உள்ளடக்கத்துக்குச் செல்

வாழை ஆராய்ச்சி நிலையம், கண்ணாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழை ஆராய்ச்சி நிலையம், கண்ணாரா (Banana Research Station, Kannara) இந்தியாவின் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாராவில் இயங்கிவரும் வாழை ஆராய்ச்சி நிலையமாகும். கேரள விவசாயப் பல்கலைக்கழகம், மத்திய மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.

வாழை மற்றும் அன்னாசிப் பழங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்நிலையம் 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு திட்டத்துடன் இணைக்கப்பட்டு வாழை ஆராய்ச்சி நிலையச் செயல்பாடுகள் 1970 ஆம் ஆண்டுவரை நடைபெற்றன. 1972 இல் கேரள விவசாய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பிறகு இச்செயல்பாடுகள் முழுவதையும் பல்கலைக்கழகம் எடுத்துக் கொண்டது.

2011 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் திசு வளர்ப்பு முறையில் வாழைப் பண்ணை அமைத்து வெற்றி கண்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]