். நான் வரக்கூடாது என்றிருந்தேன் இருந்தாலும்......--செல்வம் தமிழ் 12:28, 3 ஜூலை 2009 (UTC)

செல்வம்தமிழ் , நீங்கள் சொல்வது போல் “.....கலப்பில்லாத தமிழில் என்ற திட்டமே. இது வேண்டாம் என்கிறீர்கள் ” என திட்டவட்டமாக நான் சொல்லவே இல்லை. பொதுவாக தமிழர்கள் நல்ல ஊடங்களிலும், இலக்கியத்திலும், அரசு ஆவணங்களிலும் பயன்படுத்துவதை நாம் புறக்கணிக்கக் கூடாது. அதைத் தான் திருப்பிச் சொல்வேன். இங்கே தமிழ் விக்கி என்றாவுடன், எதோ புது உலகம், தமிழ் உரைநடைக்கு அப்பாற்பட்ட உலகம், வழக்கில் இல்லாத உலகம் போல் இங்கே ஒரு எண்ணம் நிலவுகிறது. சில சமயம், அதை நேரிடையாக சொல்கின்றனர், சில சமயம் “கலைக்களஞ்சியம்”, “எளிய தமிழ்” என்ற போர்வையில் அதையே செய்கின்றனர். மற்றவர்கள் இந்த எண்ணத்தில், உடன்பாடு இல்லை என்றால், தமிங்கிலம் ஊக்குவிக்கிறார் என்ற அவதூறு பரப்பப் படுகிறது. இது வரை நல்ல உரைநடைக்கு தமிழ்+ஆங்கிலத்தில் “நடைக் கையேடு”ம், ஆங்கிலத்தில் நடைக் கையேடும், சிறப்புக் கட்டுரைத் தகுதரமும், அதை அடைவதற்கான வெகு விளக்கமான பயிற்சிப் பக்கங்களும் உள்ளன. அங்கு எங்கும் கிரந்தம் எதிர்பு, பிறமொழி மூல சொற்கள் களைவது போன்ற ஐடியாக்கள் இல்லை. --Ginger 12:48, 3 ஜூலை 2009 (UTC)

உண்மைதான் அரசு ஆவணங்களில் பல யொழிபெயர்க்கப்பட்வில்லை இதற்கு தனி ஆணையம் உருவாக்கப்பட்டது ஆட்சி மாற்றங்களும் இடையேயிடையே நடந்த்தால் மொழி பெயர்க்க இயலவில்லை அரசின் கொள்கையும் அதுதான் இன்னும் பல ஆங்கிலத்தளங்கள் மொழி பெயர்ப்பு கட்டுமானத்தில் உள்ளன. இதற்காக முனைவர் மா.நன்னன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது என அறிகின்றேன். எல்லாமே தமிழில் வரவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையும் பத்திரிகையில் படித்தது. வழிமுறை, நடை வழி ... என்பது இல்லையென்றால் ஒருவர் இதுதான் சரி அதுதான் சரி எனபர். அது எல்லா கட்டுரையளருக்கு சிக்கல். இதில் நீங்கள் கூறவேண்டிய கிரந்தம் அது பற்றிய கொள்கை அது எப்படி எடுத்துக்கொள்ளப்படவேண்டும், என்பதையும் வேறு முறைகள் ஏதாவது உங்கள் திட்டங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள்...... இங்கே பதியலாமே.

நிலப்பரப்பிற்கேற்ப வழக்குச் சொல்லும் மாறும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் ஒரேமாதிரியான பொதுவான தமிழ் உரைநடைச் சொல் என்று வைத்திருப்பார்கள் என அறிகின்றேன். கிரந்தம் பற்றி நான் கூறவில்லை. அது இன்னும் தீர்வு காணப்படவில்லை. அது பற்றி என் விளக்கம் ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழக அரசின் கொள்கையில் தான் உள்ளது, நமது பாடத்திலும் கிரந்தம் அனுமதிக்கப்பட்டது தான். அதை இப்பொழுது எடுத்தால் சர்ச்சைதான் வரும். எளிய தமிழ், கலப்பில்லாத தமிழ் உங்கள் உடன்பாட்டுக்கு ஒத்துவருவது தான் என அறிகின்றேன். எளிய தமிழ் என்பது நமது பாடநூல்களில் உள்ளதுதான். சில இடங்களில் தவறுகள் இருக்கும் இங்கு அதை திருத்திக் கொள்ளலாம். வேண்டுமானால் அடைப்பு குறிக்குள் நீங்கள் விரும்பிய சொல்லையும் உள்ளிட்டு கொள்ளுங்களேன் தேவைப்படீன். இதற்கு ஒரு இணக்கமான முடிவு வரவேண்டும் அதுவே என் அவா. இனிமேல் நாம் படிக்கப்போவதில்லை நம் எதிர்கால சந்ததியினருக்காக சிலவற்றை.......வி........கொ மேலே கூறியவையும் கருத்துதான் நீங்கள் எது வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள் அல்லது பதியுங்கள்.நன்றி--செல்வம் தமிழ் 14:19, 3 ஜூலை 2009 (UTC)

நல்ல தமிழ் வழிகாட்டி - திஸ் இஸ் நோன்நன்சு[தொகு]

திஸ் இஸ் நோன்சன்சு. டமில் எப்படி எழுதலாம் என்று ஒரு மைநோரிட்டி சொல்லுறது (தொல்காப்பியம், நன்னூல் என்ற பழசல்லாம் விடுங்கோ) கேட்டு இங்கே டிக்டேட்ரசிப் செய்யுறது சரியோ. பாசிச வாதிகள். தமிழ் தலபான்கள். மொழித் தீவரவாதிகள். தமிழ் எப்படி எழுதோணும் எண்டு இலங்கை அரசு பரிந்துரைகளைப் பின்பற்றலாமே. மொழி இஸ் யஸ்ட எ மீடியம். சோ, கருத்து எப்படி போய்ச் சேருதெண்டு பாருங்கோ. இந்த கருத்துரையை விரைவில் எதிர்பாக்கலாம். --Natkeeran 13:47, 1 ஜூலை 2009 (UTC)

