அறிவியல் எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் எழுத்து (Science journalism) என்பது அறிவியல் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் பகிர்கிறது. இது சமூக விழிப்புணர்வுக்கு அவசியம்.

சமயம், இலக்கியம், கலைகள் போன்ற அக இயல்கள் போல் அல்லாமல் அறிவியல் ஒரு புறவய இயல். அதனால் அறிவியல் எழுத்து நிரூபிக்கப்பட்ட தகவல்களுக்கு முதன்மை தருகிறது. அதேவேளை அறிவியல் கருத்து வேறுபாடுகளை தகுந்தவாறு விளக்க முற்படுகிறது.

அறிவியல் துறைசார் கலைச்சொற்களும் கருத்துருக்களும் மிகுந்த துறை. அறிவியல் எழுத்து அவற்றை இயன்றவரை எளிமைப்படுத்தி பகிர முனைகிறது. அத் தகவல்களை பொது மக்களின் அன்றாட வாழ்வுடன் பொருத்தி பகிர முனைகிறது.

தமிழில் அறிவியல் எழுத்து[தொகு]

தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இன்ப இலக்கியமே. சீரிய முறையில் தகவல்களைப் பகிரும் உரைநடை 20ஆம் நூற்றாண்டிலேயே விரிவு பெற்றது. பொது மக்களைப் பெருமளவில் சென்றடைந்த தமிழ் அறிவியல் எழுத்துக்கு முன்னோடியாக சுஜாதா கருதப்படுகிறார்.

ஒப்பீட்டளவில் தமிழ் ஊடகங்கள் திரைப்படம், சோதிடம், ராசி பலன், அரசியல் போன்ற துறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை அறிவியலுக்குத் தருவதில்லை.

அறிவியல் எழுத்து அணுகுமுறை[தொகு]

தேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (UK NHS)[1][தொகு]

  • எங்கிருந்து இந்த செய்தி வருகிறது?
  • இது எந்த வகை ஆய்வு?
  • இந்த ஆய்வின் முடிவுகள் எவை?
  • இந்த முடிவுகளை முன்வைத்து ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எவை?
  • தேசிய நல சேவை (ஐக்கிய இராச்சியம்) (NHS) இந்த ஆய்வைப் பற்றி என்ன சொல்கிறது?

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. UK National Health Service Science News - (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_எழுத்து&oldid=2741978" இருந்து மீள்விக்கப்பட்டது