தில்லி புகைப்படத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகைப்பட திருவிழா - தில்லி
வகைபுகைப்பட கண்காட்சி
நாட்கள்அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்
காலப்பகுதிஇரு ஆண்டுகளுக்கு ஒருமுறை
அமைவிடம்(கள்)இந்திய வாழ்விட மையம் (2011, 2013) , இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) 2015
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2011, 2013 மற்றும் 2015 ஆண்டுகளில்
நிறுவனர்நாசர் அறக்கட்டளை
பரப்புஉலகமெங்கும்
நாசர் அறக்கட்டளை
மக்கள்பிரசாந்த் பன்ஜியார், தினேஷ் கன்னா
வலைத்தளம்
www.delhiphotofestival.com

நாசர் அறக்கட்டளையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட தில்லி புகைப்படத் திருவிழா இந்திய புகைப்படக் கலையைக் காட்சிப்படுத்துவதற்கும் அதன் பயிற்சியாளர்களிடையே சமூக உணர்வை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக விளங்கும் வகையில் நடந்த புகைப்படத் திருவிழாவாகும். நாசர் அறக்கட்டளையின் இணை நிறுவனர்களான புகைப்படக் கலைஞர்கள் பிரசாந்த் பன்ஜியார் மற்றும் தினேஷ் கன்னா ஆகியோரின் முயற்சியால் 2011, 2013 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டது.

விழாவின் முதல் இரண்டு நிகழ்வுகள் இந்திய வாழ்விட மைய நிறுவனத்தாரின் பங்களிப்புடன் இந்திய வாழ்விட மையத்திலும், மூன்றாவது நிகழ்வு அவர்களின் பங்களிப்பு இல்லாமலே இந்திரா காந்தி தேசிய கலை மையத்திலும் (IGNCA) நடைபெற்றன. இந்தியாவில் நடைபெற்ற பெரிய அளவிலான புகைப்படத் திருவிழாக்களில் ஒன்றான இதில், நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்புடன்,புகைப்படக் கலை ஆர்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள பார்வையாளர்களுடன் நடைபெற்றது.

முதல் புகைப்பட விழா - 2011[தொகு]

முதலவது தில்லி புகைப்பட விழா 2011 ம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 28 வரை இந்திய வாழ்விட மையத்தில் (IHC) நடைபெற்றது. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நாசர் அறக்கட்டளையின் இணை நிறுவனர்களுமான பிரசாந்த் பன்ஜியார் மற்றும் தினேஷ் கன்னா ஆகியோரால் ஏற்பாடு[1] செய்யப்பட்ட இந்த விழாவின், மையக் கருவாக '"உறவு, உறவை வலியுறுத்துதல் மற்றும் உள்நோக்கிய பார்வையின் இயக்கம்"' என்பதை அடிப்படையாக கொண்டது. சுமார் இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த முப்பத்தைந்து இந்திய மற்றும் முப்பத்தொன்பது சர்வதேச புகைப்படத் தொகுப்புகளை உள்ளடக்கி நடைபெற்றது. பிரபுத்த தாஸ்குப்தா , ரகு ராய், தயாநிதா சிங் [2] போன்றோரின் அனுபவ உரைகள், விவாதங்கள்மற்றும் புகைப்பட பட்டறைகளைத் தவிர,மூத்த புகைப்படக் கலைஞரான ரகு ராய், மற்றும் மகாத்மா காந்தியின் மருமகனும், தனிப்புகைப்படாளருமான கனு காந்தியின் தனிப்பட்ட புகைப்பட தொகுப்புகளும் இதில் இடம்பெற்றன.[3]. மேலும். கேதகி ஷெத், ஸ்வபன் பரேக், ராம் ரஹ்மான், பாப்லோ பார்தோலோமிவ் , சாம் ஹாரிஸ், ஷாஹிதுல் ஆலம், சொஹ்ராப் ஹுரா , விதுரா ஜங் பகதூர் மற்றும் நிதின் உபாத்யே போன்ற புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களும் கலந்து கொண்டனர்.[4]

இரண்டாம் புகைப்பட விழா - 2013[தொகு]

இந்திய வாழ்விட மைய வளாகத்தில் உள்ள பல்வேறு உட்புற மற்றும் வெளிப்புற கண்காட்சி இடங்களில் திருவிழா நடைபெற்றது.