நல்ல தமிழ் வழிகாட்டி என்றால், தமிழ் ஊடகங்களையும், இலக்கியங்களையும், பாருங்கள்--Ginger 13:50, 1 ஜூலை 2009 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவும் ஒர் ஊடகமே. ஒரு நல்ல கட்டுரையும் ஒரு நல்ல இலக்கியமே. --Natkeeran 13:52, 1 ஜூலை 2009 (UTC)
நீங்கள் குறிப்பிடும் ஊடகங்களில் ஒன்றான ஆனந்த விகடனில் தமிங்கிலத்தின் அளவைக் காணுங்கள். "மூன்று இடங்களில்" என்று எளிமையாக மக்களுக்குப் புரியும் படி எழுதுவதை விட்டு விட்டு "மூன்று geographical locationகளில்" என்று எழுதுகிறார்கள். இதுவா நல்ல தமிழ் வழிகாட்டி? --ரவி 05:24, 2 ஜூலை 2009 (UTC)
உங்களுக்கு வயிற்றில் சோறு போடுவது, சமுதாயத்தில் ஒரு நிலையில் வைத்திருப்பது ஆங்கில மொழி அறிவு. அப்படி இருக்க மற்றவர்களை தமிங்கிலம் என இகழ்வது ஹிபாக்ரசி.--Ginger 08:39, 2 ஜூலை 2009 (UTC)
இதில் போலித்தனம் எதுவுமில்லை. இங்கு ஆங்கிலத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஆங்கில விக்கியில் நல்ல ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுங்கள் வரவேற்கிறோம். தமிங்கிலத்தைத் தான் மறுக்கிறோம். -- சுந்தர் \பேச்சு 09:04, 2 ஜூலை 2009 (UTC)

ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?--ரவி 14:05, 2 ஜூலை 2009 (UTC)

"மொழி இஸ் யஸ்ட எ மீடியம்" என வெறுப்புடன் நையாண்டி செய்துவிட்டு, அடுத்த போஸ்ட்லியே, அதை ஒத்துக் கொள்கிறீகளே !!!!!--Ginger 13:59, 1 ஜூலை 2009 (UTC)
நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் மொழி நிச்சியம் ஒரு வெறும் ஊடகம் மட்டும் இல்லை. மொழி ஒரு சமூகத்தின் நினைவு, வரலாறு, உணர்வு, அறிவு. அதைப் ஊடகம் என்று சிறுமைப்படுத்துவர்கள் அவர்களின் அதிகார அரசியிலை முன்னெடுப்பவர்களே. en:The medium is the message --Natkeeran 14:07, 1 ஜூலை 2009 (UTC)
அரசியல் விவாதங்களுக்கு செல்வது வீண் வாதம். வழக்கமாக தமிழ் எப்படி எழுதுகிறார்கள் என்றால், அதிகார அரசியல் பற்றி பேசுகிறீர்கள்--Ginger 14:15, 1 ஜூலை 2009 (UTC)
மணல் ஆறு வெலிஓயாவாக மாறியதும், மதராசு சென்னையாக மாறியதும் அரசியல் அல்லவா. இன்று தமிங்கிலமும் சமசுகிருதமும் மேலோங்கி இருப்பது அரசியல் அல்லவா. ஒரு மொழியின் இலக்கணத்துக்கு, ஒலிப்புமுறைக்கு மதிப்பு இல்லாமல் போனது அரசியல் அல்லவா. --Natkeeran 14:22, 1 ஜூலை 2009 (UTC)
இஞ்சியாரே, வழக்கமாக என்று நீங்கள் எதைச் சுட்டுகிறீர்கள்? வலைப்பதிவுகளையும் ஊடகங்களையும். ஆனால் கலைக்களஞ்சியம் வலையில் இருந்தாலும் அச்சில் இருந்தாலும் அது ஒரு நூல் தானே? நீங்கள் தமிழில் (புதினங்கள் அல்லாத) நூலொன்றை வாங்கிப் பாருங்கள். குறைந்தது ஒரு கலைக்களஞ்சியத்துக்கு அந்த நடையாவது இருக்க வேண்டாமா? மேலே முதல் பத்தியில் ஆங்கில விக்கியில் நடைக்காக எவ்வளவு மெனக்கிடுகிறார்கள் என்பதையும் சுட்டியுள்ளேன். அதையும் ஒருமுறை பாருங்கள். திறந்த மனத்துடன் எண்ணிப் பார்த்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். சி.என்.என். ஊடகத்தில் பேச்சு வழக்கு ஆங்கிலம் பயன்படுத்தினாலும் கூட ஆங்கில விக்கியில் எவ்வளவு நெறிமுறைகள் உள்ளன? ஆக்சுஃபோர்டு முறையில் அரைநிறுத்தம் (,) இட வேண்டுமென்று கூட பரிந்துரை உள்ளது. இவையெல்லாம் நடைமுறை ஆங்கிலமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். இதிலுள்ள அரசியலை விடுத்தப் பொதுவாக நூல்களிலும் செம்மொழி நடையிலும் எத்தகையப் பயன்பாடு உள்ளது எனப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 04:44, 2 ஜூலை 2009 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

"தனித்தமிழ்" என்றவுடன் பலருக்குச் சில அரசியல் இயக்கங்களே நினைவுக்கு வருகின்றன. (சிலருக்கு அவ்வியக்கங்களுடன் ஒப்புதல் இருக்காது.) ஆனால் இது இன்று நேற்றல்ல, ஆழ்வார்கள் நாயன்மார்களால் பின்பற்றப்பட்ட வழக்கு என்று பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை, வரலாற்றிலும் அது பற்றிப் பேசப்படுவதில்லை. அதனால் தலைப்பை 'மொழி நடை வழிகாட்டி' அல்லது 'நற்றமிழ் வழிகாட்டி' என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:15, 2 ஜூலை 2009 (UTC)

