விக்கி ராய்
விக்கி ராய் (Vicky Roy) இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள புருலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆவார். [1] [2] 1987 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.
வாழ்க்கை
[தொகு]11 வயதில், தவறான தாத்தாவிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ராய் வீட்டை விட்டு புது டெல்லிக்கு ஓடிவந்தார். [3] ஒரு மருத்துவர் இவரை சலாம் பாலக் என்ற ஓர் அரசு சாரா நிறுவனத்திற்கு பரிந்துரைக்கும் வரை, ராய் புது தில்லி இரயில் நிலையத்தில் பல மாதங்கள் பாத்திரங்கள் கழுவியும் குப்பை எடுப்பவராகவும் பணியாற்றினார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், ராய் ஒரு பிரித்தானிய புகைப்படக் கலைஞரைச் சந்தித்தார். அவருடைய புகைப்படக் கலை ராய்க்கு உத்வேகம் அளித்தது. 18 வயதில், தன்னார்வ தொண்டு நிறுவனம் அவருக்கு ஒரு புகைப்படக் கருவியை வழங்கியது. அனய் மானிடம் பயிற்சி பெற்று விக்கி ராய் அங்கிருந்து வெளியேறினார். [1] [2]
2007 ஆம் ஆண்டில் ராய் இசுட்ரீட் டீரீம்சு என்ற முதல் தனி புகைப்படக் கண்காட்சியை நடத்தினார். புது தில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் இக்கண்காட்சி நடைபெற்றது. [1] 2013 ஆம் ஆண்டில் தில்லி புகைப்பட விழாவின் போது, நாசர் அறக்கட்டளை இவரது முதல் தனிவரைவு நூலான ஓம் இசுட்ரீட் ஓம் என்ற நூலை வெளியிட்டது. 2017 ஆம் ஆண்டில், இவரது முதல் தனி நிகழ்ச்சி வதேரா கலை காட்சியகத்தில் திசு இசுகேர்டு லேண்ட்டு: நியூ மவுண்டன்சுகேப்சு என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. [2] 2018 ஆம் ஆண்டில், இவர் ஊசுடன் புகைப்படத் திருவிழாவிலும் கொச்சி முசிரீசு என்ற பன்னாட்டு புகைப்படக் கண்காட்சியிலும் ஒரு பகுதியாக இருந்தார். [2]
2014 ஆம் ஆண்டில் இவருக்கு மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தின் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. [4] 2016 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் ஆசியா "30 வயதுக்குட்பட்ட 30" பட்டியலில் விக்கி ராய் இடம்பெற்றார். [3] [5] 2019 ஆம் ஆண்டில், ஆசியா சொசைட்டி டெக்சாசு மையத்தில் விக்கி ராயின் இசுக்ராப்பிங் தி இசுக்கை என்ற புகைப்படங்களுடன் அறிமுகமானார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Vicky Roy Shares Journey From Being A Ragpicker To An Internationally Acclaimed Photographer". indiatimes.com (in ஆங்கிலம்). 2019-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 BWW News Desk. "Asia Society Texas Center Opens New Art Exhibition SCRAPING THE SKY: PHOTOGRAPHS BY VICKY ROY". BroadwayWorld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ 3.0 3.1 "From Homeless To Forbes Under 30 List, This Indian Photographer's Story Needs A Film Of Its Own". www.mensxp.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ "Homeless In Delhi To Forbes Under 30: Photographer's Post Is Viral". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ "Rags to Forbes: This photographer once survived on people's leftover food". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.