இரண்டாவது புகைப்படவிழா 2013 ம் ஆண்டு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெற்றது. 2012 இல் இறந்த புகைப்படக் கலைஞர் பிரபுத்தா தாஸ்குப்தாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக , இரண்டாவது தில்லி புகைப்படத் திருவிழாவின் கருப்பொருளாக "'கருணை(GRACE)'" எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற புகைப்பட விழாவின் முதலாவது நிகழ்வில் அவர் தனது பேச்சில் குறுப்பிட்ட, "'கருணையால் ஒன்றாக இணைக்கப்பட்ட நீண்ட படங்களை நான் வைத்திருக்க விரும்புகிறேன், ஏனென்றால் கருணை என்பது நான் தேடும் வரையறுக்க முடியாத, பகுத்தறிவற்ற, நேரியல் அல்லாத வார்த்தை'" [5][6] என்ற கருப்பொருளின் அடிப்படையில் உலகளவில் சமர்ப்பிக்கப்பட்ட 2,349களில் இருந்து 41 புகைப்படங்கள் மற்றும் 50 டிஜிட்டல் கண்காட்சி படங்கள் இதே தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இவ்விழாவில் அவீக் சென், சுமித் தயாள், முனெம் வாசிஃப் போன்றோரின் புகைப்பட பயிற்சி பட்டறைகள் மற்றும் ரகு ராய்,ராம் ரஹ்மான், சூனி தாராபோரேவாலா, விக்கி ராய், சச்சா கோல்ட்பர்க், சுமித் தயாள் மற்றும் உர்ஸ் ஸ்டாஹெல் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களின் பேச்சுக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவையும் நடத்தப்பட்டது . ]].[7]

அதைத் தவிர, நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் (என்ஜிஎம்ஏ, டெல்லி), அலையன்ஸ் ஃபிரான்சைஸ் தில்லி, கேலரி ரோமன் ரோலண்ட், போட்டோயிங்க், ஆர்ட் ஹெரிடேஜ் மற்றும் ஜப்பான் பவுண்டேஷன் உள்ளிட்ட புகைப்பட நிறுவனங்கள் தங்களின் தனிப்பட்ட கண்காட்சியை அவரவர்களின் இடங்களிலேயே இந்த திருவிழா நடைபெற்ற நாட்களில் இணைந்து நடத்தின.[7]

மூன்றாம் புகைப்பட விழா - 2015[தொகு]

2015 ஆம் ஆண்டுக்கான புகைப்பட விழாவானது இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் (IGNCA) 2015 ம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 8, வரை நடைபெற்றது. மூன்றாவது பதிப்பின் கருப்பொருள் ஆசைப்படு(ASPIRE) என்பதாகும்.

 1. 2015ம் ஆண்டு விழவிற்க்கான திட்டத்தில் பின்வருவன அடங்கும்:
 • முதன்மை இடமான ஐஜிஎன்சிஏவில் டிஜிட்டல் கண்காட்சிகள், திரைப்படங்கள் மற்றும் மல்டிமீடியாவின் அச்சு கண்காட்சிகள் மற்றும் திரையிடல்;
 • நகரம் முழுவதும் ஒரு வலுவான மற்றும் துடிப்பான பார்ட்னர் கேலரி திட்டம்;
 • முன்னணி சர்வதேச மற்றும் தேசிய புகைப்பட பயிற்சியாளர்களால் கலைஞர் பேச்சு;

"கருத்தரங்குகள், விவாதங்கள், நிகழ்ச்சிகள், நேரடி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள்

 • குழந்தைகள், பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பயிலரங்குகள் மூலம் ஒரு கல்வி மேம்பாட்டுத் திட்டம்
 • பிரகாசமான மற்றும் நம்பிக்கைக்குரிய தொழில்முறை புகைப்பட பயிற்சியாளர்களுக்கான முதன்மை வகுப்பு

2015ம் ஆண்டில் கிஷோர் பரேக், ரகு ராய், கரன் வைட், சர்க்கர் ப்ரோடிக், வினித் குப்தா, ரோனி சென் , ஏஞ்சலிகா தாஸ், ஆலிவியர் குல்மேன், டாரியோ போசியோ மற்றும் கிளாஸ் பிச்லர் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் பங்குபெற்று கண்காட்சியில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். மேலும். இத்திருவிழாவில் 'மாஸ்டர் கிளாஸ்' என்ற சிறப்பு நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது. இதில் புகைப்படக் கலைஞர்களான ஒலிவியா ஆர்தர் மற்றும் பிலிப் எபிலிங் ஆகியோரின் மூன்று நாள் பட்டறை மற்றும் டேவிட் காம்பானியின் முக்கிய விரிவுரை ஆகியவை அடங்கும்.

புகைப்பட திருவிழாவின் நான்காவது நிகழ்வு 2017ம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் மேற்கொண்டு தொடராமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Images at Delhi Photo Festival speak out". India Today. 21 October 2011. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Photo fiction". Deccan Herald. 5 Feb 2012. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.
 3. "The New Intimate". 8. Tehelka. 1 October 2011. Archived from the original on 2013-09-21. https://web.archive.org/web/20130921061200/http://archive.tehelka.com/story_main50.asp?filename=hu011011New.asp. பார்த்த நாள்: 2013-09-21. 
 4. "Eyes Wide Open". Indian Express. 16 October 2011. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.
 5. "2013 theme". 21 September 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-18 அன்று பார்க்கப்பட்டது.
 6. Khurana, Tushar. "Making the Frame". The Hindu. 2013-09-18 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 "Photo Essay: Amazing grace". Livemint. 20 September 2013. 2013-09-21 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]