சுந்தர், உரிய தலைப்புக்கு நீங்களே மாற்றி விடுங்கள். நன்றி--ரவி 09:37, 2 ஜூலை 2009 (UTC)
இப்போதைக்கு மொழி நடை வழிகாட்டி என்று மாற்றியுள்ளேன். எவருக்காவது மாற்றுப் பரிந்துரை இருக்குமானால் மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 09:43, 2 ஜூலை 2009 (UTC)
இப்பொழுதுதான் தலைப்பு சரியாக உள்ளது. தனித்தமிழ் என்பது தேவை இல்லை. நல்ல தமிழில், எளிய தமிழில், நல்ல மொழி நடையில், கருத்துகள் விளங்குமாறு எழுதுதல் வேண்டும். மொழித் தூய்மை என்பது அடிக்கருத்தில்லை, ஆனால் தேவை இல்லாமல், அதுவும் தமிழ்ச்சொற்களை விலக்கிவிட்டுப் பிறமொழிச்சொற்களைப் (அது உருது, ஆங்கிலம், சமசுக்கிருதம் ஆகிய எம்மொழிச் சொல்லானாலும்) பெய்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு சில சொற்கள் கலப்பது எம்மொழியிலும் நிகழும் வழக்கம்தான். அது மொழிக்கு மொழி அளவிலும், தன்மையிலும், தேவையைப் பொருத்தும், வரலாற்றைப் பொருத்தும், பெறும் மொழியில் அதன் இயல்பைப் பொருத்தும் வேறுபடும். --செல்வா 14:58, 2 ஜூலை 2009 (UTC)
" தேவை இல்லாமல்". எது தேவை என நீங்க தீர்மானிக்கணும் இல்ல? மத்தவங்க எழுதணும், நீங்க தீர்மானிக்க வேண்டும், நன்னா இருக்கு. எது தேவை என்று Manual of Style , நடைக் கையேடு சொல்கிரது , இதற்கு மேல் தயவு செய்து நீங்கள் மற்றவர்களுக்கு தெலுங்கு, குஜராதி, உருது, சமஸ்கிருதம், ஜெர்மன், சுவாகிலி விகிகளைப் பற்றி லெச்சர் அடிக்க வேண்டாம்.--Ginger 17:49, 2 ஜூலை 2009 (UTC)
ஜிஞ்சர் ஐயா எனக்கு உங்கள் வாதத்தின் அடிப்படையே புரியவில்லை. எது தேவை என்று யார் தீர்மானிப்பது என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு உங்களுடைய தேவை என்ன என்று கொஞ்சம் விளக்குங்கள். "தொல்காப்பியம், நன்னூல் போன்றவை பழசு, ஒதுக்கிவிடவேண்டும் என்கிறீர்கள்". புரிகிறது. "நாம் தமிழில் எழுதுகிறோம். அவ்வளவுதான்.அதோட கேஸ் குளோஸ்". அதென்னங்க அந்த "கேஸ் குளோஸ்". "நாம் எல்லா கட்டுரைகளையும் தற்காலத் தமிழ், நடைமுறை தமிழில் எழுதுகிறோம்". என்றும் கூறுயிருக்கிறீர்கள். அந்த நடைமுறைத் தமிழ் என்பது எது? இன்றைய சஞ்சிகைத் தமிழ்? வானொலி, தொலைக்காட்சித் தமிழ்? தொலைக்காட்சிகளிலே சமையல் குறிப்புச் சொல்லும்போது கூடப் பின்வருமாறு தான் சொல்கிறார்கள்:
"ஒரு 'சாஸ் பானை' எடுத்துக்கங்க, அதில கொஞ்சமா 'ஆயிலை' ஊத்திக்கங்க, சூடானதும் எடுத்து வச்சிருக்கிற 'ஆனியன்' 'டமாட்டா' வை அதில போட்டு 'ஃபிரை' பண்ணுங்க. 'கோல்ட் கலர்' வந்ததும் 'பாயில்' பண்ணி வைச்சிருக்கிற 'ரைசை' அதில கொட்டிக் கிளறுங்க".
இதுதான் இன்றைய நடைமுறைத் தமிழ் என்கிறீர்களா? ஏங்க, எண்ணெய், வெங்காயம், பொரித்தல், பொன் நிறம், கொதிக்க வைத்தல், அரிசி எல்லாம் பழசாப் போச்சுங்க, நவீனமா "ஆயில்", "ஆனியன்", "ஃபிரை", "கோல்ட் கலர்" "பாயில்", "ரைஸ்" என்று மாத்திக்கணும் என்கிறீர்களா? எளிய தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது "தேவையில்லாமல்" பிறமொழிச் சொற்களைத் தமிழில் திணிப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், இருப்பதைக் காப்பாற்றிக்கொள்ள முயலும்போது உங்களுக்குக் கோபம் வருகிறதே? இதெல்லாம் மக்கள் கேட்டா திணிக்கிறார்கள்? இல்லைங்க. தாங்கள் திணித்து மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார்கள். "என்னங்க 'வெங்காயம்' எங்கிறீங்க 'ஆனியன்' அப்படீன்னு தமிழ்லயே சொல்லுங்க" என்ற நிலை இன்று வந்துவிட்டது. இதனால் தமிழைச் சரியாக எழுதுவதற்கு வழிகாட்டிகள் நிச்சயம் தேவை. எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவரவர் நினைப்பது போல் எழுத முடியாது. அப்படி எழுதுவதானால் "தமிழ்" என்று சொல்லாமல் வேறு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும்.


மேலும் பலர் தமிழுக்குரிய இலக்கணங்கள், சொற்கள், நடை என்பவற்றை அறிந்து நல்ல தமிழில் எழுத எண்ணுகிறார்கள் அவர்களுக்கு வழிகாட்டுவதே இந்த வழிகாட்டியின் நோக்கம். அப்படியில்லாமல் வலைப்பதிவுகள், வணிக அடிப்படை கொண்ட சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் என்பவற்றைத்தான் நீங்கள் வழிகாட்டிகளாக வைத்துக்கொள்வேன் என்று அடம்பிடித்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். வேறு பலருக்கு உதவக் கூடிய வழிகாட்டிப் பக்கத்தை நீக்கி விட வேண்டும் என்பதில் உங்களுக்கு ஏனைய்யா இவ்வளவு அக்கறை? மயூரநாதன் 07:06, 3 ஜூலை 2009 (UTC)
இங்கு நடக்காததெல்லாம் கற்பனை செய்து கொண்டு, கோவப்படாதீர்கள். நடந்ததை அலசுக--Ginger 09:46, 3 ஜூலை 2009 (UTC)
”உதவக் கூடிய வழிகாட்டிப் ” இதுமட்டும் குறிப்பிட்ட வழிகாட்டிகள் 3 இங்கிலீஷில், 1 தமிங்கலத்தில். ஒரு பக்கம் நான் சொல்லாததை வைத்துக் கொண்டு கதறுகிறீர்கள், மற்றொரு பக்கம் `உதவக் கூடிய’ கையேடு எனபது முக்கால்வாசி ஆங்கிலத்தில் உள்ளது என்பது கூட தெரியாமல் பேசுகிறீர்கள். உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தமிங்கில உதாரணத்தை கண்டிப்படதற்கு என்ன moral right இருக்கு என தெரியவில்லை. இதுதான் கண்ணாடி அறையிலிருந்து கல் வீசுவது என சொல்லுவார்கள்--Ginger 10:02, 3 ஜூலை 2009 (UTC)
நீங்கள் குறிப்பிட்ட தமிங்கில உதாரணத்தை கண்டிப்படதற்கு என்ன moral right இருக்கு என தெரியவில்லை. என்கிறீர்கள். இன்னும் உங்களுக்கு என்னென்ன தெரியவில்லை என்பதை நீங்கள் இப்பக்கத்தில் காட்டியுள்ளீர்கள். நாங்கள் யாரும் என்ன சொன்னால்தான் உங்களுக்கு விளங்கும்?! உறங்குபவனை எழுப்பலாம். ஒரு மொழியைப் பயன்படுத்தும்பொழுது அதில் உள்ள சொற்களை நீக்கிவிட்டு பிறமொழிச்சொற்களை இட்டு எழுதுவது தவறு. ஏன் தவறு என்றால், உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை ஒருவர் வந்து நீக்கியோ உடைத்தோ போட்டால் அது எப்படித் தவறோ அப்படி. நன்றாக ஓடியாடி விளையாடும் ஒருவர் குழந்தையை அதனுள்ளிருக்கும் இதயம் குடல், மூளை எல்லாவற்றையும் உருவிவிட்டு முடமாக்குவது எப்படித் தவறோ அப்படி. அது தவறில்லை, கெடுக்கக்கூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன "moral right" உள்ளது என்றும் நீங்கள் கேட்பீர்களாக இருக்கும். நீங்கள் அருகதை பற்றிக் கூறினீர்கள், இங்கு "moral right" பற்றிக் கேட்கிறீர்கள். இவற்றின் பொருள்கள் உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிசுவராக்குவதுதற்குத்தான் "moral right" உள்ளதாகவோ, அப்படிச் செய்யகூடியவர்களுக்குத்தான் அருகதை இருப்பதாகவோ சிலர் நினைக்கலாம். இதில் எனக்கும் பிற பலருக்கும் ஒப்புதல் இல்லை. உங்கள் உரையாடல் ஒரு நல்ல சான்று. ஆனால் வழிவழியாக இப்படி வருபவர்கள் உள்ளார்கள். சுவாமினாத தேசிகரைக் குறிப்பிடலாம். இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.--செல்வா 13:44, 3 ஜூலை 2009 (UTC)
"அதில் உள்ள சொற்களை நீக்கிவிட்டு பிறமொழிச்சொற்களை இட்டு ". நீக்குவது யார்?நானா?நீங்களா ? சந்தேகமானால் யார் அதிகம் சொல் மாற்றங்கள் செய்கிறார் என எண்ணிப் (count) பாருங்கள்--Ginger 15:13, 3 ஜூலை 2009 (UTC)

நடவடிக்கை, ஒன்றியம், இயற்பியலாளர் போன்று தமிழில் வழக்கில் உள்ள சொற்களை "நீக்கிவிட்டு" (உங்கள் மனதளவிலேயே) operation, union, பௌதீகம் போன்ற பிற மொழிச் சொற்களைப் "புகுத்தியவர்" யார்? இதே போல் தான் ஊடகங்களும். முதலில் எழுதும்போதே ஆங்கிலத்தைத் திணித்து எழுதுவது. தமிழில் எழுதலாமே என்று கேட்டால், "தமிழைத் திணிக்கிறார்கள்" என்று கூப்பாடு. உங்கள் வீட்டில் இன்னொருவைப் புகுத்தினால் அது திணிப்பு. உங்கள் வீட்டில் உங்களை இருக்கச் சொல்வது எப்படி திணிப்பாகும்? அது உங்கள் உரிமை அல்லவா? தமிழில் எழுதும் போது தமிழ்ச் சொற்களுக்கு முன்னுரிமை தருவது எப்படி திணிப்பாகும்?

ஒரு மொழியில் இல்லாத சொல்லுக்குத் தான் பிற மொழியில் இருந்து கடன் வாங்கலாம். அது கூட வாங்கலாம் தான். வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வேர்ச்சொல் வளம் உடைய தமிழ் போன்ற செம்மொழிகள் தேவையான சொற்களைத் தாமே உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், தமிழில் ஏற்கனவே இருக்கிற சொற்களுக்கும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதால் தமிழ் மொழிச் சொற்கள் வழக்கிழக்கின்றன. இது தமிழ் மொழியின் இழப்பு. தமிழில் இருந்து ஆங்கிலத்தை விலக்கினால் ஆங்கிலத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. ஆனால், அளவு கடந்து தேவையின்றி ஆங்கிலத்தைத் தமிழில் கலந்தால் தமிழுக்குத் தான் இழப்பு. தன்னைத் தமிழராக உணர்பவர்கள் இந்த இழப்புக்கு வருந்துவார்கள். இதற்கு மேல் எனக்கு "நன்னா" விளக்கத் தெரியவில்லை.--ரவி 16:33, 3 ஜூலை 2009 (UTC)

"நடவடிக்கை, ஒன்றியம், இயற்பியலாளர் போன்று தமிழில் வழக்கில் உள்ள சொற்களை "நீக்கிவிட்டு" (உங்கள் மனதளவிலேயே) operation, union, பௌதீகம் போன்ற பிற மொழிச் சொற்களைப் "புகுத்தியவர்" யார்?" அது யார் என எனக்கு எப்படி தெரியும், அது உங்கள் வேலை, யார் `ஒன்றியத்தை` நீக்கினார்கள் , யார் அதற்கு பதில் யூனியன் போட்டர்கள் என்பது உங்கள் வேலை, என்னிடம் கேட்காதீர்கள்; சோவியத் யூனியன் என்றுதான் தமிழ்நாட்டில் படித்த மக்களிடையே, அறியப்படுகிறது, எழுதப்படுகிரது. மேலும் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என தேடினீர்களானால் 15000 பக்கங்கள் வரும்; நீங்கள் உங்கள் தேவையற்ற திணிப்பு கொள்கையை பயன்படுத்தி, ”இந்திய ஒன்றியம் முஸ்லிம் லீக்” , தவறு, தவறு ”இந்திய ஒன்றியம் முஸ்லிம் கழகம்” என ஏளனத்தனமாக மாற்றுங்கள்.--Ginger 17:02, 3 ஜூலை 2009 (UTC)

செங்குன்றம், வண்ணாரப்பேட்டை போன்ற தமிழ் ஊர்ப்பெயர்கள் எல்லாம் தமிழ் தெரியாதவர்களுக்குப் புரிவதற்காக red hills, washermanpet ஆகலாம். ஆனால், வெளிநாட்டு union தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்குப் புரிவதற்காக ஒன்றியம் ஆகக் கூடாதா?--ரவி 17:14, 3 ஜூலை 2009 (UTC)

மாற்றுக் கருத்துகள் பதிவாகட்டும் என ஏதும் கூறலாமே ஒழிய இப்பயனர் ஏதும் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்க இடம் இல்லை. சோவியத் ஒன்றியத்தை Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik என்கிறார்கள் (இலத்தீன் எழுத்துகளில்). அதில் சோயூசு என்பதைதான் யூனியன் என்று தங்களுக்குப் புரியுமாறு மாற்றி ஆங்கிலத்திலும் மற்ற ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் வைத்துக்கொண்டுள்ளார்கள். தமிழில் ஒன்றியம் என்பதும் அப்படித்தான் என்பது ஒரு சிலருக்குப் புரியாது. தமிழை எப்படியெல்லாம் கெடுக்கத் துணிகிறார்கள் என்பதற்கு இந்தப் பயனரின் கருத்துகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இப்படிப்பட்டவர்கள் சில ஊடகங்களில் இருந்துகொண்டு இன்னும் பலவாறு பெருங்கேடு விளைவிக்கின்றார்கள். --செல்வா 17:28, 3 ஜூலை 2009 (UTC)

Indian Union Muslim League என்பதை இந்திய ஒன்றிய முசுலிம் கழகம், இந்திய ஒன்றிய இசுலாமியர் கழகம் என்று எப்படி எழுதினாலும் தவறில்லை. ஆனால், அந்த எல்லைக்கு இன்னும் தமிழ் விக்கி செல்லவில்லை. செல்லும் எண்ணமும் இல்லை. தமிழர்கள் மட்டும் தான் ஒலிப்பு பிசகாமல் "கன்னத்தில் போட்டுக் கொண்டு" உச்சரிக்க வேண்டும் என்று "கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்". பாரதிய சனதா கட்சி கட்டுரையின் இடப்பக்கம் உள்ள பிற மொழி விக்கி கட்டுரைகளின் பெயர்களைப் பாருங்கள். பாரதம், மக்கள், கட்சி ஆகிய மூன்று சொற்களும் பெரும்பாலும் அந்தந்த ஊர் மொழிச் சொற்களுக்கு மாற்றப்பட்டே வழங்கப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் பொருள் அறிந்து பெயர் சொல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் பாரதிய சனதா கட்சி என்பதை "இந்திய மக்கள் கட்சி" என்று எழுத முனைவது "தெய்வ குற்றமாகி" விடும். சனதா என்றால் மக்கள் என்று பொருள் என்று எத்தனை தமிழருக்குத் தெரியும்? பொருள் புரியாமல் தேவையின்ற வேற்று மொழிச் சொற்தொகையைக் கூட்டிக் கொண்டே செல்வது தான் ஒரு மொழியின் வளர்ச்சியா?--ரவி 17:32, 3 ஜூலை 2009 (UTC)

//மாற்றுக் கருத்துகள் பதிவாகட்டும் என ஏதும் கூறலாமே ஒழிய இப்பயனர் ஏதும் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்க இடம் இல்லை.//

நடுநிலையோடு நோக்கும் பயனர்களாவது புரிந்து கொள்ளட்டுமே என்று தான் நானும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறேன்--ரவி 17:36, 3 ஜூலை 2009 (UTC)

தமிழர்களே உங்கள் அறிவுச் சொத்தான நன்னூலையும், தொல்காப்பியரையும் ஓரங்கட்டுங்கள்[தொகு]

நல்லூலையும் தொலகாப்பியரையும் ஓரங்கட்டு. இந்திய அரசிமைப்புச் சட்டத்தையும் ஒரங்கட்டு. மனத உரிமைகள் பிரகடனம் அதையும் ஓரங்கட்டு. இதெல்லாம் என்ன பழசுகள். இதையெல்லாம் படிச்சு புருஞ்சுக்க முடியுமோ. மாற்று என்ன? இதோ சுட சுட தமிங்கில/சமசுகிருத இலக்கணம் தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில், இதழ்களில், வலைப்பதிவுகளில் பகிரப்ப்பட்படுகிறதே. அதைப் பயன்படுத்தலாம். அப்படிப் போடுங்க.

சமயத்தை, நாட்டை இழிவு படுத்தினால் எவ்வளவு கோவம் வருகுது. தமிழர்களுக்கு அவர்களின் அறிவுச் சொத்தை கேலி செய்வதை தமிழர்கள் மட்டுந்தான் பொறுத்துக் கொள்வர். நலிவானவர்கள். சுரணை குறைந்தவர்கள். --Natkeeran 01:08, 3 ஜூலை 2009 (UTC)

நக்கீரன் “இதோ சுட சுட தமிங்கில/சமசுகிருத இலக்கணம் ” என சொல்வதில் பெரும் குழப்பம் உள்ளது. ஆங்கிலம், உருது போன்ற மொழிகளிலுருந்து வருவது இலக்கணமல்ல, சொற்கள் Vocabulary , அவ்வளவுதான். உதாரணமாக, பஸ் என்ற சொல் 80 வருடங்களாக தமிழில் புழவுகின்றது. ஆனால் அது தமிழ் இலக்கணம் படிதான் பயன்படுகிறது - உதாரணம் , பஸ்ஸில் வந்தேன், பஸ்ஸை உடைத்தார்கள், பஸ் மேல் ஏறினேன். நீங்களும், இங்கு வாதம் செய்யும் மற்றவர்களும் மொழி என்றால் vocabulary யை வைத்து குழப்பிக் கொண்டுள்ளார்கள். மொழி என்றால் அதன் முதுகுக் தண்டு , இலக்கணம். மேலும் syntax. ஒரு மொழியின் முக்கியத்துவத்தில் vocabulary அப்புறம்தான் வருகிரது. சங்கடம் என்பது சமஸ்கிருதத்திலிருந்து வந்து, பல நூற்றாண்டுகள் தமிழில் பயன்படுகிரது. ஆனால் அதன் திருபுகளும், பயன்களும் தமிழ் இலக்கண விதிப்படிதான் செல்கிரன.--Ginger 16:28, 4 ஜூலை 2009 (UTC)

சமசுக்கிருதம், ஆங்கிலம் முதலியவற்றிலிருந்து இலக்கணம் வருவதில்லை என்று யார் சொன்னது? நீங்கள் எழுவாய் பயனிலை, வேற்றுமை உருபுகளை மட்டும்தான் இலக்கணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது.சொற்களோடு சேர்ந்து தமிழுக்குப் புறம்பான எத்தனையோ இலக்கணக் கூறுகளும் வந்து சேருகின்றன. "ட", "ர", "ல" போன்ற எழுத்துக்கள், ஒற்றிழுத்துக்கள் என்பன தமிழில் முதலெழுத்தாக வரா என்பது தமிழ் இலக்கணம் சார்ந்த விதி. ஆனால் பிற மொழிகளில் இருந்து வகை தொகையின்றிச் சொற்களைக் கடன் வாங்குவது மட்டுமன்றி, அவற்றின் ஒலிப்பும் பிழைபடாமல் தமிழில் எழுதவேண்டும் என்கிறார்கள். இதனால் டாம்பீகம், ரங்கன், ரோகம், லோகம், லாவகம், ட்ராலி, ப்ரபு, ஸ்வரம் போன்று தமிழ் இலக்கணத்துக்கு மாறுபாடான வழக்குகள் திணிக்கப்படுவதுடன், தமிழில் இல்லாத எழுத்துக்களையும் புகுத்துகிறார்கள். இதுவும் இலக்கணத்தின் ஒரு பகுதிதான். விக்ரகம், சுப்ரபாதம், சுபத்ரா, சுக்லம், ரத்னம் போன்றவற்றில் வரும் "க்ர", "ப்ர", "த்ரா", "க்ல", "த்ன" என்பவையெல்லாம் தமிழ் இலக்கண விதிகளுக்கு மாறானவை ஆனால் பிறமொழிச் சொற்களுடன் தமிழுக்கு இவையும் வந்துவிட்டன. இவற்றைத் தமிழ் இலக்கண விதிகளுக்கு அமைய மாற்றினாலும் சண்டைக்கு வருகிறார்கள். இதுபோல இன்னும் பல பிறமொழி இலக்கணத் திணிப்புக்களுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டலாம். மயூரநாதன் 18:09, 4 ஜூலை 2009 (UTC)

மயூரநாதன், நீங்கள் சொல்தில் சில சிக்கல்கள் உள்ளன. நீங்கள் கொடுக்கும் வினைச் சொற்கள் செயப்பாட்டுவினை (passive voice)யில் உள்ளன அல்லது, செய்பவன் இல்லாமல் உள்ளன. ”தமிழ் இலக்கணத்துக்கு மாறுபாடான வழக்குகள்” என்கிறீர்கள். தமிழ் இலக்கணம் என்பது எப்படி தமிழ் பேசுபவர்கள் பேசி , அதைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான். ரேடியோ, நாடகங்கள், சாதாரண பேச்சு, பிரசங்கங்கள், பொது மேடைப் பேச்சுகள், இவற்றிலெல்லாம் எப்படி பேசை புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான். உதாரணமாக , `திராவிடம்` என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்துள்ளது. திராவிட இயக்க பேச்சாளர்களே , அதை `த்ராவிட` என்றும் சொல்கிறார்கள். அங்கே, யார் அவர்களை ” திணிப்பு” செய்கிறார்கள? `திணிப்பு` என்றால் ஏதோ கட்டாயம் என பொருள் ஆகிரது. அப்பொருளில் `திணிப்பு` நிச்சயம் நடக்கவில்லை பலர் `திராவிட` என எழுதினாலும் `த்ராவிட` என பலுக்கிறார்கள். உதாரணமாக இந்த விடியோவை [1] கேளுங்கள் , ஒரு தி.மு.க. பேச்சாளர் 41-42 நொடிகளில் `த்ராவிட` என்கிறார். யார் அவரை அப்படி துப்பாக்கி முனையில் உங்கள் கணக்குப்படி `இலக்கணப் பிழை`யோடு சொல்ல வைத்து `திணிப்பு` நடந்துள்ளது? யூனியன் என்று பரவலாக சொல்லப்படும்/எழுதப்படும் சொல்லில் எந்த `திணிப்பு` நடந்துள்ளது?

அதே சமயம், சிலர் விக்கிரகம், சுப்பிரபாதம், சுபத்திரா என சொல்கிறார்கள், எழுதுகிறார்கள், சிலர் விக்கரகம், சுப்பரபாதம், சுபத்ரா என சொல்கிறார்கள்,எழுதுகிறார்கள் சிலr விக்ரகம் என பேச்சில் சொல்லி, விக்கரகம் என எழுதலாம். இதையெல்லம் புரிந்து கொள்ள 700 வருடம் முன் எழுதப் பட்ட நூல் விடை அளிக்கும் என நம்பமுடியாது. இதற்லெல்லாம் ஒரு `திணிப்பு` தான் காரணம் என சொல்லுவது, மிகையாக எளிமைப்படுத்துவதாகும்--Ginger 22:27, 4 ஜூலை 2009 (UTC)

இன்னொரு உதாரணம் [2]. 10-11 நொடிகளில், ஸ்டாலின், கருணநிதியின் பிள்ளை, திமுக தலைவர் `த்ராவிட` என உச்சரிக்கிறார்.அதில் இருந்து இலக்கணத்தை என்னவென்று புரிந்து கொள்கிறீகள், எங்கே திணிப்பு உள்ளது?
என் காதுகளுக்குத் திராவிட என்றுதான் கேட்கின்றது. ஆனால் அதுவல்ல இங்கு கேள்வி. நீங்கள் இலக்கணம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவில்லை. ஒருவர் "தமில்" அல்லது "வால்க" என்றால் அவை சரி என்று ஆகாது என்று புரிந்து கொள்ளவில்லை. சற்று முன்னர் நான் கீழே எழுதியுள்ளதைப் பாருங்கள். நீங்கள் தமிழை சரிவர அறியாதவர், கலைக்களஞ்சியத்தில் எப்படி எழுத வேண்டும் என்றும் அறியாதவர் என்பது தெளிவு. அதுமட்டுமல்லாமல், தமிழையும் தமிழர்களையும், தமிழ் முன்னோர்களையும் மிக இழிவாகப் பேசுகின்றீர்கள். தமிழைக் கண்டபடியெல்லாம் கெடுத்து எழுத வேண்டும் என்கிறீர்கள். உங்கள் கருத்துகளை நான் ஏற்கவில்லை. உங்கள் கருத்துகள் இங்கு பதிவாவதில் ஒரு நன்மை உண்டு. எப்படியெல்லாம் சிலர் தமிழை கெடுக்க முனைகிறார்கள் என்பதனையும், தமிழர்களையும், வழிவழியாய் வந்த தமிழறிஞர்களையும் "ஓரங்கட்ட" வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் என்பதனையும் தமிழர்கள் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். --செல்வா 00:07, 5 ஜூலை 2009 (UTC)
Ginger, நீங்கள் மிகப்பல இடங்களில் -கிரது என்று எழுதி தமிழ் விக்கிப்பீடியா தளத்தைப் பிழைகள் மிகுந்த, பிழைகள் மலிந்த தளமாக மாற்றி வருகின்றீர்கள். நான் உள்பட எல்லோரும் எழுத்துப்பிழைகள் விடுகிறோம்தான், ஆனால் நீங்கள் தமிழை இப்படி இழிவுபடுத்துமுகமாக தாறுமாராக எழுதுவதை முதலில் மாற்ற வேண்டுகிறேன். தமிழில் கட்டுரை நடையில் எழுதும் பொழுது திருந்திய, சரியான முறையில் எழுதுதல் வேண்டும். இது ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் உள்ள வழக்கு. பேசுவது போலவே எழுதுதல் இல்லை. பேச்சு மொழி பல வகையாக இருக்கும், அது ஆளுக்கு ஆளும், குழுவுக்குக் குழுவும், இடத்துக்கு இடமும், காலத்துக்கு காலமும் மாறக்கூடும் (மாறுவது இயல்பு). கலைக்களஞ்சியம் போன்றவை சீரிய எழுத்து இலக்கியம். ஆகவே இதில் பொதுவாக எல்லாத் தமிழர்களும் (இடம், குழு என்றில்லாமல்) புரிந்துகொள்ளுமாறும் ஓரளவுக்குக் காலம் கடந்து நிற்பதாகவும் இருக்குமாறு எழுத வேண்டும். நீங்கள் தமிழ்மொழியை வழிவழியாய் நிறுவி, வரையறுத்து வந்த பேரறிஞர்கள் தொல்காப்பியர், நன்னூலார் ஆகியவர்களையே மதிக்காத்தனமாகப் பேசுகின்றீர்கள். தமிழையும் தமிழர் பண்பாடுகள், வழகாறுகளையும் மிக இழிவாகப் பேசுகின்றீர்கள் ("ஓரங்கட்டு"). எம்மொழியும் அதன் இலக்கணங்கள், இயல்புகளை ஒத்தே இயங்கும். தமிழ்மொழி, செவ்விய இலக்கணம், இலக்கியங்கள் கொண்டுள்ளதாலும், அவற்றை வழிவழியாய்த் தமிழர்கள் பின்பற்றியதாலும், தமிழ் இன்றும் செவ்விய வாழ்மொழியாக வாழ்கின்றது. தமிழ் மொழியைப் பற்றியும், தமிழர்களின் முன்னோர்களையும் இகழ்ந்து பேசும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். நீங்கள் வேற்றுமொழிச்சொற்களைப் பயன்படுத்துவது பற்றிக் கூறுகின்றீர்கள். அவை தமிழ் மொழியின் அடி வேர்களையே அழிக்கின்றது என்பதை உணரவில்லை. மரங்களை வெட்டினால் காடு அழியும் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம் ஆனால் பலருக்குப் புரிகின்றது. கடைசியாக "தமிழ்" என்பது சமசுக்கிருதத்தில் அவர்கள் மொழியில் சொல்ல இயலாததால், "த்ரமிள, த்ரமிட" என்றாகி "த்ரவிட" ஆகியது. அது தமிழ்தான். திராவிட என்னும் சொல் இன்று வேறுபொருளில் வழங்குகின்றது.--செல்வா 23:45, 4 ஜூலை 2009 (UTC)

கிரது, கிரது சற்று எரிச்சலை தந்தாலும் அது தட்டச்சினால் வந்த பிழை அல்லது அவரது பேச்சு வழக்கு என்று கூறுவார் அதை வலியுறுத்த முடியாது. அப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் உரையாடுவது கூட தவிர்க்கப்படவேண்டியது தான். பேச்சு பக்கத்தில் இதை முன்னிருத்தமுடியாது. கட்டுரையில் தவிர்க்க சொல்லலாம். பல இடங்களில் அப்படித்தான் வருகின்றது. இதை தவிர்த்து தட்டச்சு செய்தால் அனைவருக்கும் புரியும்.--செல்வம் தமிழ் 05:37, 5 ஜூலை 2009 (UTC)

என்ன செல்வம், "தட்டச்சுப் பிழை" என்பது எனக்குத் தெரியாதா? நானும் அதனைச் சுட்டியுள்ளேன். ஒருவர் எப்படி வேண்டுமென்றே வலிந்து தமிழைக் கெடுக்க வேண்டும் என்று இங்கு வாதாடிக்கொண்டே, கண்டபடியெல்லாம் எழுதுகிறார், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். "வலியுறுத்த" முடியாது, "முன்னிறுத்த" முடியாது, ஆனால் அவரை திருத்தி எழுதச்சொல்லலாம். இல்லாவிடில், அவர் எழுதும் ஒவ்வொரு இடத்திலும் சென்று "வருகிரது" என்று எழுதினால் "வருகிறது" என்று திருத்த வேண்டிவரும். நாளை இவரோ பின்னொருவரோ கூகுளில் பாருங்கள் வருகிரது என்பதற்கு 7 மில்லியன் எடுத்துக்காட்டுகள் விக்கிப்பீடியாவிலேயே வருகிறது என்பார்கள். விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களும் ஒருவகையான ஆவணம். இதில் வேண்டுமென்றேயோ, தமிழையும், உரையாடல் பண்புகளையும் அறவே மதிக்காமலேயோ எழுதும் ஒருவரை திருத்தச் சொல்லலாம். --செல்வா 14:36, 5 ஜூலை 2009 (UTC)

ஆம். நீங்கள் சொல்வது சரி தான--செல்வம் தமிழ் 15:59, 5 ஜூலை 2009 (UTC)

நன்றி, செல்வம். --செல்வா 18:35, 5 ஜூலை 2009 (UTC)

பயனர் செல்வா 700 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த இலக்கண நூல்கள் வழக்கு தமிழுக்கு உகந்தவை அல்ல என்று ஒதுக்க வேண்டும் என்பதை `இழிவு` என கருதுகிறார். நோய் வந்தால் 700 ஆண்டு முன்னால் செய்த மருந்துகளை சாப்பிடுவாரா, அல்லது தற்கால மருந்துகளை சாப்பிடுவாரா? ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் காலத்து மொழியை இப்பொது பயன்படுத்தினால் சிரிப்பார்கள். ஷேக்ஸ்பியர் கால்த்தில் thou goest, thou speaketh என்றெல்லால் பேசினார்கள்/எழுதினார்கள். ஆனால் இப்போது you speak என்றுதால் வழக்கு. ஆங்கில கட்டுரையில் thou speaketh என்றெழுதினால், ஷேக்ஸ்பியரை ஒரங்கட்டு என்றுதான் (ஆங்கிலத்தில்) சொல்லுவார்கள். அதை யாரும் இழி சொல் என கருதமாட்டார்கள். `இழிசொல்` என சொல்லி செல்வா எல்லோரையும் உணர்சி எல்லைக்கு எடுத்து செல்ல முயல்கிறாரே தவிர, பகுத்தறிவை உபயோகிப்பதற்கு அல்ல. Avoid emotive words என்பதை அவர் செயல்படுத்த வேண்டும்.--Ginger 10:56, 5 ஜூலை 2009 (UTC)

ஆட்டுவித்தால் ஆரொரொவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன மொழி இன்றும் எல்லோருக்கும் புரியுமாறு உள்ளது. இதனை இதனால் இவன் முடிப்பன் என்றோ கற்க கசசடற கற்பவை என்றோ ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் சொன்னதும் இன்றும் விளங்குகின்றது. மொழி என்றால் என்ன, அதன் பயன்பாடு என்ன, அது நம் வாழ்வோடு எப்படி ஒன்றி உள்ள ஒன்று என்று அறிந்தால் இதெல்லாம் விளங்கும். சொற்களும், அவற்றுக்கு இடையே உள்ள உயிர்ப்பான தொடர்புகளும் தமிழ் மொழிக்கு இன்றியமையாதது. நான் மரங்களைத்தானே வெட்டுகிறேன், காட்டையா அழிக்கின்றேன் என்று கூறும் உங்கள் பகுத்தறிவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இங்கு பேசுவதும், எழுதுவதும் "தற்காலத் தமிழ்"தான். மேலும், மீண்டும் மீண்டும் நீங்கள் ஊடகத்தில் சிலர் பயன்படுத்தும் நடையைப் பற்றிக் கூறுகின்றீர்கள். இது கலைக்களஞ்சியம் என்பதனையும், வேறு சிலர் நல்ல தமிழிலேயே (இணையத்திலும், அச்சு ஊடகங்களிலும், மக்கள் தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சி நிகழ்வுகளிலும்) எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதனை மறக்கின்றீர்கள். கலைக்களஞ்சியம் சீரிய எழுத்து இலக்கியம், அதில் நல்ல கட்டுரைத்தமிழில் எழுதுதல் வேண்டும் (இதனைப் பலமுறை எடுத்துக் கூறியாயிற்று). ஊடகத்தையும் பேச்சு மொழியையும் மீண்டும் கொண்டு வராதீர்கள். மரத்தைத்தான் வெட்டுகிறேன், காட்டை அழிக்கவில்லை என்னும் உங்கள் "பகுத்தறிவையும்" கொண்டு வராதீர்கள். --செல்வா 14:36, 5 ஜூலை 2009 (UTC)

இன்னும் சில தற்கால வழக்குகள் - மயூரநாதன் குறிப்பைப் பற்றி

http://www.youtube.com/watch?v=PJIz8qX6ZBQ&feature=related நொடி 59-60 http://www.youtube.com/watch?v=go9l54yo1SY&feature=related நொடி 18-19 http://www.youtube.com/watch?v=CNOW4fEuARQ&feature=related நொடி 1.27-1.29 http://www.youtube.com/watch?v=KttxZFDxN4M நொடி2.43 --Ginger 10:56, 5 ஜூலை 2009 (UTC)

மேலே நான் கூறியதைப் பார்க்கவும்.

இலக்கணம் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி)[தொகு]

தொல், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் தமிழ் மொழியின் எழுத்து, சொல் என்பவற்றை தெளிவாக வரையறை செய்கின்றன. இதுவரைக்கு எந்த ஒரு தமிழ் மொழி அமைப்போ, பெரும்பான்மைத் தமிழ் அறிஞர்களோ இந்த நூல்களை ஓரங்கட்டு என்று கூறவில்லை. இந்த நூல்களை ஓரங்கட்டி விட்டு வசைச்சொற்கள், தமிங்கிலம், சமசுகிருதம் மலிந்து இருக்கும் பல ஊடங்களை மேற்கோள்காட்டுவது நியாமற்றது. தமிழ் மொழியின் உயிரைக் கொல்வதற்கு சமன். மொழி தொடர்ந்து மாறும் என்பது உண்மை. ஆனால் அந்த மாற்றம் நல்ல நோக்கில் நிகழ வேண்டும். ஒரு மொழியின் தனித்தன்மையை, ஆற்றலை சிதைத்து ஏற்படும் மாற்றம் தேவையற்றது. --Natkeeran 13:03, 5 ஜூலை 2009 (UTC)

மேலும் தற்காலத் தமிழ்[தொகு]

உதாரணமாக இன்றைய தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள்

http://www.dailythanthi.com/article.asp?NewsID=498597&disdate=7/5/2009

வெஸ்ட் இண்டீஸ், ஓவர், திரில்,பேட்டிங், ஸ்கோர், சூப்பர், டென்ஷன், ஹாட்ரிக், தூர்தர்ஷன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மக்களுக்கு தகவல் கொடுக்கிறது. சபாஷ் தினத்தந்தி. தமிழ் விக்கியில் தான் இந்த ஒவ்வொரு பயனுக்கும் பலவேறு ஆட்சேபணைகளை எழுப்பிக் கொண்டிருப்பார்கள்--Ginger 12:24, 5 ஜூலை 2009 (UTC)


இன்றைய இணையத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு காம இலக்கியம்/படங்கள் மலந்து கிடைக்கிறது. அதற்க்காக அதை பெரும்பான்மையாக கலைக்களஞ்சியத்தில் தர முடியுமா? --Natkeeran 13:09, 5 ஜூலை 2009 (UTC)

நீங்கள் தற்கால மொழி வழக்கையும், கட்டுரைகளின் உட்கருத்தையும் குழப்பியுள்ளீர்கள். `காம இலக்கியம்` என்ற தலைப்பில் ஒரு விக்கிபீடியா கட்டுரை தேவை. உதாரணமாக `சரித்திர நாவல்கள்` என ஒரு கட்டுரை மையக் கருத்து இருக்கும் போது, தமிழிலும், மற்ற மொழிகளிலும் `காம இலக்கியங்கள்` என்ன என்பதை பற்றி சொல்லும் கட்டுரை மிக அவசியம். காம இலக்கியம் காதன் இலக்கியத்திலிருந்து மாறு படும். காம இலக்கியம் மட்டுமல்ல, காம சினிமாக்கள் பற்றியும் சில கட்டுரைகள் அவசியம். அது மட்டுமல்ல, காம சினிமாக்களில் நடிக்கும் நடிக, நடிகையர் பற்றியும் பல அவசியங்கள் தேவை. அப்படித்தான் கட்டுரைகள் வளரும், அறிவு வளரும். உதாரணமாக

சினிமா வகைகள் http://en.wikipedia.org/wiki/Category:Film_genres

காமப் படங்கள் (போர்நோ) http://en.wikipedia.org/wiki/Pornographic_film

காமப் பட ஆக்க நிலையங்கள் http://en.wikipedia.org/wiki/List_of_pornographic_movie_studios

காமப் பட நடிகைகள் http://en.wikipedia.org/wiki/List_of_female_pornographic_actresses_by_decade

இதில் சிலவற்றையாவது , தமிழில் - உங்களுக்கு பிடித்த தொல்காப்பிய தமிழில் - மொழிபெயற்தீர்களானால், தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும். முன் நன்றிகள்--Ginger 13:48, 5 ஜூலை 2009 (UTC)

ஒன்று ஒரு தளத்தில் பெரும்பான்மையாக இருப்பதால், அது மற்ற எல்லா தளங்க்களிலும் சரிப்பட்டு வராது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என பல துறைகள் கலைக்களஞ்சியத்தில் முக்கியம். காமப் படங்கள் இணையத்தில் பெரும்பான்மை என்பதற்கான இங்கும் அவை பெரும்பான்மையாக இருக்க வேண்டியதில்லை. அதெப்பட்டி காம இல்க்கியம் என்று போட்டு எல்லாம் இணைப்புக்களையும் திரைப்படங்கள் பற்றி தந்திருக்கிறீர்கள். வாழ்வை திரைப்படம் என்ற ஒரு குறும் பார்வையில் சுருக்காதீர். இந்தப் பார்வை சமூகத்துக்கு கேடானது.

--Natkeeran 14:21, 5 ஜூலை 2009 (UTC)

மேற்கொண்ட கட்டுரைகளும் மொழி பெயற்க்கப்பட வேண்டியவைதான். --Ginger 14:46, 5 ஜூலை 2009 (UTC)